திட்டமிட்டு பாலியல் குற்றச்சாட்டா? உண்மை நிலை என்ன? i



மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம் மன்சூர் அவர்களினால் அம்பாறை பிரதி வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் அவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான மறுப்பறிக்கை தொடர்பான செவ்வி.

செவ்வி கண்டவர் ஏ.எல்.எம்.அஸ்லம்

அண்மைய சில நாட்களாக கிழக்கு மாகாணக்கல்வித் துறையை உலுக்கி வரும் திருகோணமலை மாவட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் ஒருவரின் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக மடவளை நியூஸ் செய்திச்சேவையில் வெளியாகிய செய்தி ஒன்று தொடர்பாக மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் 25.07.2016ம் திகதி 'என் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டானது ஏ.எல்.எம்.முக்தாரின் திட்டமிட்ட சதியாகும்' என்ற தலைப்பிலான காணொளியுடன் கூடிய திரு. மன்சூரின் நேர்முக செவ்வி தொடர்பாக இ.க.நி.சே கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளரும், அம்பாறை பிரதி வலயக்கல்விப் பணிப்பாளருமான ஜனாப். ஏ.எல்.எம்.முக்தார் அவர்களால் மடவளை செய்திச் சேவைக்கு வழங்கப்பட்ட மறுப்பறிக்கை கேள்வி பதில் வடிவத்தில் தரப்படுகிறது. இதிலிருந்து வாசகர்கள் உண்மையை அறிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.

கேள்வி:
தங்களது சகோதரர் ஏ.எல்.எம். அஸ்லம் என்பவர் மடவளை நியூஸ் செய்திச் சேவைக்கு செய்தியாராக உள்ளாரா?

ஜனாப். முக்தார்:
நானறிந்தவரையில் அப்படி ஒரு சகோதரர் ஊடகவியலாளராக இல்லை.

கேள்வி:
ஜனாப் மன்சூர் உங்கள் சகோதரர் அஸ்லம் ஊடாக தாங்கள் செய்திகளை வழங்கி பாலியல் நாடகமொன்றை ஆடுவதாக ஆணித்தரமாகக் கூறியுள்ளாரே?

ஜனாப். முக்தார்:
நாட்டில் எத்தனையோபேர் அஸ்லம் என்ற பெயரில் இருக்கையில் எனது சகோதரர் அஸ்லத்தை செய்தி; வழங்குனராக சித்தரிப்பது அவரது சிறுபிள்ளைத்தனமும், ஊடக தர்மமும் தெரியாத நிலையை எடுத்துக்காட்டுகின்றது. உங்களது பெயரும் அஸ்லம் என்றால் நீங்கள் எனது சகோதரரா?

கேள்வி:
வலயக் கல்விப் பணிப்பாளர் மன்சூர் மீது திட்டமிட்டு பாலியல் குற்றச்சாட்டை சுமத்துவதாக கூறுகிறார் அல்லவா? இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஜனாப். முக்தார்:
நான் ஒருபோதும் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு மன்சூர் மீது பாலியல் குற்றச்சாட்டு எதனையும் சுமத்தவில்லையே தங்களது செய்திச் சேவைக்கு வழங்கிய செய்தியொன்றில் திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த வலயக்கல்விப் பணிப்பாளர் ஒருவரின் பாலியல் துஷ்பிரயோகம் என்பது பற்றியே கூறியிருந்தேன். திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கடமையாற்றுகின்றார்கள் ஏனைய நான்கு பேரும் இச்செய்தியைப் பற்றி அலட்டிக் கொள்ளாத நிலையில் திரு மன்சூர் மாத்திரம் தன்னைக் குறிவைத்து நான் தாக்குவதாக தங்களது செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள காணொளியுன் கூடிய செய்தியின் மூலம் பாலியல் துஷ்ப்பிரயோகத்தில் ஈடுபட்டது தானே என்பதனை ஒப்புக் கொண்டுள்ளார். என்பது எனது கருத்தாகும் 'நுணலும் தன்வாயால் கெடும்' என்பது போல திரு மன்சூர் தங்களுக்கு வழங்கிய செவ்வயின் மூலம் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் மூலமாகவே இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்த மடவளை நியூஸ் நிர்வாகிகளுக்கும், அதன் செய்தியாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி:
அவரது காணொளியில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தது சம்பந்தமாக காணொளியொன்று வெளியிடப்பட்டதாகவும் அதனை தானே (மன்சூர் அவர்களே) வெளியிட்டதாக சந்தேகிக்கப்படுவதாக அவர் குறும் கூற்றுத் தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

