ஹஜ் முகவர்களுக்கு செக் வைத்தது, முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளம். Hj

ARA.Fareel

இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்ளும் ஹஜ் முக­வர்கள் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன் கரு­தாது தொடர்ந்தும் சுய இலாப நோக்­கோடு செயற்­பட்டால் எதிர்­கா­லத்தில் ஹஜ் பயண ஏற்­பா­டு­களை முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளமே மேற்­கொள்ளும். இது தொடர்பில் ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கி­றது என முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.
.

முஸ்­லிம்­களின் புனித கட­மை­யான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்ந்து பல வரு­டங்­க­ளாக நீதி­மன்­றத்தின் மூலமே தீர்­மா­னிக்­கப்­பட்டு வரு­வதால் திணைக்­களம் ஹஜ் ஏற்­பா­டு­களைப் பொறுப்­பேற்றுச் செய்­வது தொடர்பில் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதனால் இது தொடர்பில் ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கி­றது எனவும் அமைச்சர் ஹலீம் கூறினார்.
.

இவ்­வ­ரு­டத்­திற்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் விளக்கம் கோரிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
.

அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில், கடந்த வரு­டத்தை விடவும் இவ்­வ­ருடம் ஹஜ் ஏற்­பா­டு­களில் சிறந்த வழி­மு­றை­யொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. உயர் நீதி­மன்றம் ஏற்­க­னவே வழங்­கி­யி­ருந்த வழி­மு­றை­களின் (Guide Lines) படியே இந்த புதிய முறை அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த புதிய முறையின் கீழ் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் பெரிதும் நன்­மைக்­குள்­ளா­கினர்.

ஹஜ் கட்­ட­ணத்தில் பாரிய வீழ்ச்­சி­யேற்­பட்­டது.
.

ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தமக்கு விருப்­ப­மான முக­வர்­களை தெரிவு செய்து கொள்ளும் சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டது. கூடிய கட்­ட­ணங்கள் அற­விடும் முகவர் நிலை­யங்­க­ளையும் கடந்த காலங்­களில் சிறந்த சேவை வழங்­காத முகவர் நிலை­யங்­க­ளையும் மக்கள் நிரா­க­ரித்­தனர். இதன்­மூலம் பல முகவர் நிலை­யங்கள் படிப்­பி­னையைப் பெற்று தமது தவ­று­களை திருத்­திக்­கொள்ளும் வாய்ப்பு ஏற்­பட்­டது.
.

என்­றாலும் சில முகவர் நிலை­யங்கள் புதிய கோட்டா முறை­யினால் தாம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், கடந்த வருடம் போன்று கோட்­டாவை பகிர்ந்­த­ளிக்க உத்­த­ர­விடும் படி உயர் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­தனர். இதே­வேளை புதிய முறையே தமக்கு பய­னுள்­ள­தெனக் கூறி 10 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் இடைக்­கால மனு­வொன்­றி­னையும் தாக்கல் செய்­தி­ருந்­தனர்.
.

வழக்­கினை விசா­ரித்த உயர் நீதி­மன்றம் புதிய முறையை இவ்­வ­ருடம் கையாள்­வ­தற்கு உத்­த­ர­விட்­ட­துடன் வழக்­கினை அடுத்த வரு­டத்­திற்கு ஒத்­தி­வைத்­துள்­ளது.
.
முஸ்லிம் சமய விவ­கா­ரத்­துக்­கான அமைச்சு -எது­வித தலை­யீ­டு­க­ளுக்கும் இட­ம­ளிக்­காது நீதி­யான முறை­யிலே கோட்டா முறையை இவ்­வ­ருடம் கையாண்­டது.
.

தொடர்ந்தும் ஹஜ் விவ­காரம் நீதி­மன்ற படிகள் ஏறி இறங்­கு­வதை அமைச்சு விரும்­ப­வில்லை. எனவே ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்­பான ஆலோ­ச­னை­களை சமூ­கத்தின் பல தரப்­பி­ன­ரி­டமும் பெற்று அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொள்வதுடன் சட்டமாக இயற்றிக்கொள்வதற்கான திட்டங்கள் பற்றி ஆராய்ந்து வருகிறது.
.

இவ்வாறான ஏற்பாடுகளின் போது ஹஜ் முகவர்களின் செயற்பாடுகளுக்கான  மாற்றுத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்படும் என்றார்.

ஹஜ் முகவர்களுக்கு செக் வைத்தது, முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளம். Hj ஹஜ் முகவர்களுக்கு செக் வைத்தது, முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளம். Hj Reviewed by Madawala News on 7/15/2016 01:19:00 PM Rating: 5