வீடொன்றில் இருந்து இவ்வளவு கஞ்சா . kg



யாழ் குருநகர் கடற்பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த 40 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன், ஒருவர் நேற்று இரவு யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவற்றின் பெறுமதி சுமார் 60 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வீடொன்றில் கஞ்சா இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, யாழ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் தலைமையில் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் மேற்படி கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அதனை வீட்டில் வைத்திருந்த உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சந்தேக நபரையும், மீட்கப்பட்ட கஞ்சாவினையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடொன்றில் இருந்து இவ்வளவு கஞ்சா . kg வீடொன்றில் இருந்து  இவ்வளவு கஞ்சா . kg Reviewed by Madawala News on 7/05/2016 01:07:00 PM Rating: 5