Accaddemy

இன்றைய பாதயாத்திரை பிரதேசங்களில் மழையுடனான காலநிலை. i



மஹிந்த ஆதரவு அணியினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு நோக்கிய பாதயாத்திரையின் இரண்டாம் நாள் சற்று முன்னர் மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியது.

நேற்றைய தினம் குறித்த பேரணி பேராதெனியவில் இருந்து மாவனல்லை கனேதென்ன பிரதேசம் வரையில் பேரணியாக சென்றது.

பாதயாத்திரை இன்றைய தினம் நெலும்தெனிய வரை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்துடன் அங்கு தற்போது மழையுடனான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் பாதயாத்திரையை ஆரம்பிப்பதற்காக அரசியல் பிரதிநிதிகள் உத்துவங்கந்த பிரதேசத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கபடுகிறது.

“மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளிலான இந்த பாதயாத்திரை ஒகஸ்ட் மாதம் 1ம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது


இன்றைய பாதயாத்திரை பிரதேசங்களில் மழையுடனான காலநிலை. i இன்றைய பாதயாத்திரை பிரதேசங்களில் மழையுடனான காலநிலை. i Reviewed by Madawala News on 7/29/2016 11:13:00 AM Rating: 5