tg travels

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரைக்கு ரத்துபஸ்வலயில் காத்திருக்கும் "தண்ணி போத்தல்கள்" i



ரத்துபஸ்வல மக்கள் அருந்தும் குடிநீரையே இன்று கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த கூட்டு எதிர்க் கட்சியினர் மேற்கொள்ளும் நடைபவனியில் வருபவர்களுக்கு நாம்  வழங்கவுள்ளோம் என வலிவேரிய கல்லொலுவ ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி தெரிபெஹ சிறிதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று (31) நண்பகல் வேளையில் கண்டி வீதியில் சென்று கொண்டிருந்த கூட்டு எதிர்க் கட்சியின் நடைபவனியில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கே தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரத்துபஸ்வல பிரதேச மக்கள் அருந்தும் குடிநீர் போத்தல்களையும் வைத்தவாறு பாதை அருகில் இருந்துகொண்டு தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரைக்கு ரத்துபஸ்வலயில் காத்திருக்கும் "தண்ணி போத்தல்கள்" i கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரைக்கு ரத்துபஸ்வலயில் காத்திருக்கும் "தண்ணி  போத்தல்கள்" i Reviewed by Madawala News on 7/31/2016 05:28:00 PM Rating: 5