Ad Space Available here

பொது பல சேனாவுடன் பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை. iARA.Fareel

முஸ்­லிம்­க­ளுக்கும் அல்­லாஹ்­வுக்கும் எதி­ரான கருத்­து­களைத் தொடர்ந்து பரப்­பி­வரும் பொது­ப­ல­சேனா அமைப் பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருடன் பேச்­சு­வார்த்தை நடாத்தி அதற்­கான விளக்­கங்­களைக் கோரு­வ­தற்கு தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது.


ஞான­சார தேரரை பேச்­சு­வார்த்­தைக்கு அழைக்கும் கடி­தத்தை விரைவில் அனுப்பி வைக்­க­வுள்­ள­தாக தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரி­வித்தார்.பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் தொடர்ந்து பல­வ­ரு­டங்­க­ளாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கிறார்.

அளுத்­க­மையில் நடை­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள் அங்கு அவர் ஆற்றி உரை­யினை அடுத்தே இடம்­பெற்­றன. முஸ்­லிம்­களை அவர் ஏன் எதிர்க்­கிறார். முஸ்­லிம்கள் மீது ஏன் வைராக்­கியம் கொண்­டுள்ளார் என்­பதை அறிந்து கொள்­வது அவ­சி­ய­மாகும். அறிந்து கொண்­டாலே அடுத்த கட்ட நகர்வு பற்றி யோசிக்­கலாம் என்றும் இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி கூறினார்.


இது தொடர்­பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ஞான­சார தேரரின் பேச்­சுக்­களைப் பற்­றியும் அவர் முஸ்­லிம்­க­ளுக்கும் அல்­லாஹ்­விற்கும் நபிகள் நாய­கத்­திற்கும் சவால்­வி­டு­கின்­ற­மை­யையும் உரிய இடங்­களில் முறைப்­பாடு செய்­வ­தி­னாலும்; வழக்கு தாக்கல் செய்­வ­தி­னாலும் மாத்­திரம் தடுத்து விட முடி­யாது.

பல வரு­டங்­க­ளாக அவர் இத­னையே செய்­து­வ­ரு­கிறார். அதனால் அவரை நேரில் அழைத்துப் பேச்­சு­வார்த்தை நடாத்­த­வேண்டும். அவர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­களை அறி­ய­வேண்­டி­யுள்­ளது. இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டுகள் ஏற்­படும் போது அவை பேச்­சு­வார்த்­தைகள் மூலமாகவே தீர்த்­துக்­கொள்­ள­மு­டியும்.

தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மென தனி­யான ஒரு அமைச்சு நிறு­வப்­பட்­டுள்­ளமை நாட்டு மக்­க­ளி­டையே சக­வாழ்­வினை பலப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வாகும்.இத­ன­டிப்­ப­டையில் ஞான­சார தேரரை வெகு­வி­ரைவில் அழைத்து பேச்­சு­வார்த்தை நடாத்­த­வுள்ளோம். பேச்­சு­வார்த்­தையின் போது அவர் முஸ்­லிம்கள் மீது கொண்­டுள்ள சந்­தே­கங்­களை களை­வ­தற்குத் தயா­ரா­கவே உள்ளோம் என்றார்.

மஹி­யங்­க­னையில் கடந்த வெசாக் நோன்­மதி தினத்­தன்று இடம்­பெற்ற சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் மஹி­யங்­க­னையில் வெளி­யிட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­துகள் முஸ்­லிம்கள் மத்­தியில் அச்­ச­நி­லையை உரு­வாக்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த வெசாக் நோன்­மதி தினத்­தன்று மஹி­யங்­கனை விகா­ரையில் மார்க்கப் பிர­சங்கம் செய்த மத­குரு ஒருவர் முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றான கருத்­துகள் வெளி­யிட்­டதால் ஆத்­தி­ர­ம­டைந்த பங்­க­ர­கம்­மன கிரா­மத்தின் முஸ்லிம் இளை­ஞர்கள் பௌத்த கொடி­யினை எரித்­தனர். இத­னை­ய­டுத்து எட்டு முஸ்லிம் இளை­ஞர்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.

இத­னை­ய­டுத்து மஹி­யங்­க­னையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சுவ­ரொட்­டிகள் ஒட்­டிய குற்­றச்­சாட்டின் கீழ் சந்­தே­கத்தின் பேரில் இரு பெரும்­பான்மை இனத்­த­வர்­களும் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்து மஹி­யங்­க­னையில் நடந்த ஆர்ப்­பாட்­டத்தில் ஞான­சா­ர­தேரர் உரை­யாற்­றினார்.

பொலிஸார் உரிய நட­வ­டிக்கை எடுக்­காது விடின் மஹி­யங்­க­னை­யிலும் அளுத்­கம போன்று வன்­செ­யல்கள் இடம்­பெ­றலாம் என எச்­ச­ரித்தார். அவ­ரது உரைக்கு எதி­ராக முஸ்லிம் அமைப்­புகள் பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறை­யிட்­ட­த­னை­ய­டுத்து ஞானசார தேரர் அல்லாஹ்வுக்கும் நபிகள் நாயகத்திற்கும் சவால் விட்டார்.முறைப்பாட்டின் பிரதிகளை நபிகள் நாயகத்தின் ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்பி வைக்குமாறு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


இந்நிலையிலேயே தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஞானசார தேரரை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பொது பல சேனாவுடன் பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை. i பொது பல சேனாவுடன் பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை. i Reviewed by Madawala News on 7/05/2016 12:01:00 PM Rating: 5