Yahya

இந்த நாட்டில் மிகவும் தோல்வி கண்ட ஒரு அரசியல் தலைவர் என்றால் அது மகிந்த தான். khமஹிந்த ஆட்­சியில் இருந்த பிர­த­ம­ரையும் தற்­போ­தைய பிர­த­ம­ரையும் ஒப்­பிட்டுப் பாருங்கள். முன்­னைய ஆட்­சியில் பிர­தம அமைச்சால் எத­னையும் சாதிக்க முடி­ய­வில்லை. ஆனால் தற்­போ­தைய பிர­தம அமைச்சு மூலம் பாரிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்ளோம். இன்று நாட்டில் இடம்­பெறும் அனே­க­மான அபி­வி­ருத்திப் பணி­களும் திட்­டங்­களும் பிர­தம அமைச்சின் கீழேயே இடம்­பெ­று­கின்­றன என்று ஐ.தே.க.வின் பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரி­வித்தார்.

கண்டி குயீன்ஸ் ஹோட்­டலில் இடம்­பெற்ற ஐ.தே.க.வின் பிர­தேச மட்ட அமைப்­பா­ளர்­க­ளது கூட்­டத்­தி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.
அவர் மேலும் கூறு­கையில்,

கண்டி மாவட்ட மக்­க­ளுக்கு விசே­ட­மாக நான் நன்றி செலுத்­தக்­க­ட­மைப்­பட்­டுள்ளேன். ஏனெனில் கடந்த இரண்டு தேர்தல்­க­ளிலும் எமக்கு அமோக வெற்­றியைப் பெற்றுத் தந்­த­வர்கள் கண்டி மாவட்ட வாக்­கா­ளர்­க­ளாவர். தேர்தல்கள் வரும்­போது நாம் எமது பிர­தேச கிளை­க­ளு க்கு வழக்­க­மாக 10 சத­வீத அங்­கத்­த­வர்­களை புதி­தாக இணைத்­துக்­கொள்­ளும்­படி கேட்டுக் கொள்­வது உண்டு. நாம் உள்­ளூராட்சித் தேர்தல் ஒன்றை எதிர்­கொள்­கி றோம். அதற்­காக எதிர்­வரும் செப்­டெம் பர் மாதம் 30ஆம் திக­திக்கு முன் 20 சத­வீ­தத்தால் ஒவ்­வொரு கிளையும் அங்­கத்­தவர் தொகையை அதி­க­ரிக்க வேண்டும் எனக் கேட்­டுக்­கொள்­கிறோம். ஏனெனில் 70 வருட வர­லாற்றைக் கொண்ட எமது கட்­சி யால் அது முடி­யாத காரி­ய­மா­காது.

2015இல் ஏற்­பட்ட அரசியல் மாற்­றத்தின் போது பொது மக்கள் எங்­க­ளிடம் சந்­திர மண்­ட­லத்­தையோ, நட்­சத்­திர மண்­ட­லத்­தையோ கொண்டு வந்து தரும்­படி கேட்­க­வில்லை. அவர்கள் கேட்­டது நியா­ய­மான ஒரு சமூ­கத்தை கட்டி எழுப்­பும்­ப­டியே கேட்­டனர். நாம் ஆட்சி அமைத்து இன்னும் ஒரு வருடம் கூட பூர்த்தி அடை­ய­வில்லை. ஆனால் இடைப்­பட்ட இக்­கா­லத்தில் நாம் பாரா­ளு­மன்­றத்­திற்கு அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுத்­துள்ளோம். ஜனா­தி­பதி அதி­கார முறையில் மாற்­றங்­களை ஆரம்­பித்து விட்டோம், சுயா­தீ­ன­மான ஆணைக்­கு­ழுக்கள் ஸ்தாபிக்­கப்­பட்டு விட்­டன. தகவல் தெரிந்து கொள்ளும் சட்­ட­மூலம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. மனித உரி­மை­களை உறு­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்ளோம். 11 மாதங்­களில் இவ்­வ­ளவு தூரம் செல்ல முடிந்­தது.

இப்­ப­டி­யான பல மாற்­றங்­களை உரு­வாக்கி வரும் எம்மைப் பார்த்து கூட்டு எதிர்க்­கட்சி என்ற அமைப்பு மீண்டும் அவர்­க­ளுக்கு அதி­கா­ரத்தைக் கேட்­கின்­ற னர். அதனை விட்­டுக்­கொ­டுக்க நாம் தயா­ரி ல்லை.

கடந்த ஆட்­சியின் தலை­வ­ராக இருந்த மஹிந்த ராஜ­பக்ஷ பாரா­ளு­மன்றில் வகிக்­காத பதவி எது எனக் கேட்க விரும்­பு­கிறேன்.

சாதா­ரண எம்.பி.யாக, அமைச்­ச­ராக, எதிர்க்­கட்சித் தலை­வ­ராக, பிர­த­ம­ராக, ஜனா­தி­ப­தி­யாக 10 வருடம் இவை அனைத்தையும் பெற்றிருந்தவர்.

அவரது ஆட்சிகாலத்தில் அதுவும் சகல அதிகாரங்களையும் வைத் துக்கொண்டு அன்று செய்யாததை இதன் பிறகா செய்யப்போகிறார். எனவே இந் நாட்டில் மிகவும் தோல்வி கண்ட ஒரு அரசியல் தலைவராகவே அவரை நான் காண்கிறேன் என்றார்.
இந்த நாட்டில் மிகவும் தோல்வி கண்ட ஒரு அரசியல் தலைவர் என்றால் அது மகிந்த தான். kh இந்த நாட்டில் மிகவும் தோல்வி கண்ட ஒரு அரசியல் தலைவர் என்றால் அது மகிந்த தான். kh Reviewed by Madawala News on 7/25/2016 11:32:00 AM Rating: 5