Yahya

அரசாங்கம் இந்தளவு அச்சம் கொண்டிருக்கின்றது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. iஎத்தனை தடைகள் வந்தாலும் பாதயாத்திரையை கொழும்பை நோக்கிகொண்டு செல்வேன். சவால்களை துணிவுடன் எதிர் கொள்ள
முடியாது பின்வாங்கும் பழக்கம் என்னிடம் இல்லை. ஆனால் அரசாங்கத்தின் அச்சம் என்னை வியக்க வைத்துள்ளது என்று முன் னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ நேற்று கொழும்பை நோக்கிய பாதயாத்திரையைஆரம்பித்து சூளுரைத்தார்.

கூட்டுஎதிர்க் கட்சியின் அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரை நேற்றுவியாழக்கிழமை பேராதனை சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு முன்னர் கெடபே விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ பாதயாத்திரையை ஆரம்பித்து வைத்தபின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

கூட்­டு­எதிர்கட்­சியின் கண்­டி­யி­லி­ருந்­து­ கொ­ழும்­பை­ நோக்­கி­ய­ பா­த­யாத்­தி­ரை­ நேற்­று­க்காலை பே­ரா­த­னை­ சந்­தி­யில் ஆ­ரம்­பித்து மாவனெல்லை வரை பயணித்தது. இதில் ஆயிரக்கணக்கான பொது எதிரணியின் ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்தனர். அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களையும் அவர்கள் எழுப்பியிருந்தனர்.

முன்னாள் ஜனா­தி­ப­தி ­ம­ஹிந்த ராஜ­பக்ஷ தலைமையிலான குழுவினர் கெட­பே­வி­கா­ரையில் வழி­பா­டு­களில் ஈடுப்­பட்­டதன் பின்னர் விகா­ரா­தி­ப­தி­யை­ சந்­தித்­து­ ஆ­சிர்­வாதம் பெற்றுக் கொண்டனர்.

இதன் போது இங்­கு­ பெ­ருந்­தொ­கை­யா­ன­ ஆ­த­ர­வா­ளர்கள் கூடி­யி­ருந்­த­மை­யினால் பொலிஸார் நீதி­மன்­றத்தின் உத­ர­வை ­மீ­றி­ கண்­டி­ ந­க­ர­ எல்­லைக்குள் கூடி­யி­ருந்தால் கடு­மை­யா­ன­ சட்­ட­ந­ட­வ­டிக்­கை­ எ­டுக்­கப்­படும் என ­ஒ­லி­பெ­ருக்­கியின் ஊடா­க­ அ­றி­வித்­தனர்.

இத­னை­ அ­டுத்­து­ கூட்­டு­ எதிர் கட்­சியின் உறுப்­பி­னர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்கள் பேரா­த­னை­ சந்­திக்­கு­ அ­ழைக்­கப்­பட்­டு­அங்­கி­ருந்­து­ கொ­ழும்­பை ­நோக்­கி­ய ­பாத­யாத்­தி­ரை­ ஆ­ரம்­பிக்­கப்­பட்­டது.

பாரா­ளு­மன்­ற­ உ­றுப்­பி­னர்களான விமல் வீர­வன்ச, டளஸ் அழ­கப்­பெ­ரும, கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல, நாமல் ராஜ­பக்ஷ , உத­ய­கம்­மன்­பில, பவித்­ரா­வன்­னி­யா­ராச்சி, மஹிந்­தா­னந்­த ­அளுத்­க­மகே, திலும் அமு­னு­கம,கீதா­கு­மா­ர­சிங்க, குமா­ர­வெல்­கம, சீ.பி.ரத்­நா­யக்க, ஜொன்ஸ்டன் பெர்­னா­ண­டடோ, பிர­சன்ன ரண­துங்­க­ மற்றும் ரோஹி­த­ அ­பே­கு­ண­வர்­த­ன­உள்­ளிட்ட கூட்­டு­எதிர் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் அனை­வரும் இந்தப் பாத யாத்திரையில் கலந்துக்கொண்­டனர்.

பாத­யாத்­தி­ரையில் நடை­யா­கவும் வாக­னத்தில் ஏறியும் கலந்­து­கொண்­ட ­ம­ஹிந்த ராஜ­பக்ஷ பாதையின் இரு­ம­ருங்­கிலும் இருந்­த­மக்­க­ளுக்­கு­ கை­க­ளை­ அ­சைத்­த­வண்ணம் பங்கேற்றிருந்தார். பாத­யாத்­தி­ரையில் கலந்துக் கொண்ட ஏனைய உறுப்­பி­னர்­களும் அதே­போன்­று ­உற்­சா­க­மா­க­லந்துக் கொண்­டனர்.
பேரா­த­னை­யி­லி­ருந்­து ­பி­லி­மத்­த­லாவ, கடு­கண்ணாவ­ மற்றும் ஹிங்­கு­ல ­ஊ­டா­க­ மாவ­னெல்­லை­நகர் நோக்­கி ­பாத யாத்திரை செல்­வ­தற்­கு­ ஒ­ழுங்­குகள் மேற்­கொள்­ளப்­பட்டிருந்தன.


