Accaddemy

இரண்டு சிறுபாண்மை குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற கைககலப்பு.. காரணகர்த்தா கைது. i



தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி

கடந்த சனிக்கிழமை  (16) திகதி சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் உப்பூறல் பகுதியில் காணி தகராரு காரணமாக இரண்டு  சிறுபாண்மை குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற கைககலப்பு சம்பவத்தில் இரு தரப்பிலும் 06 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் மூதூர் சேருநுவர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் இச்சம்பவம் குறித்து சேருநுவர பொலிஸார் மேற் கொண்ட விசாரணையின் அடிப்படையில் இக் கைகலப்பு சம்பவம் இடம்  பெறுவதற்கு உப்பூறல் கிராம சேவை அதிகாரியே காரணமாக இருந்ததாக இக் கைககலப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுபாண்மை குழுவொன்று சேருநுவர பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தது.

இதன் அடிப்படையில் குறித்த கிராம சேவை அதிகாரியை இன்று (22) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சேருநுவர பொலிஸார் வேண்டிக் கொண்டதற்கமைய குறித்த கிராம சேவை அதிகாரி இன்று மூதூர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.இவ் வழக்கினை விசாரணை செய்த நீதிவான் ஐ.என்.றிஸ்வான் கிராம சேவை அதிகாரியை இம் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இரண்டு சிறுபாண்மை குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற கைககலப்பு.. காரணகர்த்தா கைது. i இரண்டு  சிறுபாண்மை குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற கைககலப்பு.. காரணகர்த்தா கைது. i Reviewed by Madawala News on 7/22/2016 06:50:00 PM Rating: 5