Ad Space Available here

கடும் விமர்­ச­னங்­களை எதிர்­பார்த்தே நாம் நாடு ­தி­ரும்­பினோம்.i ஆனால்....இங்­கி­லாந்து அணிக்­கெ­தி­ராக அடைந்த தோல்­விக்கு காரணம் சொல்­லி­விட்டு நகர முடி­யாது. நாம் அனைத்து விதத்­திலும் மேம்­பட வேண்­டி­யுள்­ளது. எமது துடுப்­பாட்டம் சிறப்­பாக அமைந்­த­தை­யிட்டு நான் திருப்­தி­ய­டைய மாட்டேன்.
 என்று இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் தெரி­வித்தார்.


இங்­கி­லாந்­துக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டி­ருந்த இலங்கைக் கிரிக்கெட் அணி நேற்று நாடு திரும்­பி­யது. விமா­ன­நி­லை­யத்தை வந்­த­டைந்த அணி­யினர் நேராக இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்­துக்கு வந்­த­டைந்து அங்கு ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றை நிகழ்த்­தினர். அதில் பேசும்­போதே அஞ்­சலோ மெத்­தியூஸ் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.


இலங்கை அணி இங்­கி­லாந்­திடம் அடைந்த தோல்­விக்கு காரணம் பந்­து­வீச்­சுதான் என்­பது தெளி­வாக தெரிந்த நிலையில் அதைக் குறித்த கேள்­வி­கள்தான் அதி­க­மாக கேட்­கப்­பட்­டன.

இந்த விட­யத்தை அஞ்­சலோ மெத்­தி­யூஸும் சரி, தெரி­வுக்­குழுத் தலைவர் சனத் ஜய­சூ­ரி­யவும் சரி இரு­வ­ருமே மறுக்­க­வில்லை.


இந்தச் சந்­திப்பில் முதலில் பேசிய அஞ்­சலோ மெத்­தியூஸ், வெறும் கையோடு நாடு­ தி­ரும்­பு­வ­தை­யிட்டு நாம் பெரும் கவ­லை­ய­டை­கிறோம். கடும் விமர்­ச­னங்­களை எதிர்­பார்த்தே நாம் நாடு ­தி­ரும்­பினோம். ஆனால் எம் மீது நாட்டு மக்­களும் ஊட­கங்­க­ளும் வைத்­தி­ருக்கும் அன்பை இன்று புரிந்­து­கொண்டோம்.


எமது அணி வீழ்ச்­சி­யி­லி­ருந்து மீள்­வ­தற்கு நீங்கள் தரும் ஆத­ரவு எமக்கு மிக­முக்­கியம். இந்தத் தொடரில் எமது பந்­து­வீச்சு மிகவும் மோச­மா­கத்தான் இருந்­தது. அதை நான் ஏற்­றுக்­கொள்­கிறேன். ஆனாலும் துடுப்­பாட்டம் குறித்தும் திருப்­தி­யில்லை. நாம் துடுப்­பாட்டம் மற்றும் பந்­து­வீச்சு ஆகி­ய­வற்றில் இன்னும் முன்­னேற்றம் காண­வேண்டும்.


இம்­மாத இறு­தியில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுடன் மோதப்­போ­கிறோம். அதுவும் எமக்கு சவால் மிக்­க­தொரு தொடர்தான். ஆனாலும் உள்­ளூரில் மோது­வதால் எமது ரசிகர்­களின் ஆத­ரவு எமக்கு இருப்­பதை மேலும் ஒரு பல­மாக கரு­துகிறோம் என்றார்.

இங்­கி­லாந்து தொடர் குறித்து தெரி­வுக்­கு­ழுவின் தலைவர் சனத் ஜய­சூ­ரி­யவும் இதே­க­ருத்­தைத்தான் முன்­வைத்தார். பந்­து­வீச்சில் நாம் சிறப்­பாக செயற்­ப­ட­வில்லை. அதை­விட மிகப்­பெ­ரிய பிரச்­சினை வீரர்கள் அடிக்­கடி காயத்­திற்கு உள்­ளா­கி­றார்கள்.

அது எமக்கு மிகப்­பெ­ரிய தலை­யி­டி­யாக இருக்­கி­றது. ஒரு­சேர ஒரு தொடரை ஆடி­மு­டிக்க முடி­யாமல் தடு­மா­று­கி­றார்கள் வீரர்கள். முதலில் வீரர்­களின் உடற்­த­கு­தியை மேம்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது என்றார் சனத் ஜய­சூ­ரிய.

திற­மை­யான வீரர்கள் பலர் இருக்க ரமித் ரம்­புக்­வெல்­லவை அணியில் இணைத்­துக்­கொண்­டமை குறித்து சனத்திடம் கேட்டபோது, விசேட காரணம் என்று ஒன்றும் இல்லை. இருபதுக்கு 20 போட்டிக்கு அடித்தாடக்கூடிய வீரர் ஒருவர் எமக்கு தேவைப்பட்டார். அதேபோல் பந்துவீச்சாளராகவும் இருந்தால் நல்லது என்று எண்ணித்தான் அவரைத் தெரிவுசெய்தோம் என்றார்.

கடும் விமர்­ச­னங்­களை எதிர்­பார்த்தே நாம் நாடு ­தி­ரும்­பினோம்.i ஆனால்.... கடும் விமர்­ச­னங்­களை எதிர்­பார்த்தே நாம் நாடு ­தி­ரும்­பினோம்.i ஆனால்.... Reviewed by Madawala News on 7/08/2016 11:19:00 AM Rating: 5