Free Space

கண்டியிலிருந்து கொழும்பு வருவதால் நல்லாட்சியை வீழ்த்த முடியாது. i



எஸ்.எம். மரிக்கார் எம்.பி

ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பதவியில் அமர்த்தியுள்ளார்கள். அடுத்து வரும் நான்கரை வருடங்களுக்கு ஜனாதிபதியால் அரசாங்கத்தை  கலைத்துவிட முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெரும் கொலன்னாவை பிரதேச மக்களுக்கு சீமெந்து பக்கெட்டுக்களை விநியோகிக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

கண்டியிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை வந்ததற்காக அரசாங்கத்தைப் பதவி கவிழ்க்க முடியாது. 2020வரை இந்த அரசாங்கம் பதவியிலிருக்கும். இந்த அரசை அதுவரை பதவிகவிழ்க்க எவருக்கும் முடியாது.

பொது எதிரணி எனக்கூறிக்கொள்வோர் தமது இருப்பிற்காக மக்களை ஏமாற்ற ஆரம்பித்துள்ளனர். பாதயாத்திரை வந்ததற்காக, சந்திகளில் நின்று கூச்சலிட்டதற்காக அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. இவர்களின் சதிமுயற்சி ஒருபோதும் வெற்றியளிக்காது. அடுத்த பொதுத் தேர்தல் வரை இவர்கள் காத்திருக்க வேண்டும்.

ஆட்சியைக் கவிழ்க்கும் பொறுப்பு பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். பசில் ராஜபக்ஷ என்பவர் தேர்தலில் தோல்வி ஏற்பட்டதும் அமெரிக்காவுக்கு தப்பிச்செல்பவர். இது அனைவருக்கும் தெரியும். அதுமாத்திரமன்றி நீதிமன்றத்தினால் சிறையில் அடைக்கப்பட்டதும் ஏதாவது நோய்வந்துவிடும்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவார். கண்டியில் இருந்து கொழும்புக்கு வர இருந்த பசில் இப்போது நோய்வாய்ப்பட்டிருக்கிறார். இவ்வாறிருக்கையில் கண்டியிலிருந்து பிலிமதலாவைக்கு வருமுன்பே பசிலுக்கு வருத்தம் பிடித்து விடும் என்றும் கூறினார்.

--
Siraj M Sajahan
கண்டியிலிருந்து கொழும்பு வருவதால் நல்லாட்சியை வீழ்த்த முடியாது. i கண்டியிலிருந்து கொழும்பு வருவதால்  நல்லாட்சியை வீழ்த்த முடியாது. i Reviewed by Madawala News on 7/26/2016 06:38:00 PM Rating: 5