Free Space

சிகரட் மது விலையை அதிகரிக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. i



மது­பானம் மற்றும் சிகரட் பாவ­னையை தடுப்­ப­தற்­காக நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள வரி அதி­க­ரிப்பு தொடர்­பான யோச­னைகள் பய­னுள்­ள­வை­யாகும் என அரச மருத்­துவ அதி­கா­ரிகள் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் அந்த சங்கம் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, தற்­போது நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள மது­பா­வ­னை­யற்ற சமூ­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் பாராட்­டப்­ப­டக்­கூ­டி­ய­வையாகும்.

கடந்த வாரத்தில் மது­பானம் மற்றும் சிகரட் பாவ­னையை தடுப்­ப­தற்­காக வரியை அதி­க­ரிக்க உத்­தே­சித்­துள்­ளமை மற்றும் பாட­சாலை மட்­டத்தில் மது­பா­வ­னையை குறைப்­ப­தற்­கென மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கைகள் வர­வேற்­கத்­தக்க விட­யங்­க­ளாகும்.

அத்­தோடு மக்கள் மத்­தியில் மது­பா­வ­னை­யற்ற சமூ­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அரச மருத்­துவ சங்கம் என்ற வகையில் எமது பூரண ஆத­ர­வினை வழங்­கு­வ­தற்கு தயா­ரா­க­வுள்ளோம்.
அண்­மையில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு விஜயம் மேற்­கொண்ட சுகா­தார அமைச்சர் தற்­போது இலங்­கையில் நடை­மு­றையில் உள்ள சிகரட் பக்­கற்­றுக்­களில் விழிப்­பு­ணர்­வூட்டல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­படல் மற்றும் வெற்­றுப்­பொ­தி­யிடல் தொடர்­பாக கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்தார்.

எனினும் தற்­போது சிகரட் பக்­கற்­று­களில் காணப்­படும் எச்­ச­ரிக்கை உருவம் தொடர்­பாக சட்ட ரீதி­யாக மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கைகள் வெற்றி பெற்­றுள்­ளன. இதனால் குறித்த சட்­டத்தை மாற்ற வேண்டும் என்றால் அவ்­வி­டயம் தொடர்­பாக விசேட நிபு­ணத்­துவம் பெற்ற நிபு­ணர்­களின் ஆய்வின் பின்னரே மேற்­கொள்­ளப்­பட வேண்டும். அவ்­வாறு முறை­யான செயற்­பா­டுகள் மற்றும் விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டால் மட்­டுமே மக்­களை முறை­யாக நல்­வ­ழிப்­ப­டுத்த முடியும்.

அத்­தோடு தொலைக்­காட்சி நாட­கங்கள் மற்றும் திரைப்­ப­டங்­களில் மது­பானம் மற்றும் சிகரட் பாவ­னையை தூண்டும் வகையில் மேற்­கொள்­ளப்­படும் போலி பிர­சா­ரங்கள் மற்றும் ஆபாச காட்­சிகள் என்­ப­ன­வற்றை வரை­ய­றை­யற்ற வகையில் இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களோடு தொடர்புபட்ட அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். தற்போது பாரியளவில் உருவெடுத்துள்ள போதைப்பொருள் மாபியாவைக் கட்டுப்படுத்த அனைத்து வழிவகைகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிகரட் மது விலையை அதிகரிக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. i சிகரட் மது விலையை அதிகரிக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. i Reviewed by Madawala News on 7/27/2016 11:06:00 AM Rating: 5