Free Space

அக்குரணையில் வைத்து இ.போ.ச பஸ் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு பிணை. i



(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாத்தளை வீதியில் பயணித்த இலங்கை போக்குவருத்துச் சபையின் மாத்தளை டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்றின் நடத்துனர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை அலவத்துகாடை பொலீஸார் நேற்று 13 கைது செய்துள்ளதுள்ளனர்.

கடந்த 11 ம் திகதி அக்குரணை நகரில் வைத்து மோட்டார் சைக்களில் வந்துள்ள இச்சந்தேக நபருக்கும் பஸ் வண்டியின் நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன் அது கைகலப்பாக மாறி உள்ளது.


இக் தாக்குதல் காரணமாக காயமடைந்த பஸ் வண்டியின் நடத்துனர் வைத்திய சாலையிள் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை பெற்று வரும் நிலையில் நேற்று 13 ம் திகதி பொலீஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்றே 13 ம் திகதி கண்டி மேலதிக நீதவான் இந்திக்க அத்தநாயக்க முன் ஆஜர் செய்ப்பட்ட போது ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பினை வழங்கப்பட்டுள்ளது.

அலவத்துகொடைபொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.

அக்குரணையில் வைத்து இ.போ.ச பஸ் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு பிணை. i அக்குரணையில் வைத்து இ.போ.ச பஸ் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு பிணை. i Reviewed by Madawala News on 7/15/2016 02:08:00 PM Rating: 5