அரசாங்கத்தையே கவிழ்த்த இலங்கை பாதயாத்திரைகள் விபரம். i

- தில்ஷான் முகம்மத்-
மஹிந்த கூட்டணி ஏற்பாடு செய்திருக்கும் கண்டி-கொழும்பு பாத யாத்திரை நாளை ஆரம்பமாகவிருக்கிறது.

.
ஒரு நாளே மீதமிருக்கும் நிலையில்,  கண்டி நகரத்திற்கு உள்ளே இந்த பேரணியை ஆரம்பிக்க கூடாது என்று கண்டி நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருப்பதால் அவர்களால் தலதா மாளிகையில் இருந்து இந்த பேரணியை ஆரம்பிக்க முடியாமல் போகக்கூடும்.
ஒருவேளை தலதா மாளிகையில் பூஜை செய்ய வந்திருக்கிறோம் என்ற பெயரில் அங்கு ஒன்று கூடுவதற்கான சாத்தியங்களும் இல்லாமல் இல்லை.
.

இது இப்படியிருக்க , மாவனல்லை நகரத்திற்கு ஊடாக செல்லாமல் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு மாவனல்லை மாவட்ட நீதிமன்றமும் கட்டளையிட்டு இருக்கிறது. (மாற்றுப்பாதையை இனித்தான் கண்டுபிடிக்கணும் :-)  ) . இதற்கு மேலதிகமாக கொழும்பின் அனைத்து மைதானங்களும் பல நாட்களுக்கு அரசாங்கத்திற்கு சார்பான அமைப்புக்களால் புக் செய்யப்பட்டு விட்டன.
.

மஹிந்த கற்றுக்கொடுத்த இந்த சித்து விளையாட்டுக்களை தற்போது அவருக்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளனர்.  இதனால் நாளை நடக்கவிருக்கும் பாத யாத்திரை பெரும் பேசுபொருளாகவும் சுவாரஸ்யமாகவும்  மாறியிருக்கிறது.
.

இந்த இடத்தில் , இதற்கு முன்னர் இலங்கையில் நடந்த நடந்த பாத யாத்திரைகளையும் அவை ஏற்படுத்திய விளைவுகளையும் பற்றி சுருக்கமாக  பார்ப்போம். 
.

1. முதல் பாதயாத்திரை பண்டா-செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக ஜே ஆர் ஜெயவர்த்தனாதா தலைமையில் 1957 ஆம் ஆண்டு கண்டியில் ஆரம்பித்து கொழும்பை வந்தடைவதே திட்டம். புத்த மதத்தையும்  சிங்கள மொழியையும் பாதுகாக்கணும் என்ற பெயரில் இந்த பாத யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. எனினும் இந்த பாத யாத்திரை இம்புல்கொட சந்தியில் வைத்து பலவந்தமாக தடுத்து நிறுத்தப்பட்டது.
.

2. 1992 ஆம் ஆண்டு, பிரேமதாசாவின் ஆட்சியில் தனியார் மயமாக்கள் கொள்கை, ஜேவிபி கலவரத்தில் காணாமல் போனவர்களுக்கான நஷ்டயீடு வழங்காமை , வாழ்க்கை செலவு அதிகரிப்பு போன்றவற்றிக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜன கோஷா என்ற பெயரில் கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கிய பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இதன் இரண்டு வருடங்களின் பின்னர் ஐதேக ஆட்சி சந்திரிக்கா அம்மையார் தலைமையில் கவிழ்க்கப்பட்டது.
.

3. ஜன பல மேஹயும என்ற பெயரில் 2001 ஆம் ஆண்டு , ரணிலின் தலைமையில் கண்டியில் இருந்து கொழும்பை நோக்கி சந்திரிகா அரசின் இனப்பிரட்சினைக்கான தீர்வு திட்டத்தையும் வாழ்க்கை செலவு அதிகப்பையும் எதிர்த்து பாத யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. பின்பு அதே ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரிக்கா அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
.

4. தற்போது மஹிந்த தலைமையில் ஜன சட்டன பாத என்ற தலைமையில் பல கோரிக்கைகளை முன்வைத்து கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி ஐந்து நாள் பாத யாத்திரை நடக்கவிருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த பல பாத யாத்திரைகள் அரசாங்கத்தை மாற்றும் அடித்தளமாக இருந்திருப்பதால், இந்த பாத யாத்திரையும் அரசாங்கத்தினதும் பொது  மக்களினதும் அவதானிப்பை பெற்றிருக்கிறது.

அரசாங்கத்தையே கவிழ்த்த இலங்கை பாதயாத்திரைகள் விபரம். i அரசாங்கத்தையே கவிழ்த்த இலங்கை பாதயாத்திரைகள் விபரம். i Reviewed by Madawala News on 7/27/2016 04:43:00 PM Rating: 5