கஞ்சாகாரன்... கண்டி போலீசில் இருந்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்பு... i



ரிஸ்வான்  ஷஹீதின்  அனுபவம்...


"ஒரு தொலைபேசி அழைப்பு
0812222222 கண்டி  போலீஸ் நம்பர் .."

මේ රිස්වාන් මහත්තයද?
"நீங்க ரிஸ்வானா? மறுமுனையில் !"

"ඔව් මම රිස්වාන් තමා කියන්න .. "
சிங்களத்தில் உரையாடல் தொடர்கிறது

"ஆமா நான்தான் ரிஸ்வான் சொல்லுங்க ..!"

"ச****** என்ற ஒருத்தர் ஒங்க நம்பர கொடுத்தாரு அவருக்கு ஒங்கள தெரியுமாம் "

"சரி என்ன பிரச்சன"

"அவர் பாக்கட்ல தூள் வச்சிருந்து பிடிபட்டு போலீஸ்ல .."
விசயம் தெளிவானது

என்னை நம்பி போன் நம்பர் கொடுத்திருக்கிறார்,

மாலையில்  ஊருக்கு  போய் பிடிபட்டவரின் உம்மாவிடம் மகன் எங்கே என்று கேட்டேன்,

"மகன்  கெலிஒயாக்கு போனான் நாளக்கி வருவான் " என்றார்  அந்த நோயாளியான தாய் ! நான் விசயத்தை சொல்லவில்லைஅவரிடம்,


இரவு 9.25, 
ஆட்டா பிடித்து கண்டிக்கு போய் பார்த்தேன்,

4 போலீஸ் ஷெல்களிலும் 'மாவா, பான்பராக்' போன்ற கேஸ்களுக்காக கைதாகி 'ப்ரேன்டட் ஜீன்ஸும் டீசர்ட்டுமாக' தரையெங்கும் தூங்கிக்கிடந்தார்கள் எமது அடுத்த தலைமுறை

(அத்தனை பேரும் முஸ்லிம்களாம்)

மூக்குத்தூளில் தொடங்கி பான்பராக், தம்பாக்கோ(புகையிலை),
மாவா,
கஞ்சா,
ஹெராயின்
என்று பரிணாமமடைந்து  தேய்ந்து கொண்டிருக்கிறது  நமது சமூகம்.

'மூக்குத்தூள்' மாட்டினாலும் கோட்டில கேஸ் போடுவது 'கஞ்சா' பிடிபட்டதாகவே ..! தேசிய ரீதியில் கணக்கெடுக்கும் போது

எமது சமூகமே 'கஞ்சா' பாவனையில் முன்னணியில் இருப்பதாக 'தரவுகள்' காட்டும் ..!

நாமெல்லாம் பிஸி ...
*அரசியல்வாதிகள் சொத்து சேர்ப்பதிலும் கட்சி வளர்ப்பதிலும் பிஸி
*சமூகத்தை சீர்செய்ய வந்த இயக்கங்கள் தகராறுகளில் சிக்கி பிஸி,
*பாடசாலையில் பிரச்சினை என்றால் உம்மாவை அனுப்பிவிட்டு வாப்பாமார் எப்பவுமே பிஸி,
*ஊரை திருத்துகிறோம் என்று சதா கட்டடங்களை திருத்துவதிலேயே பள்ளிவாசல்களும் பிஸி ..

கொங்ரீட் காடுகளுக்குள் உணர்வற்ற (Zombie) சொம்பீக்களாக எமது புதிய தலைமுறை ..

என்ன செய்யலாம் ..?

Plz SHARE
கஞ்சாகாரன்... கண்டி போலீசில் இருந்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்பு... i கஞ்சாகாரன்... கண்டி  போலீசில் இருந்து  எனக்கு  வந்த தொலைபேசி அழைப்பு... i Reviewed by Madawala News on 7/22/2016 06:43:00 PM Rating: 5