Thursday, July 28, 2016

பொது பல சேனா,அமைச்சர் சம்பிக்க போன்றவர்கள் யார்? என்று எமது சமூகம் சிந்தித்ததா? i

Published by Madawala News on Thursday, July 28, 2016  | 

பொது பல சேனா,அமைச்சர் சம்பிக்க போன்றவர்கள் யார்? என்று எமது சமூகம் சிந்தித்ததா? என கல்முனை இஸ்லாமிக் நலன்புரி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் இப்றாஹிம் அவர்கள் கேள்வியெழுப்பி உள்ளார்.
.

இலங்கையின் இறைமையை மதித்து அதனை பாதுகாக்கத்தான் பேசுகின்றோம் என்று கூறிக்கொள்ளும் ஞானசார மற்றும் அமைச்சர் சம்பிக்க போன்றவர்கள் தமீழர்கள் தரப்பு கண்முன்னே இலங்கையில் சமஷ்டி, சுயாட்சி வேண்டும் என்று கேட்பது மட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் சபை வரை இலங்கை பிரச்சினையை கொண்டு சென்று அரசை அச்சுறுத்துகின்றார்கள்.
.

அதுமட்டுமல்ல இலங்கை ராணுவத்தின் யுத்த மீரல் பற்றியும் விசாரிக்க வேண்டும் என்றும் வழியுறுத்தி வருகிறார்கள்.

.
இந்த விடயங்கள் ஒன்றுமே ஞானசாரருக்கோ சம்பிக்க ரணாவக்க போன்றவர்களுக்கு பெரிதாகப்படவில்லை,
இலங்கையின் இறையான்மைக்கு  என்றுமே சவால் விடாத அரசுக்கு எதிராக செயல்படாத முஸ்லிம்  சமூகத்தின் மீது இவர்கள் தாக்குதல் தொடுப்பதின் நோக்கம் என்ன என்பதை நாங்கள் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

.
உலகில் இன்று பெரும்பாலான நாடுகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான சதிகளை அமெரிக்காவும்,இஸ்ரவேலும் திட்டமிட்டு நடத்துகின்றன.
அதை அவர்கள் அவர்களின் ஏஜண்டுகள் மூலம் மிக தெளிவாக செயல்படுத்தியும் வருகின்றனர்....
.

முஸ்லிம்களை சீண்டி அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி ,அவர்களை பயங்கரவாதிகளாக்கி,
அதன் மூலம் இஸ்லாமியர்களை நிலை குலைய வைக்கலாம், என்பதோடு பொருளாதாரத்தை சூறையாடலாம் என்ற நற்பாசைதான் இதற்கான காரணமாகும்.
.

இதன் அடிப்படையில் முஸ்லிம் நாடுகள் தொடக்கம் தற்போது இந்தியா வரை தங்களுடைய  ஏஜண்டுகள் மூலம் இத்தீய சதித்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார்கள்....
.

அத்திட்டத்தின் அடுத்தகட்டமாக  இலங்கையில் அமைதியாக வாழும் நம் முஸ்லிம்களுக்கு எதிராக காய் நகர்த்தி வருகின்றார்கள். என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
.

அமெரிக்காவிற்கு பிடிக்காத ஆட்சியாளர்களை வீழ்த்துவதற்கான  திட்டங்களை வகுத்து  தங்களுக்கு விசுவசமான ஏஜன்டுகள் மூலமாக அந்த ஆட்சியாளர்களை வீழ்த்துவதும் தங்களுடைய ஆதிக்கத்திற்கு கட்டுபடக்கூடியவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதும் அவர்களின் தாரகமந்திரமாகும்.
அதற்கு உதாரணமாக பலநாடுகளை நாம் உதாரணமாக கொள்ளலாம்.
.

அன்று இலங்கையில் அமெரிக்க கைகூலியாக இருந்த பாசிச விடுதலைப் புலிகள் எதிர்பாராத விதமாக அழிக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் பேரிடியாகவே அமைந்தது. புலிகளை வைத்து கிழக்காசியாவை தங்களுடைய ஆதிக்கத்திற்குள் கொண்டுவர வேண்டும் என நினைத்த அமெரிக்காவுக்கு அது மிகப் பெரிய இழப்பு என்பதை நாம் அறியாமலில்லை.
.

அமெரிக்கா புலிகள் தோற்கடிக்கபட்டதன் பின் இலங்கை தமிழர்களின் மீது அளவுகடந்த பாசத்தை கொட்டுவதை நாம் அன்றுதொட்டு இன்றுவரையிலும் அவதானித்து வருகிறோம்.
.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கு புலிகளின் இழப்பு ஈடுகட்ட முடியாததாகியது. இருந்தபோதிலும் தற்போது தமிழர்கள் பிரச்சினையில் அதீத அக்கறை கொண்டவர்களாக தன்னை இனம்காட்டிக் கொள்வதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு எதிரான அதட்டல்களுக்கும் இந்த ஞானசார சம்பிக்க போன்றவர்களின் மௌனத்திற்கும் சம்மந்தம்  இல்லாமலில்லை. இவர்கள் தமிழ் டெயஸ்போராக்களின் ஏஜன்டுகளாக செயல்படுகிறார்கள். என்பதற்கு இது மிகப்பெரிய சான்றாக அமைகிறது.
.

அமெரிக்கா எப்போதும்  ஒரு கல்லில் இரு மாங்காய்கள் என்ற  தனது வழமையான செயற்பாட்டை இலங்கை முஸ்லிம்கள் விடயத்திலும் விட்டுவைக்கவில்லை முஸ்லிம்களான எம்மையும் குழப்பி, எமக்கு எதிரான ஆட்சியாளர்களையும் வீழ்த்தி எதைச் சாதிக்க முற்படுகின்றார்கள். என்பதை எமது முஸ்லிம் சமூகம் சற்று ஆழமாக சிந்திக்கவேண்டும்.
சிந்திக்க தவறினால் இலங்கையில் பிற்காலத்தில் பாரியதோர் இழப்பை முஸ்லிம்கள் சந்திக்க வேண்டிவரலாம்.
.

எனவே அம்பை நோவதை விட, அதனை எய்தவன் யார் என்பதையும்
எதற்காக எய்தான் என்பதையும் முஸ்லிம் சமூகம் சிந்திக்கவேண்டிய தருணம் இன்னும் கைமீறிப் போகவில்லை. எனவே புத்தியுடன் சிந்தித்து செயலாற்றுவோம்....
என்று கூறினார்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top