ஜனாப். முக்தார்:
சந்தேகமே இல்லை அவரே வெளியிட்டார். சம்மாந்துறை வலயக் கல்வியலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய சமயம் 2010ம் ஆண்டு ஜூன் மாதம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றபோது ஆத்திரம் கொண்ட ஆசிரியர்களால் மன்சூர் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டார். இந்தக் கூட்டத்தில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் அவர்களும் கலந்து கொண்டார். ஆசிரியர்களால் தாக்கப்பட்ட மன்சூர் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியது மாகாணக் கல்லிப் பணிப்பாளர் நிசாம்தான் என்றதொரு ஊகத்தில் ஆத்திரமடைந்து அவரை எப்படியும் பழிவாங்கவேண்டும் என்ற நோக்கில் மாவட்டத்தினைச் சேர்ந்த மாகாண அரசியல்வாதியொருவரின் துணையுடன் ஒரு இட்டுக்கட்டப்பட்ட காணொளியை தயாரித்து அதனை சம்மாந்துறை வலயக் காரியாலத்தில் நடைபெற்ற கல்வி அபிவிருத்திக் கூட்டத்தின்போது 'இக்காணொளியை 80 ஆயிரம் ரூபா செலவு செய்து தயாரித்துள்ளதாகவும் இது பாகம் ஒன்று எனவும் அறியமுகப்படுத்தியமை' எனக்கு நன்கு ஞாபகம் உள்ளது.

கேள்வி: 
தங்களுக்கும் மன்சூர் அவர்களுக்குமிடையில் ஏதாயினும் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் உண்டா?

ஜனாப். முக்தார்:
உண்டு அதுதொடர்பாக நான் திணைக்களத் தலைவருக்கும் மாகாணக் கல்விச் செயலாளருக்குமு; உத்தியோக ரீதியாக கடந்த காலங்களில் அறிவித்துள்ளேன். இவர் சம்மாந்துற வலயக் கல்விப் பணிப்பாளர் காரியாலயத்தில் கடமையாற்றியபோது எனது சுயவிபரக்கோவையில் தாபனக்கோவைக்கு முரணான விதத்தில் எனக்கெதிராக என்னைப் பழிவாங்கும் விதத்தில் தேவையற்ற ஆவணங்களை கோவைபபடுத்தினார். இவருக்கு தாபணக்கோவை விதிமுறைகள் தெரியாது என தெரிவித்து செயலாளரிடம் நான் முறையிட்டதற்கமைய அவருக்கெதிராக நடவடிக்கையெடுக்கப்பட்டது.

கேள்வி: 
நான் அண்மையில் அறியவந்தேன் தங்களால் இவர்பற்றி கல்வியமைச்சுக்கு எழுதிய கடிதமொன்றை திரு. மன்சூர் களவாடியதாக கூறப்படுகின்றதல்லவா? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

ஜனாப். முக்தார்:
நான் ஏற்கனவே கூறியதுபோன்று அவருக்கு தாபனக்கோவை விதிமுறை தெரியாது அதனால் களவாடினாhர் என்பது உண்மை

கேள்வி: 
தங்கள் மீது குற்றம் சுமத்தும் மன்சூர் அவர்கள் ஏன் சம்மாந்துறை வலயத்திலிருந்து இடமாற்றப்பட்டார் என்பது பற்றித் தெரியுமா?

ஜனாப். முக்தார்:
ஆம் இவர் சம்மாந்துறை வலயத்தில் கடமையாற்றிய போது அங்கு தளபாட மோசடியொன்று இடம்பெற்றது. இந்த மோசடி தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய எஸ்.பாஸ்கரன் என்பவரது தலைமையில் மூவரடங்கிய விசாரணைக்குழு விசாரணை ஒன்றை மேற்கொண்டு கல்வியமைச்சிடமும் ஆளுனரிடமும் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் இவர் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சிற்கு 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் இணைப்புச் செய்யப்பட்டார்.

கேள்வி: 
திரு. மன்சூர் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சில் என்ன பதவியில் இணைப்புச் செய்யப்பட்டார்?

ஜனாப். முக்தார்:
அவர் அங்கு எந்தப்பதவியிலும் இணைப்புச் செய்யப்படவில்லை. ஆரம்பத்தில் கிடப்பில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் 2014 ஏப்ரல் மாதமளவில் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராக இருந்த சிறந்த நிர்வாகி திரு.விஜயானந்தமூர்த்தி அநியாயமான முறையில் அப்பதவியிலிருந்து அகற்றப்பட்டு கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி வலயக்கல்விப் பணிப்பாளராக புகுந்து கொண்டார்.

