Ad Space Available here

அழ­கு­ ரா­ணி குமாரி மகேந்­தி­ரன் மீது தாயார் கொலை வெறித்தாக்குதல் விவகார விபரம்...iபிரிட்­டனில் வசிக்கும் அழ­கு­ ரா­ணி­யான குமாரி மகேந்­தி­ரனை (26) அவரின் தாயார் சித்­ராணி மகேந்­திரன் (74) கத்­தியால் குத்­தி­யமை தொடர்­பான வழக்கு பிரிட்­டனின் வேல்­ஸி­லுள்ள கர்டிவ் கிரவுண் நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­பட்­டது.

வேல்ஸ் பிராந்­தி­யத்தின்  உள்ளூர் அழ­கு­ராணி போட்­டி­களில் பங்­கு­பற்­றிய பின்னர், 2013 மிஸ் வேல்ஸ் அழ­கு­ராணி போட்­டி­யிலும் பங்­கு­பற்­றி­யவர் குமாரி மகேந்­திரன்.

குமாரி மகேந்­திரன் உறங்கிக் கொண்­டி­ருந்­த­போது அவரின் தாயார் கழுத்தில் கத்­தியால் குத்­தி­ய­தாக நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.

தனது தாயாரை தாய­க­மான இலங்­கைக்கு அனுப்­பு­வ­தற்கு தான் ஏற்­பாடு செய்த சில நாட்­களில் இத்­ தாக்­குதல் இடம்­பெற்­ற­தாக அழ­கு­ராணி குமாரி மகேந்­திரன் சாட்­சி­ய­ம­ளித்தார்.

தான் கட்­டிலில் படுத்­தி­ருந்­தபோது, தனது தாயார் தனது
தலை­ம­யிரை கோதி­யதால் இரு தட­வைகள் தான் விழித்­தெ­ழுந்­த­தா­கவும் ஆனால், 'உறங்கு உறங்கு' என தனது தாயார் கூறி­ய­தை­யடுத்து தான் உறங்­கி­விட்­ட­தா­கவும் மூன்­றா­வது தடவை விழித்­தெ­ழுந்­த­போது தனது கழுத்தில் கத்­தியால் குத்­தப்­பட்­டி­ருந்­த­தா­கவும் குமாரி மகேந்­திரன் கூறினார்.

'எனது கழுத்தில் கடும் குத்து விழுந்­ததைப் போல் உணர்ந்தேன். நான் விழித்­தெ­ழுந்­த­போது எனது தாயார் கத்­தி­யுடன் எனக்கு முன்னால் நின்று கொண்­டி­ருந்தார்.

இதனால் நான் பெரும் அதிர்ச்­சி யும் குழப்­பமும் அடைந்தேன்.

அவர் என்னை கத்­தியால் குத்­தி­னாரா என நான் யோசித்தேன்.

எனது கழுத்தை தொட்டுப் பார்த்­த­போது இரத்தம் வரு­வதை உணர்ந்தேன்.

'அம்மா நீங்கள் என்னைக் கத்­தி யால் குத்­தி­விட்­டீர்கள்' என நான் கூறினேன்' என குமாரி மகேந்­திரன் நீதி­மன்றில் தெரி­வித்தார்.

அதன்பின் தன்னை தனது தாயார் கத்­தி­யுடன் துரத்­தி­ய­தா­கவும் இதனால், தனது இரவு உடை­யுடன் இரத்தம் வடிந்த நிலையில் வீட்­டி­லி­ருந்து தான் வெளியே ஓடி வந்­த­தா­கவும் அவர் கூறினார்.

வேல்­ஸி­லுள்ள கேர்டிவ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கணி­தத்­து­றையில் கல்வி கற்­றவர் குமாரி மகேந்­திரன்.

இத் ­தாக்­கு­த­லினால் தனது செல்­லிடத் தொலை­பே­சியில் இரத்தம் தோய்ந்­தி­ருந்­ததால் அத்­தொலை­பே­சியை 'அன்லொக்' செய்­வ­தற்கு தன்னால் முடி­ய­வில்லை எனவும் இதனால், அம்­பி­யூ­லன்­ஸுக்கு அழைப்பு விடுக்­கவும் தான் சிர­மப்­பட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

'எனக்கு மயக்கம் ஏற்­ப­டு­வது போல் உணர்ந்தேன். அச்­ச­ம­டைந்­தி­ருந்தேன். வீட்டை விட்டு வெளியே செல்ல முயற்­சித்­த­போது என்னால் சாவியை கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

அவர் என்­னுடன் மோதலில் ஈடு­பட்டார். எனக்கு அம்­பி­யூலன்ஸ் தேவை என நான் கூறினேன்.

ஆனால், பொலி­ஸா­ரிடம் என்ன கூறு­வது என்­பது குறித்து நாம் கலந்­து­ரை­யாட வேண்­டு­மென அவர் கூறினார்.

தனது தாயா­ருடன் மல்­லுக்­கட்டி, அவரின் கையி­லி­ருந்து கத்­தியை தான் பிடுங்­கி­ய­தா­கவும் அவரை தள்­ளி­விட்டு விட்டு முன்­புற கதவை நோக்கி ஓடி­ய­தா­கவும் குமாரி மகேந்­திரன் தெரி­வித்தார்.

குமாரி மகேந்­திரன் கத்­திக்­கொண்டே வீதியில் சென்­றதை தான் கண்­ட­தாக அய­ல­வ­ரான எலின் கூப்பர் எனும் யுவதி (18) சாட்­சி­ய­ம­ளித்தார்.

'எனக்கு உத­வுங்கள், எனது தாயார் கத்­தியால் குத்தி விட்டார்' என குமாரி சத்­த­மிட்டார் என எலின் கூப்பர் கூறினார்.

இரத்தம் தோய்ந்­தி­ருந்த குமா­ரியை மற்­றொரு அய­ல­வ­ரான நியா டேவிஸ் தனது வீட்­டுக்கு அழைத்துச் சென்று அம்­பி­யூலன்ஸ் வரும் வரை காத்­தி­ருந்­தாராம்.

திரு­மதி சித்­ராணி மகேந்­திரன் தற்­போது நோட்­டிங்ஹாம் நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் உள­வியல் சிகிச்சை பெறு­வதால் அவர் நீதி­மன்­றத்தில் ஆஜ­ராக முடி­யா­துள்­ள­தாக நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.

அவர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் அளவுக்கு திட நிலையில் இல்லை என பல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என சட்டத்தரணி அன்ட்ரூ ஜோன்ஸ் கூறினார்.

சித்ராணி மகேந்திரன் குற்றம் புரிந்துள்ளார் எனவும் அவருக்கான தண்டனை குறித்த அறிவிப்பு எதிர்வரும் செப்டெம்பர் வரை ஒத்தி வைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

அழ­கு­ ரா­ணி குமாரி மகேந்­தி­ரன் மீது தாயார் கொலை வெறித்தாக்குதல் விவகார விபரம்...i அழ­கு­ ரா­ணி குமாரி மகேந்­தி­ரன் மீது தாயார் கொலை வெறித்தாக்குதல் விவகார விபரம்...i Reviewed by Madawala News on 7/28/2016 09:11:00 AM Rating: 5