ஆனால் மாவ­னெல்­லை­ நீ­தவான் நீதி­மன்றம் வழங்­கி­ய­உத்­த­ர­விற்­கு ­அ­மை­வா­க ­பா­த­யாத்­தி­ரை­ மா­வனெல்­லை ­நகர் ஊடா­க­செல்­ல­மு­டி­யா­து­ என்­ற­ உத்­த­ரவை ஹிங்­கு­ல­எல்­லையில் ஏற்­பாட்­ட­ளர்­க­ளுக்­கு­ பொ­லிஸார் அறி­வித்­தனர்.

இந்­நி­லையில் பொலி­ஸா­ருடன் பாத­யாத்­தி­ரையில் ஈடுப்­பட்­ட­வர்கள் முரண்­பட்­டு­ கோ­ஷ­மெ­ழுப்­பினர். அதே­போன்­று ­மாவ­னெல்­லை ­நகர் எல்­லையில் பாதை­ம­றிக்­கப்­பட்­டி­ருந்­த­தது. இந்த நிலையில் நேற்றைய பா­த­யாத்­தி­ரையினை கூட்டு எதிரணியினர் நிறுத்திக்கொண்டனர்.

யாத்திரையில் கலந்துக் கொண்­ட ­அ­னைத்­து ­பா­ரா­ளு­மன்­ற­ உ­றுப்­பி­னர்­களும் முன்னாள் ஜனா­தி­ப­தி ­ம­ஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்­ட­முக்­கி­யஸ்­தர்களும் ஹிங்­கு­ல­நகர் எல்­லையில் உள்ள உயர்ந்த கட்­ட­டிடம் ஒன்றில் ஏறி­ ஆ­த­ர­வா­ளர்கள் மத்­தியில் உரை­யாற்­றி­னார்கள். பின்னர் அங்­கி­ருந்­து­க­லைந்­து­சென்­ற­துடன் இன்­று­ கா­லை ­பா­த­யாத்­தி­ரை­யை ­ஆ­ரம்­பிப்­ப­தா­கவும் குறிப்­பிட்டுச் சென்­றனர்.

மாவ­னெல்­லை­நீ­தி­மன்­ற­உத்­த­ர­வை­மீ­றி­பா­த­யாத்­தி­ரை­ ந­க­ருக்கள் வரு­வ­தை­த­டுத்­து­ நி­றுத்­த­ நி­றுத்தும் வகையில் பொலிஸ் கலகம் அடக்கம் பிரி­வினர் ­மற்றும் பொலிஸ் விஷேட அதி­ர­டை­ப­டை­யினர் நக­ர­ எல்­லையில் நிலை­நி­றுத்­தி­வைக்­கப்­பட்டிருந்தனர். மேலும் வீதி­களில் விஷேட பாது­காப்­பு­ ரோந்­து­ ந­ட­வ­டிக்­கைளில் பொலிஸார் ஈடுப்­பட்­டனர்.


மேலும் கூட்­டு ­எதிர் கட்­சி­யி­னரின் அர­சாங்­கத்­திற்­கு­ எ­தி­ரா­ன­ பா­யாத்­தி­ரை­ கா­ர­ண­மா­க ­கண்­டி­–கொ­ழும்­பு­ பி­ர­தா­ன­வீ­தியிலும்­ மற்றும் உள் வீதி­க­ளிலும் பாரிய வாக­ன­நெ­ரிசல் ஏற்­பட்­டது. பொலிஸார் வாக­ன­நெ­ரி­ச­லை­கட்­டுப்­ப­டுத்­த­முற்­பட்­ட­போ­திலும் பாதயாத்­தி­ரையில் ஈடு­பட்­ட­வர்கள் கண்­டி­–கொ­ழும்­பு­ பி­ர­தா­ன­வீ­தி­மு­ழு­வ­து­மா­க­ஆக்கிர­மித்­து­வந்­த­மை­யினால் வாக­னங்கள் அனைத்தும் நடு­வீ­தி­களில் நிறுத்­தி­வைக்­கப்­பட்டிருந்தன.

