இரத்தம் உறைந்து நின்றேன் i



- பஷீர் அலி-

வெள்ள அனர்த்தம் நிகழ்ந்து ஊரே அல்லோல கல்லோலத்திலிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க ஏதாவது செய்தாக வேண்டும்.துடிப்பான இளைஞர் கூட்டமொன்று தயாராகிறது. உடநடியாக தகவல் திரட்டும் பணி நடைபெற வேண்டும். முடிவை செயற்படுத்த அந்த இளைஞர் கூட்டம் வீடுவீடாய் "நீந்தி இறங்குகிறது"! அந்தக் கூட்டத்தில் ஆர்வத்துடன் இயங்கும் ஓர் வாட்டசாட்டமான இளைஞனைக் காணுகிறேன். ஏற்கனவே புன்னகைக்கு மட்டும் சொந்தமான அவன் நண்பனாகிறான். ஒவ்வொரு நாளும் நண்பன் துடிப்பாகப் பணியாற்றுகிறான்.

ஒரு சந்தர்ப்பத்தில் நிவாரணமாக வந்த அரிசி மூட்டைகளை இறக்கி அடுக்கும் பணியில் ஈடுபடுகிறோம். ஆனால் நண்பன் மட்டும் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் சும்மா அப்படி ஒருபோதும் நிற்கமாட்டான். ஏதோ ஒன்று இருக்கிறது. நெருங்கி விபரம் கேட்டேன்; சொன்னான்; என் இரத்தம் உறைந்து போனது!!
அவனது இதய வால்வுகள் செயலிழந்து அவசர சத்திர சிகிச்சைக்காக வைத்தியரின் நாள் குறிப்புக்குக் காத்திருக்கிறான்!

-உயிரை ஒரு பைக்குள் போட்டு எடுத்துக் கொண்டா இந்த இளைஞன் சமூகத்துக்காய் ஏறி இறங்கினான்??
-சிறு வியாபாரம் செய்துவந்த தனது தந்தையின் கடை முற்றுமுழுதாகவே வெள்ளத்துக்கு இரையாகி குடும்பமே நடுவீதியில் நிற்கும்போதே வீட்டை ஒருபக்கம் வைத்துவிட்டு ஊரைத் தூக்கிவிட இவனால் எப்படி முடிகிறது!??
....
டாக்டரின் கடைசி ரிப்போர்ட், இன்னும் இரு வாரத்துக்குள் அவசரமாக சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டும்; அதற்காக 10 இலட்சம் ரூபாய் பணத்தைத் திரட்ட வேண்டும்... இல்லையேல்,...!

வார்தை முட்டுகிறது.

-சமூகத்தைத் தூக்கிவிட துடிக்கும் இந்த இளைஞனின் உயிரைத் தூக்கிவிட உங்களால் ஏதாவது செய்ய முடியும்!
-ரமழான் தந்த ஈகை உள்ளங்களால் கொஞ்சம் இறங்கி வாருங்கள்!
-"என் நண்பர்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள் நம்பிக்கையோடு காத்திருங்கள்" என்று தோள் தட்டி சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்!
-துஆ செய்யுங்கள் முடியுமான நிதி உதவியை வழங்குங்கள்- ஓர் உயிர்காத்த நன்மைதர அல்லாஹ் போதுமானவன்.

தொடர்புகளுக்கு:
பஷீர் அலி- 0774 418 518
சஃப்வான்- 0755 015 248
ஷபீர்- 0772 523 945

Bank details
A.R.M. MUFARIS
8147013745
COMMERCIAL BANK

BIYAGAMA:

இரத்தம் உறைந்து நின்றேன் i இரத்தம் உறைந்து நின்றேன் i Reviewed by Madawala News on 7/08/2016 08:55:00 AM Rating: 5