உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்.. நஜாஸ் மற்றும் கலீல் சௌபான் பலத்த காயம். i

ரபாய் டீன்பாபு                                                                   

உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இருவர் காயம்.

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் 150 ஆண்டு கொண்டாட்டத்தினை முன்னிட்டு பழைய மாணவர்கள் சங்கம்   ஏற்பாடு செய்த உதைபந்து சுற்றுப்போட்டி சனிக்கிழமை 2016.07.23 நடைபெற்றது.
.
அணிக்கு எழுவர் கொண்ட இப்போட்டியில் 24 கழகங்கள் பங்கு கொண்டன.

இப்போட்டித் தொடர்  ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயத்துக்குள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
..

இவ்வாறு காயத்துக்குள்ளானவர்.நஸார் நஜாஸ் வயது.20 லவ்லேன் தக்வாநகர்.

.
இவரது முதுகுப்பகுதி வெட்டுக்காயங்களுக்குள்ளகியுள்ளது இவர் அவசர விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
.
பார்வையாளரான முகம்மது கலீல் சௌபான் வயது 24 என்பவரது முளங்கை வெட்டுக்காயத்துக்குள்ளாகி தலையிலும் தடிகளால் தாக்கப்பட்டுள்ளன இவ்விருவரும் இவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
.
பொலிஸாரின் தலையீட்டினால் நிலைமை கட்டுப்பாட்டக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்.. நஜாஸ் மற்றும் கலீல் சௌபான் பலத்த காயம். i உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்.. நஜாஸ் மற்றும் கலீல் சௌபான்  பலத்த காயம். i Reviewed by Madawala News on 7/24/2016 03:10:00 PM Rating: 5