Oceas

மஹிந்த ராஜபக்ஷ ஏன் பயப்பட வேண்டும்? i



யுத்த காலத்தில் காணாமல் போனவர்களை இராணுவத்தினர் கடத்திச் சென்றதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டாரா? அல்லது  இராணுவம் கடத்தல்களை மேற்கொண்டமையை மஹிந்த ராஜபக்ஷ அறிந்து வைத்துள்ளாரா? என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன கேள்வியெழுப்பினார்.

அவ்வாறு இல்லாவிடின் காணாமல் போனோர் பற்றி ஆராயும் நிரந்தர அலுவலகம் அமைக்கப்படவுள்ளமை  தொடர்பாக  மஹிந்த ராஜபக்ஷ ஏன் அச்சமடையவேண்டும்? எமது அரசாங்கம்  இந்த  அலுவலகத்தை அமைத்து காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை ஆராயும் என்றும்  அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ ஏன் பயப்பட வேண்டும்? i மஹிந்த ராஜபக்ஷ ஏன் பயப்பட வேண்டும்? i Reviewed by Madawala News on 7/21/2016 04:07:00 PM Rating: 5