கேள்வி: 
மூதூர் வலயத்தில் எவ்வளவு காலம் வலயக்கல்விப் பணிப்பாளராக மன்சூர் கடமையாற்றினார்?

ஏ. எல். எம். முக்தார்: 
சுமார் 05 மாதங்கள் கடமையாற்றினார். அங்கு கடமையாற்றிய காலப்பகுதியில் அதிபர்கள், ஆசிரியாகள், உத்தியோகத்தர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மீண்டும் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சிற்கு உதவிச் செயலாளராக இணைக்கப்பட்டார்.


கேள்வி: 
உதவிச் செயலாளர் பதவி என்பது இவருடைய தரத்தை விட குறைந்த பதவியா? அல்லது கூடிய பதவியா?

ஜனாப். முக்தார்:நிச்சயமாக இது குறைந்த தரப்பதவி. ஆனால் அவர் இ.க.நி.சே முதலாம் தர உத்தியோகத்தர். இவர் இப்பதவிக்கு இணைக்கப்பட்ட போதே இ.க.நி.சே கிழக்கு மாகாணச் சங்கச் செயலாளர் என்ற வகையில் அதற்கான எதிர்ப்பை வெளியிட்டேன்.

கேள்வி: 
சம்மாந்துறை வலயத்தில் அவர் கடமையாற்றிய காலப்பகுதியில் தளபாட மோசடி இடம்பெறவில்லை என கூறுகிறாரே அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

ஜனாப். முக்தார்:
இந்த மோசடி பற்றி ஆதாரபூர்வமாக தேவையான ஆவணங்களுடன் உரிய இடங்களுக்கு முறையிட்டு அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரியவன் நான்தான். உண்மையில் அங்கு பாடசாலைகளில் தளபாட திருத்த வேலைகளுக்காக 05 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டது. இந்நிதியைக் கொண்டு திருத்தம் செய்வதற்கான ஒப்பந்தக்காரரிடம் அதற்கான கேள்வி அளிப்பை 30.12.2011ம் ஆண்டு வழங்கி 31.12.2011ம் திகதி ஒப்பந்தகாரரால் சகல தளபாடங்களும் திருத்தப்பட்டுவிட்டதாக சமர்ப்பிக்கப்பட்ட பணக்கோரிக்கைக்கு அவர் அனுமதி வழங்கியதன் மூலம் மோசடி நடவடிக்கையில் ஒப்பந்தக்காரர் ஈடுபட்டமைக்கு துணையாக இருந்தமை ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. 880 தளபாடங்களை 24 மணி நேரத்திற்குள் திருத்தியதாக கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்ட வரலாறு இவரது காலத்தில் தான் அரங்கேற்றப்பட்டது.


கேள்வி: 
இம்மோசடி தொடர்பாக இடம்பெற்ற விசாரணையில் என்ன நடைபெற்றது?

ஜனாப். முக்தார்:
தற்போது அவருக்கு குற்றப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அண்மையில் கிழக்கு மாகாணத்திலுள்ள வலயக்கல்விப் பணிப்பாளர்கள் வெளிநாடு செல்வதற்கு தெரிவு செய்யப்பட்ட போது குற்றப்பத்திரம் வழங்கப்பட்டமை காரணமாக இவரது பெயர் நீக்கப்பட்டது.

கேள்வி: 
நீங்கள் இதற்கு முன்னர் கூறினீர்கள் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராக மன்சூர் நியமிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சிற்கு இணைக்கப்பட்டதாக ஆனால் அவர் மீண்டும் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை பற்றி அறிவீர்களா?

ஜனாப். முக்தார்:
ஆம் அறிவேன். அவர் தான் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சில் குறைந்த தரப்பதவியில் இணைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும், அது தனக்கு அவமானம் எனவும் அதனால் என்னை மீண்டும் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்குமாறு கல்முனை மேல்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்து ஒரு நாடகமாடி அப்பதவியை பெற்றுக் கொண்டார். உண்மையில் இவர் ஏன் மாகாணக்கல்வி அமைச்சிற்கு இணைக்கப்பட்டார் என்ற விடயத்தை நீதிமன்றத்திற்கு கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சும், மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவும் தெரிவித்திருந்தால் இவர் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கமாட்டார்.

கேள்வி: 
தளபாட மோசடியில் இவர் கூறுவதுபோன்று யுனிசெப் நிறுவனம் மோசடி இல்லை என்ற சான்றிதழ் வழங்கியிருப்பின் நீதிமன்றத்தில் இவர் தன்னை குற்றமற்றவர் என நிரூபித்து மீண்டும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் பதவியை அல்லவா கோரியிருக்க வேண்டும். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
ஜனாப். முக்தார்:
உண்மையாக அவர் குற்றமற்றவர் என்றிருந்தால் அவர் கோர வேண்டிய இடம் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகமாகும். குற்றமுள்ள மனம் குறுகுறுக்கும் என்பார்கள் அதன் காரணமாகவே அவர் சம்மாந்துறையைக் கோரவில்லை என நினைக்கிறேன்.

