Free Space

குர்பான் மாடுகளை மடு­வங்­களில் மட்டும் அறுக்கவும்.. பள்­ளி­வா­சல் மற்றும் வீடுகளில் அறுக்க வேண்டாமே.. i



 ARA.Fareel

முஸ்­லிம்கள் தமது குர்பான் கட­மைக்­காக மாடு­களை பள்­ளி­வா­சல்­க­ளிலும் பொது இடங்­க­ளிலும் வீடு­க­ளிலும் அறுப்­ப­தற்கு தடை விதிக்­கு­மாறும் சட்­டத்தை கடு­மை­யாக அமுல்­ப­டுத்­து­மாறும் சிங்­கள ராவய அமைப்பு உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் ஆணை­யார்கள் மற்றும் செய­லா­ளர்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.


சட்­ட­ரீ­தி­யாக அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள மாடுகள் அறுக்கும் மடு­வங்­களில் மாத்­திரம் மாடுகள் அறுக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அவ்­வா­றில்­லையேல் இனங்­க­ளுக்கு இடையில் குரோ­தங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு வழி­வ­குக்கும் எனவும் சிங்­கள ராவய அமைப்பு மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் செய­லா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்­ள­தாக சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

நாட்டில் மாடுகள் அறுப்­ப­தற்கு அனு­ம­தி­யி­ருந்­தாலும் சட்டம் இருந்­தாலும் முஸ்­லிம்கள் அந்தச் சட்­டத்தை மதி­யாது விசே­ட­மாக குர்பான் காலத்தில் மாடு­களை அறுக்­கி­றார்கள்.

அறுக்­கப்­படும் மாடு­க­ளுக்­கான அனு­மதி உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிடம் பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். மாடு­களை போக்­கு­வ­ரத்து செய்­வ­தற்­கான அனு­மதி பொலிஸ் நிலை­யங்­க­ளி­லி­ருந்து பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும்.

மாடுகள் கர்ப்பம் தரித்­தி­ருக்கக் கூடாது. மாடு­களை வாக­னங்­களில் சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாகும் வகையில் போக்­கு­வ­ரத்து செய்­யக்­கூ­டாது போன்ற சட்­டங்கள் எமது நாட்டில் அமு­லி­லுள்­ளன.

இந்தச் சட்­டங்கள் சரி­யாக கடைப்­பி­டிக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஒரு இனம் மாடு­களை தெய்­வங்­க­ளாக வழி­ப­டு­கி­றது.

அதனால் அந்த இன மக்­களின் உணர்­வுகள் மதிக்­கப்­பட வேண்டும்.

அதனால் மாடுகள் அறுப்பதற்காக நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டம் கடுமையாக அமுல் நடத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
குர்பான் மாடுகளை மடு­வங்­களில் மட்டும் அறுக்கவும்.. பள்­ளி­வா­சல் மற்றும் வீடுகளில் அறுக்க வேண்டாமே.. i குர்பான் மாடுகளை மடு­வங்­களில் மட்டும் அறுக்கவும்.. பள்­ளி­வா­சல் மற்றும் வீடுகளில் அறுக்க வேண்டாமே.. i Reviewed by Madawala News on 7/27/2016 11:35:00 AM Rating: 5