கன­ரக லொறி­யொன்­றுடன் மோதி பரிதாபமாக உயிரிழந்த சாதிக். #janaza



அம்­பாறை மாவட்­டத்தின் தமண பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வரிப்­பத்­தான்­சேனை பிர­தான சந்­தியில் நேற்று காலை 6 மணி­ய­ளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்­றொ­ருவர் படுகாயமடைந்து அம்­பாறை மாவட்ட போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.


வரிப்­ப­த்தான்­சேனை பாலத்­தடி பிர­தான சந்­தியில் இடம்­பெற்ற இவ்விபத்தில் வரிப்­பத்தான்­சே­னையைச் சேர்ந்த யூ.எல்.சாதிக் (வயது 40) என்­ப­வரே அம்­பாறை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின் உயிரிழந்துள்ளார்.


அம்­பா­றையில் இருந்து ஹிங்­கு­ரா­னையை நோக்கி மிகவும் வேக­மாக சென்று கொண்­டி­ருந்த கன­ரக லொறி­யொன்­றுடன் இந்த மோட்டார் சைக்கிள் தீக­வாபி வீதி­யி­லி­ருந்து பிர­தான சந்­திக்கு அருகில் விபத்து இடம்­பெற்­ற­தாக தமண பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கன­ரக லொறி­யொன்­றுடன் மோதி பரிதாபமாக உயிரிழந்த சாதிக். #janaza கன­ரக லொறி­யொன்­றுடன் மோதி பரிதாபமாக உயிரிழந்த சாதிக். #janaza Reviewed by Madawala News on 7/30/2016 11:18:00 AM Rating: 5