Free Space

வட்டி இருப்பதால் தான் நான் அரசு தரும் வீட்டுக் கடன்களை பெறுவதற்கு முஸ்லிம்களை ஊக்குவிப்பதில்லை. h



(மொஹொமட் ஆஸிக் - ஜே. எம்.ஹபீஸ் -

(முன்னாள் ஜனாதிபதி  ரனசிங்க பிரேமதாசவின் காலத்தைப் போன்று வரிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பாரிய வேலைத் திட்டங்களை தற்போதைய அரசு மேற்கொண்டுள்ளதாக தபால் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியை சேர்ந்த வரிய குடும்ப்ஙகளுக்கு வீடுகளை  நிர்மானிப்பதற்கான சீமெந்து மற்றும் கடன் உதவிகளை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வில்  இன்று 08 ம் திகதி மாலை கலந்த கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

அக்குறணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் மேலும் உரையாற்றிய அமைச்சர் இவ்வாறும் தெரிவித்தார்.
 இந் நாட்டில் யார் எப்படி என்ன சொன்னாலும் வரிய மக்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக பாரிய திட்டங்களை ஆரம்பித்தவர் முன்னாள ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவாகும். அத் திட்டத்தின் ஜனசவிய திட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. அன்றைய ஜனசவிய திட்டத்தின் மூலம் பல தரப்பட்ட வரிய மக்கள் தமது பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கையில் ஈடு பட்டிருந்தனர்.

அத் திட்டம் பிந்திய காலங்கில் சமுர்த்தி, திவி நெகும ( வாழ்க்கை எழுச்சி) என பல பெயர்களால்   அழைக்கப்பட்டாலும் ஆரம்பம் ஜனசவியாகும். அதே போன்று வீடற்றவர்களுக்கு வீடுகளை நிர்மானிக்கும் பனிகளையும் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அன்று அவர் அரம்பித்த அத் திட்டம் இன்று அவரது மகனான சஜித் பிரேமதாச அவர்கள் முன்னெடுத்துச் செல்கின்றார்.

 அதன் மூலம் வரிய குடும்பங்களுக்கு புதிதாக வீடுகளை நிர்மானித்துக் கொள்வதற்காகவும், நிர்மான பனிகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் உதவிகள் செய்யப்படுகினறன. அதே நேரம் வீடமைப்புத் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் கடன்களை பெற்றுக் கொள்வதில் ஒரு பிரச்சினை உண்டு. இக் கடன் திட்டத்துடன் வட்டி சம்பந்தப்படுகின்றது.  முஸ்லிம்களுக்கு வட்டியுடன் தொடர்புடைய விடயங்களில் தொடர்பு படுவதற்கு இஸ்லாத்தில் இடம் இல்லை.

எனவே நான் முஸ்லிம்களுக்கு இக் கடனை பெற்றக் கொள்ள ஊக்குவிப்பதில்லை. என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

 

வட்டி இருப்பதால் தான் நான் அரசு தரும் வீட்டுக் கடன்களை பெறுவதற்கு முஸ்லிம்களை ஊக்குவிப்பதில்லை. h வட்டி இருப்பதால் தான் நான் அரசு தரும் வீட்டுக் கடன்களை பெறுவதற்கு முஸ்லிம்களை ஊக்குவிப்பதில்லை. h Reviewed by Madawala News on 7/08/2016 11:59:00 PM Rating: 5