Ad Space avaiable

(படங்கள்) பாசிக்குடாவில் ஒருவர் படுகொலை. k


அனா

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் ஏற்படவிருந்த இனமுருகல் நிலை பொலிஸாரினதும் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டையடுத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
.
நேற்று (07.07.2016) இரவு கல்குடா பொலிஸ் பிரிவில் கல்குடா வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்து தமிழ் சகோதரர் தாக்கப்பட்டு அரிடம் இருந்து இரண்டரை பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட நிலையில் தாக்கப்பட்டவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
.

நேற்று இரவு மரணமடைந்த பாசிக்குடா கடற்கரையில் சுற்றுலா படகு ஓட்டுனரான வாழைச்சேனை வீதி கல்குடாவை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிபிள்ளை பாக்கியராசா (வயது - 51) தனது வீட்டுக்கு அருகாமையில் வாடகைக்கு இருக்கும் இரண்டு சிங்கள சகோதரர்களுடன் இரவு 10.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து பக்கத்தில் உள்ள கடைக்கு சிகரட் வாங்குவதற்காக சென்ற வேளை பாசிக்குடா ஹோட்டல்களில் தொழில் செய்து கொண்டு கல்குடா பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொண்டு இருக்கும் சிங்கள சகோதரர்கள் கடைக்குச் சென்றவர்களை தாக்கியதில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றயவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
.

இச்சம்வத்தையடுத்து கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் இன முருகல் ஏற்படக்கூடிய பதட்ட நிலை ஏற்பட்டது இதனை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பி.டி.ஏ.கருநாயக்க தலைமையில் ஏற்பாடு  கூட்டம் கல்குடா பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பாசிக்குடா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர் எம்.எச்.எம்.. மாஹிர், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் விதானகே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அக் கூட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் ஹோட்டல்களில் வேளை செய்து கொண்டு வீடுகளில் தங்கியுள்ளோர் .

இன்று மாலை 03.00 மணியுடன் வீடுகளை விட்டு வெளியேறி; ஹோட்டல் விடுதிகளில் தங்க வேண்டும் என்றும் ஹோட்டல்களில் பணிபுரியாமல் மேசன் ஓடாவி வேலைகளுக்கு வந்துள்ளோர் தங்களது பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்று எடுக்கப்பட்ட தீர்மானம் பொதுமக்களிடம் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் அமைதிகாத்து கலைந்து சென்றனர்.
.

இக் கொலை சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கல்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்துடன் வேறு எவரும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கல்குடா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


(படங்கள்) பாசிக்குடாவில் ஒருவர் படுகொலை. k (படங்கள்) பாசிக்குடாவில் ஒருவர் படுகொலை. k Reviewed by Madawala News on 7/08/2016 06:49:00 PM Rating: 5