Free Space

ஆங்கில பாட பரீட்சையில் சிங்கள கேள்விகள். மாணவர்கள் குழப்பத்தில். i



தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திட்குட்பட்ட பாடசாலைகளுக்கு 2ஆம் தவணைப் பரீட்சை நேற்று வியாழக் கிழமை ஆரம்பமாகி பரீட்சை இடம் பெற்று வருகின்றது.

இந் நிலையில் இன்று வெள்ளிக் கிழமை 5 ஆம் தர மாணவர்களுக்கான ஆங்கில பாட பரீட்சை இடம் பெற்றது.இவ் பரீட்சை தாள் நான்கு பக்கங்களை கொண்டிருந்தது.

இதில் முன் இரண்டு பக்கங்கள் ஆங்கில வினாக்கள் காணப்பட்டதோடு மற்றைய இரண்டு பக்க வினாக்கள் சிங்கள பாட வினாக்களாக காணப்பட்டதினால் இப் பரீட்சை ஆங்கில பரீட்சையா அல்லது சிங்கள பாட பரீட்சையா என குழப்பமடைந்து பரீட்சை எழுதியதாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் கவலை தெரிவித்ததனர்.

அத்தோடு முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு விடுமுறை வழங்கப்பட்டு திங்கட் கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக் கிழமை உடனடியாக இரண்டாம் தவணைப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டதாலும் தாம் போதுமான வகையில் பரீட்சைக்கு தயாராகி தோற்றமுடியாது போனதாகவும் மாணவர்கள் கவலை தெரிவிப்பதோடு இனிமேல் இவ்வாறான தவறுகள் நடக்காத வகையில் மூதூர் வலயக் கல்வி அலுவலகம் நடந்து கொள்ள வேண்டுமெனவும் மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றர்.



ஆங்கில பாட பரீட்சையில் சிங்கள கேள்விகள். மாணவர்கள் குழப்பத்தில். i ஆங்கில பாட பரீட்சையில் சிங்கள கேள்விகள். மாணவர்கள் குழப்பத்தில். i Reviewed by Madawala News on 7/15/2016 11:01:00 AM Rating: 5