Accaddemy

நாமல் ராஜபக்ஷவின் கைதை அடுத்து குழப்பமடைந்த பொது எதிர்க்­கட்­சி­யினர். அரசுடன் இணைய இரகசிய பேச்சு. i



(ப.பன்­னீர்­செல்வம்)

பொது எதிர்க்­கட்­சி­யினர் பலர் அர­சுடன் இணை­வ­தற்­கான இர­க­சிய பேச்­சுக்­களை நடத்தி வரு­வ­தாக நம்­ப­க­ர­மான அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது.

கடந்த கால ஊழல், மோச­டிகள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டதையடுத்தே இத்தகைய மாற்றம் ஏற்­படக் கார­ண­மாக அமைந்­துள்­ள­தா­கவும் அவ்­வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து மேலும் தெரி­ய­வ­ரு­கி­றது.

இது தொடர்­பாக நம்­ப­க­ர­மான அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து
மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது..

கடந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தின் ஊழல் மோச­டிகள் தொடர்­பான விசா­ர­ணை­களில் மந்த நிலை காணப்­பட்­ட­போதும் தற்­போது விசா­ர­ணைகள் துரி­தப்­பட்­டுள்­ள­தோடு கைது­களும் இடம்­பெ­று­கின்­றன.
எதிர்­வரும் வாரங்­களில் மேலும் பலர் கைதா­கலாம் என்றும் செய்­திகள் வெளி­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­நி­லையில் பொது­எ­திர்க்­கட்சியான மஹிந்த அணி ஆத­ர­வா­ளர்கள் பலர் குழப்பம் அடைந்­துள்­ளனர்.

விசே­ட­மாக இவ்­அ­ணியில் இருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த பல முக்­கி­யஸ்­தர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்கத் தயா­ராக இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ள­தோடு இது தொடர்­பாக ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் இர­க­சிய பேச்­சு­வார்த்­தை­க­ளையும் ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் அறிய வரு­கி­றது.

கடந்த வாரம் இக் குழு­வினர் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­சரு­மான துமிந்த திஸா­நா­யக்­க­வையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீ­ர­வையும் தனித்­த­னி­யாக சந்­தித்து இர­க­சிய பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­ய­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் பொது எதிர்க்­கட்­சியை சார்ந்த பலர் எதிர்­வரும் வாரங்­களில் அர­சுடன் இணை­யலாம் என்றும் அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது.

பொது எதி­ர­ணிக்கு ஆத­ரவு வழங்­கிய சுதந்­திரக் கட்­சி­யி­னரின் இந்த மன­மாற்­றத்­திற்கு நாமல் ராஜபக்ஷ எம்.பி. யின் கைது மூல கார­ண­மாக அமைந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதேவேளை லஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு முடிவடைந்துள்ள நிலையில் மிக விரைவில் கடந்த ஆட்சிக் காலத்து முக்கிய 4 அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நாமல் ராஜபக்ஷவின் கைதை அடுத்து குழப்பமடைந்த பொது எதிர்க்­கட்­சி­யினர். அரசுடன் இணைய இரகசிய பேச்சு. i நாமல் ராஜபக்ஷவின் கைதை அடுத்து குழப்பமடைந்த பொது எதிர்க்­கட்­சி­யினர். அரசுடன் இணைய இரகசிய பேச்சு. i Reviewed by Madawala News on 7/18/2016 09:27:00 AM Rating: 5