காலை 9 மணி­தொ­டக்கம் கண்­டியில் இருந்­து­ கொ­ழும்பு, கேகாலை, அட்டன் மற்றும் நுவ­ரெ­லி­யா­ உள்­ளிட்­ட­ந­க­ரை­ அண்­மித்­த­ பகுதிகளுக்கான போக்­கு­வ­ரத்­துகள் முழு­மை­யாக ஸ்தம்­பிதம் அடைந்­தன. பிற்­பகல் 12.30 மணி­ய­ளவில் கண்­டியில் இருந்­து ­கம்­ப­ளை­ஊ­டா­ன­போக்­கு­வ­ரத்­துகள் சீரா­ன­போ­திலும் கொழும்­பு­க்கான போக்குவரத்து மாலை 5.30 மணி­யா­கியும் சீரா­கா­த­நி­லையில் முழு அளவில் வாகனங்­க­ளினால் வீதியில் ­நி­ரம்­பியிருந்தது. பய­ணிகள் பஸ்­களில் இருந்து இறங்­கி­ வீ­தி­களில் அமர்ந்திருந்தனர். மேலும் சிலர் பலமைல் தூரம் நடந்துசென்றனர்.

குறிப்பாக கண்டிநகர எல்லையில் பிரதான வைத்தியசாலைகள் காணப்படுகின்ற நிலையில் நோயாளிகளைகொண்டுச் செல்லமுடியாது அம்பியுலன்ஸ் வண்டிகள் அலரின. என்றும் இல்லாதவாறு இன்று அம்பியுலன்ஸ் வண்டிகள் செல்வதாக கூறிய பாதயாத்திரையில் கலந்துகொண்ட சிலர் சாரதிகளுடன் முரண்பட்டதுடன் அம்பியுலன்ஸ் வண்டிகளின் கண்ணாடிகளிலும் தாக்கினர்.


ஆரம்பத்தில் இருந்தேகூட்டு எதிர் கட்சியின் கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிய எதிர்ப்புபேரணிதொடர்பில் குரல் எழுப்பியபாராளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன,வாசுதேவநாணயக்கார,மேலும் திஸ்ஸ விதாரண மற்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் முதல் நாள் பாதயாத்திரையில் பிரகாசிக்கவில்லை.

பாதயாத்திரை ஆரம்பிப்பதற்கு முன்னர் கண்டி செல்வ விநாயகர் ஆலயத்திற்கும் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பாதயாத்திரையை ஆரம்பித்து வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது,

அதிகாரிகள் சட்டத்தை கையில் எடுத்துசெயற்படுகின்றனர். பொலிஸார் மக்களுக்கு பாதுகாப்புவழங்கி சட்ட ஒழுங்குகளை உறுதிப்படுத்தவேண்டும். ஆனால் எமது ண்டியிலிருந்துகொழும்பைநோக்கிய யாத்திரையை தடுக்கும்வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். அரசாங்கம் இந்தளவு அச்சம் கொண்டிருக்கின்றது என்பது ஆச்சரியமாகஉள்ளது.

ஆனால் கூட்டுஎதிர்க் கட்சியினரால் ஆரம்பிக்கப்பட்ட இந்தபாத யாத்திரைகொழும்பை நோக்கி அனைத்து சவால்களையும் தடைகளையும் தாண்டிசென்றடையும் . மக்கள் என்னுடன் இருக்கின்றனர்.

நீதிமன்றம் ஊடாகதடை விதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் நீதிமன்றின் உத்தரவிற்கு கட்டுப்பட்டும் அடிப்பணிந்தும் எமது பாதயாத்திரையை வெற்றிக்கரமாக ஆரம்பித்துள்ளோம்.

எனவே தடைகள் பல்வேறுவழிகளில் ஏற்படுத்தப்படலாம். அவற்றைவெற்றிக் கொள்வோம். பொதுமக்களின் நலன்கள் தொடர்பில் நல்லாட்சிஅரசாங்கம் ஒருபோதும் சிந்தித்தது இல்லை. அவ்வாறு சிந்தித்து இருந்தால் மக்கள் வாழ்வாதார பிரச்சிணைகளை எதிர் கொள்கையில் வரியை அதிகரித்திருக்காது. எமதுஆட்சியில் நாட்டின் அபிவிருத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும முன்னுரிமை கொடுத்தே செயற்பட்டோம்.

ஆனால் இன்றுநாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கண்டுள்ளது. இதனைஎதிர்த்துபோராடும் போது இன்னோரன்னஅவதூறுகளும் சாடல்களும் எமக்குஎதிராகமுன் வைக்கப்படுகின்றன.

ஆனால் எமது இந்தபாதயத்திரைக்குஅவை சவால்கள் அல்ல .

அனைத்துசவால்களையும் தாண்டுவோம். மக்கள் எம்முடன் உள்ளனர் என்றார்.
அரசாங்கம் இந்தளவு அச்சம் கொண்டிருக்கின்றது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. i அரசாங்கம் இந்தளவு அச்சம் கொண்டிருக்கின்றது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. i Reviewed by Madawala News on 7/29/2016 09:12:00 AM Rating: 5