Free Space

சிறுவர் துஷ்­பி­ர­யோகத்தில் தந்தை சிறைக்கு சென்றதால், மகள் தற்கொலை... இது சிலாபத்தில். i



கழுத்துப் பட்­டி­யினால் சுருக்­கிட்டுக் கொண்டு ஆபத்­தான நிலையில் சிலாபம் வைத்­தி­ய­சா­லையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த 16 வய­து­டைய மாணவி பத்து தினங்­களின் பின்னர் சிகிச்சை பல­னின்றி நேற்று முன்­தினம் உயி­ரி­ழந்­துள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சிலாபம் பிர­தே­சத்­தைச் சேர்ந்த மாணவி ஒரு­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

இம்­மா­ணவி சிலாபம் பிர­தேச பாட­சாலை ஒன்றில் கல்வி கற்று வந்­துள்­ள­தோடு இவ்­வ­ருடம் டிசம்பர் மாதம் இடம்­பெ­ற­வுள்ள க. பொ. த. சாதா­ரண தரப் பரீட்­சைக்குத் தோற்ற இருந்­த­தாகவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பாட­சா­லையின் மாணவத் தலை­வி­யா­கவும் செயற்­பட்ட இம்­மா­ணவி படிப்­பிலும் சிறந்து விளங்­கி­யுள்ளார். இம்­மா­ண­வியின் தந்தை சிறுவர் துஷ்­பி­ர­யோகக் குற்­றச்­சாட்­டுக்­குள்­ளாகி நீதி­மன்­றத்­தினால் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு பல்­லே­கலே சிறைச்­சா­லையில் சிறை­வாசம் அனு­ப­வித்து வரு­வ­தா­கவும் தெரிய வரு­கின்­றது. இவ்­வாறு இம்­மா­ண­வியின் தந்­தையின் செயலைச் சுட்­டிக்­காட்டி அம்­மா­ண­வியின் பாட­சாலை நண்பர்கள் அடிக்­கடி இம்­மா­ண­வியை கேலி செய்து வந்­ததால் மன­வி­ரக்­திக்­குள்­ளா­கி­யி­ருந்த இம்­மா­ணவி இது பற்றி தனது தாயி­டமும் கூறி­யி­ருந்­துள்­ளமை விசா­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­தி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்­நி­லையில் கடந்த 15ஆம் திகதி பகல் பாட­சாலை விட்டு வீட்­டுக்கு வந்­துள்ள இம்­மா­ணவி தனது தாயைக் கட்டி அணைத்துக் கொண்டு “அம்மா, இனிமேல் என்னால் பாட­சாலை செல்ல முடி­யாது, நண்­பர்கள் கேலி பண்­ணு­கின்­றார்கள்...” என அழு­துள்­ள­தா­கவும், அதன் பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் அறை­யினுள் தனது கழுத்துப் பட்­டி­யினால் சுருக்­கிட்டுக் கொண்­டி­ருந்­ததை அவ­தா­னித்து உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்று அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர்.

இவ்­வாறு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலை­யி­லேயே சிகிச்சை பல­னின்றி நேற்று முன்­தினம் இம்மாணவி அங்கு உயிரிழந்துள்ளார். இம்மாணவியின் சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனை நேற்று முன்தினம் மாலை சிலாபம் வைத்தியசாலையில் இடம்பெற்றதோடு சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவர் துஷ்­பி­ர­யோகத்தில் தந்தை சிறைக்கு சென்றதால், மகள் தற்கொலை... இது சிலாபத்தில். i சிறுவர் துஷ்­பி­ர­யோகத்தில் தந்தை சிறைக்கு சென்றதால், மகள் தற்கொலை... இது சிலாபத்தில். i Reviewed by Madawala News on 7/27/2016 11:57:00 AM Rating: 5