Kidny

Kidny

யாரும் எதிர்பார்க்காத வகையில் வளர்ந்து வரும் ஆபிரிக்காவை பாருங்கள்... படத்தில் நீங்கள் பார்ப்பது எத்தியோப்பியா. i



By - தில்ஷான்  முகம்மத்-

ஆபிரிக்கா என்றால் நம் மனக்கண் முன்னாள் தோன்றுவது மெலிந்த உருவமுடைய பிள்ளைகளும், அவர்களின் பசியும் பட்டினியுமே.
“ஒரு கண்டம் முழு உலகிற்கும் உணவு கொடுக்க முடியும் என்றால் , அது ஆபிரிக்காதான் “ என்பார்கள்.

அத்தனை இயற்கை வளங்கள் இருந்தாலும் காலனித்துவ ஆட்சியாளர்கள் தமக்கு தோதான சர்வாதிகாரிகளை ஆட்சியில் அமர்த்தி பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் இனங்களுக்கு இடையே சண்டையை மூட்டிவிட்டு மறுபக்கம் அதன் இயற்கை வளங்களை கொள்ளையடித்தாலே இத்தனை நூற்றாண்டு காலம் நடந்துவந்த கொடுமை.

ஆபிரிக்காவின் படிப்பறிவு வீதம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தததால் , இந்த தந்திரங்களை தெரிந்து கொள்ளும் அளவுக்கு அந்த மக்கள் தெளிவடைந்திருக்கவில்லை. ஆங்காங்கே சர்வாதிகார ஆட்சியாளர்களை மாற்ற நினைத்தாலும், அது பெரும் அழிவிலே முடிந்தது.

என்றாலும் 1990 களிற்கு பிறகு ஆபிரிக்காவில் உருவாகிய மக்கள் இயக்கங்கள் , தூர நோக்குள்ள தலைவர்கள் இந்த இடைவெளியை நிரப்புவதற்கு எடுத்த அயராத முயற்சிகளுக்கு இப்போது பலன் காண ஆரம்பித்துள்ளார்கள். பல உள்நாட்டு யுத்தங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன.

தற்போதைய இளைஞர்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கின்றன. அவர்கள் ஆக்கபூர்வமான அபிவிருத்தியில் கவனம் செலுத்துகின்றார்கள். நாம் அடங்கி கிடந்தது பொது, வெளியார் எமக்கு ஆலோசனை சொல்லதேவையில்லை நாம் ஆபிரிக்காவை கட்டியெழுப்ப போகிறோம் என்கிறார்கள் அவர்கள்.

ஆபிரிக்காவின் அனைத்து துறைகளையும் அபிவிருத்தி செய்வதற்காக ஆபிரிக்க யூனியன் களத்தில் நிற்கிறது. உள்நாட்டு குழப்பங்களை தீர்ப்பதற்காக ஆபிரிக்க யுனியன் துருப்புக்களும் வைத்திருக்கிறார்கள். முழு மொத்த ஆபிரிக்காவின் வடக்கில் இருந்து தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் அதிவேக பாதைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் பல நாடுகள் துரித கதியில் பொருளாதார வளர்ச்சியடைந்து வருகின்றன.

இப்போதெல்லாம் வறுமை ஒழிப்பு போன்ற தலைப்புகளில் உள்ள புத்தகங்கள் மாநாடுகளில் ஆபிரிக்கா சிறுவர்களை பயன்படுத்துவதற்கு கடுமையான எதிர்ப்பு கிழப்பி இருக்கிறது. . இதனால் ஐநா போன்ற சர்வதேச நிறுவனங்கள் தமது சர்வதேச பதிப்புகளில் ஆபிரிக்க சிறுவர்களின் படங்களை தவிர்த்து வருகின்றன.

ஒரு பனை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற மாதிரி புதிய எதியோப்பியாவை பாருங்கள்.








யாரும் எதிர்பார்க்காத வகையில் வளர்ந்து வரும் ஆபிரிக்காவை பாருங்கள்... படத்தில் நீங்கள் பார்ப்பது எத்தியோப்பியா. i யாரும் எதிர்பார்க்காத வகையில் வளர்ந்து வரும் ஆபிரிக்காவை பாருங்கள்... படத்தில் நீங்கள் பார்ப்பது எத்தியோப்பியா. i Reviewed by Madawala News on 7/25/2016 07:11:00 PM Rating: 5