Free Space

திருமண நாளில் சோகம்.. மோட்டார் சைக்கில் விபத்தில் இளம் தம்பதி பலி. i



கிளிநொச்சி -கொக்காவில் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதிகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்வண்டியும்,மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்துஇடம்பெற்றிருப்பதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 24 வயது ஆணும்,அவரது மனைவியான 23 வயது பெண்ணுமே பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்;பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் இவர்களது இரண்டாம் வருட திருமண நாள் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார்,இவர்களுடன் பயணித்த 2 வயது குழந்தை காயமடைந்த நிலையில் கிளிநொச்சி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பஸ்வண்டியின் சாரதியை மாங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திருமண நாளில் சோகம்.. மோட்டார் சைக்கில் விபத்தில் இளம் தம்பதி பலி. i திருமண நாளில் சோகம்.. மோட்டார் சைக்கில் விபத்தில் இளம் தம்பதி  பலி. i Reviewed by Madawala News on 7/25/2016 10:52:00 AM Rating: 5