Oceas

(படங்கள்) கிரிக்கட்டில் அசத்திய உலமாக்கள் மற்றும் ஹாபிழ்கள். i



2016 நோன்புப்பெருநாளை முன்னிட்டு மாத்தறை ஸதாகதுஷ்ஷபாப் நிறுவனத்தினால் அகில இலங்கை ரீதியில் உலமாக்கள் மற்றும் ஹாபிழ் களுக்கான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி 6வது தடவையாக கடந்த 9 மற்றும் 10 திகதி மாத்தறை சனத் ஜயசூரிய மற்றும் மஹிந்த விஜேஸகர கிரிக்கட் மைதானத்தில் மிக விமர்சையாக நடத்தி முடிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
 
   நாட்டின் நாலா பாகத்திலிருந்தும் சுமார் 30 அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியில் மாத்தறை ஸதன் வொறியஸ் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.

இரண்டாம் இடத்தை இரத்தினபுரி ரவ்லா வொறியஸ் அணியும் மூன்றாம் இடத்தை அக்கரைப்பற்று ஹபீபிய்யா அணியும் நான்காம் இடத்தை கொழும்பு இத்திஹாத் அணியும் பெற்றுக்கொண்டனர்.

முதல் பரிசாக 40,000 ரூபாவும் வெற்றிக்கின்னமும் இரண்டாம் பரிசாக 23,000 ரூபாவும் வெற்றிக்கின்னமும். மூன்றாம் பரிசாக 10,000 ரூபாவும் வெற்றிக் கின்னமும். நான்காம் பரிசாக 5,000 ரூபா பணமும் வழங்கபப்ட்டது.

 மற்றும் சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த துடுப்பாட்ட வீரர், தொடர் நாயகன் மற்றும் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான கின்னமும் வழங்கப்பட்டது.

  உலமாக்களுக்கான கிரிகட் போட்டியை அறிமுகம் செய்து வைத்த மெளலவி இக்ராம் பாஸி அவர்களுக்கு பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இறை அருளால் போட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் 2 நாட்கள் மிக விமர்சையாக நடந்து முடிவுற்றது. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.

பங்கு பற்றிய அனைவரும் உலமாக்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


பட விபரம்.
முதல் படம் மெளலவி இக்ராம் பாஸி

அதைத்தொடர்ந்து முறையே 1ம் 2ம் 3ம் 4ம் பரிசை பெரும் காட்சி.
அதைத்தொடர்ந்து சிறந்த பந்து வீச்சாளர்(பஸால் பாரி ஸதன் வொறியஸ் அணி ) சிறந்த துடுப்பாட்ட வீரர்,(அப்துல்லாஹ் மெளலவி ரவ்லா வொறியஸ் அணி )தொடர் நாயகன் ( சாகிர் மெளலானா ஸதன் வொறியஸ் ) மற்றும் இருதிப்போட்டியின் நாயகன் (ஸஜா ஸதன் வொறியஸ் அணி)

தகவல் றஸான் வெலிகம. 











(படங்கள்) கிரிக்கட்டில் அசத்திய உலமாக்கள் மற்றும் ஹாபிழ்கள். i (படங்கள்) கிரிக்கட்டில் அசத்திய உலமாக்கள் மற்றும் ஹாபிழ்கள். i Reviewed by Madawala News on 7/11/2016 02:19:00 PM Rating: 5