கேள்வி: 
இவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டு உங்களால் அரங்கேற்றப்பட்ட நாடகம் என திரு. மன்சூர் கூறுகிறாரே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

ஜனாப். முக்தார்:
நான் நாடகம் நடிப்பதற்கு நடிகனல்ல. அவரைப்போன்ற ஒரு இ.க.நி.சே உத்தியோகத்தர். ஒரு இஸ்லாமிய சிந்தனையுள்ளவன். நல்லதொரு முஸ்லிமாக வாழ முயற்சிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் எவரையும் கலங்கப்படுத்தியது கிடையாது. என்னைப்பற்றி நாடு பூராக நான் எவ்வாறான சேவையாளன் என்பது நன்கு தெரியும். திரு. மன்சூர் என்னுடன் கல்முனை சாஹிறாக்கல்லூரியில் கற்பித்துள்ளார். அங்கு எவ்வாறு நடந்து கொண்டார் என்பதும் எனக்குத் தெரியும். அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கடமையாற்றியுள்ளார். அங்கு எவ்வாறு நடந்துகொண்டார் என்பதும் எனக்குத் தெரியும். சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியபோது அங்கு எவ்வாறு நடந்துகொண்டார் என்பதும் எனக்குத் தெரியும். ஒரு முஸ்லிமின் மானத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதனை எனக்கு எனது பெற்றோர் சொல்லித் தந்துள்ளனர். நான் ஏறக்குறைய 38 வருடங்கள் கல்விச் சேவையில் உள்ளேன். அதனால் இவர் பற்றிய சில விடயங்களை நான் கூறவிரும்பவில்லை.

ஆனால் இவர் திருகோணமலையிலுள்ள ஒரு உல்லாச விடுதியில் ஒரு பெண் ஆசிரியையுடன் இருந்ததாக எனக்கு தொலைபேசி மூலம் சில இளைஞர்களால் கூறப்பட்டது. அவ்வாறு கூறியமைக்கான காரணம் எனக்கும் இவருக்கும் நீண்டநாளான பகையொன்று இருந்து வருவதும், நான் தொழிற்சங்கமொன்றின் செயலாளராகக் கடமையாற்றுவதுமாக இருக்கலாம். அதற்காக நான் நாடகமாடுகிறேன் என்று கூறுவது அபத்தமானது, ஆதாரமற்றது.

கேள்வி: 
திரு. மன்சூர் அவர்களின் நேரடிக் குற்றச்சாட்டு தொடர்பாக ஏதாயினும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உத்தேசித்துள்ளீர்களா?

ஜனாப். முக்தார்:
சமூக வலைத்தளங்களில் வருகின்ற செய்திகள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்லும் ஏற்பாடுகள் இலங்கையின் நீதிமன்ற நடவடிக்கைகளில் இல்லையென்ற காரணத்தினால் அதுபற்றி நான் அலட்டிக்கொள்ளப் போவதில்லை.

கேள்வி: 
தாங்கள் அரசிங்கெதிராக பல வழக்குகளைத் தொடுத்ததாகவும் அவற்றில் பல தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், தோல்வி அடைந்ததாகவும் திரு. மன்சூர் கூறுவதுடன் அவர் அரச சார்பாக தான் தோன்றியதாக கூறுகிறாரே அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

ஜனாப். முக்தார்:
அப்படி எந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படவில்லை. இன்னமும் உயர்நீதிமன்றத்திலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் மாகாணக்கல்வி அமைச்சு, மாகாணப்பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக சுமார் 06ற்கு மேற்பட்ட வழக்குகளை நான் தாக்கல் செய்து இன்றுவரை அவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திரு. மன்சூர் குறிப்பிடுவது போல அரசு சார்பாக அவர் தோன்றுவதற்கு அவர் ஒரு அரச சட்டத்தரணியல்ல. கல்வி அமைச்சின் செயலாளர் சார்பாக நீதிமன்றத்திற்கு சில தடவைகளில் சமூகமளித்துள்ளார் என்பதே உண்மையாகும்.    
திட்டமிட்டு பாலியல் குற்றச்சாட்டா? உண்மை நிலை என்ன? i திட்டமிட்டு பாலியல் குற்றச்சாட்டா? உண்மை நிலை என்ன? i Reviewed by Madawala News on 7/26/2016 06:58:00 PM Rating: 5