குவைத்தில் விபத்துக்குள்ளாகி அங்கவீனமான மடவளை, நாப்பான ரமீஸ் வீட்டுக்கு சென்று உதவிய அமைச்சர் தலதா அத்துகோரள. i



கண்டி, மடவளை பசார் நாப்பான பகுதியை சேர்ந்தவர் எம்.ஆர்.எம் ரமீஸ். இவர் குவைட் நாட்டில் சாரதியாக கடமையாற்றும் போது விபத்தொன்றில் கால்களின் செயற்பாட்டை இழந்தார்.

அங்கவீனமானஇவருக்கு அதிநவீன நோயாளர் கட்டில் ஒன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று  ரமீஸின் வீட்டில் வைத்து  நேற்றுஅன்பளிப்புச் செய்துள்ளார்.

இருந்தாலும் 15 வருடம் வெளிநாட்டில் வேலை செய்து வந்த சகோ. ரமீஸ்  கடந்த 2015ஆம் ஆண்டு குவைட் நாட்டில் இடம்பெற்ற விபத்தொன்றில் அங்கவீனமாக நேர்ந்தது.

இவரின்  ஆதரவற்ற நிலையை கருத்தில் கொண்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தொழிலாளர் நல நிதியிலிருந்து 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும், 1 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய் பெறுமதிவாய்ந்த அதிநவீன நோயாளர் கட்டில் ஒன்றையும் வழங்க மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமையவே இந்த அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது

 2011 முதல் ரமீஸ் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவை தொடர்ந்தும் நீடிக்காதமையால் அவருக்கு அரச இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.







குவைத்தில் விபத்துக்குள்ளாகி அங்கவீனமான மடவளை, நாப்பான ரமீஸ் வீட்டுக்கு சென்று உதவிய அமைச்சர் தலதா அத்துகோரள. i குவைத்தில் விபத்துக்குள்ளாகி அங்கவீனமான மடவளை, நாப்பான ரமீஸ் வீட்டுக்கு சென்று உதவிய அமைச்சர் தலதா அத்துகோரள. i Reviewed by Madawala News on 7/11/2016 11:56:00 AM Rating: 5