Kidny

Kidny

தலைவர்களுக்கு மோசமான அனுபவம் ஏற்படும் போது தான் மக்களை பற்றி சிந்திக்கிறார்கள். (கண்டி அரசியல்வாதிக்கு வந்த எரிச்சல் பற்றி..) kn



கண்டி மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று கண்டி கச்சேரியில் நடைபெற்றது. இதன்போது மாவட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது அங்கு தாமாதமாக வருகை தந்த மத்திய மாகாண கல்வி அமைச்சர் எதிரிவீர வீரவர்தன முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.

தான் கண்டி பூஜா பிட்டியவில் இருந்து கண்டி கச்சேரிக்கு வருவதற்கு தனக்கு சுமார் அரை மணித்தியாளமே செல்வதாகவும் கண்டி மகியாவை பாதை விஸ்தரிப்பு பணிகள் இடம்பெறுவதால் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் சென்றதாகவும் 40 நிமிடங்கள் வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த பிரதேசத்தில் கடந்த சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறும் நிலையில் அங்கு பெரும் வாகன நெரிசல் காணப்படுவாதும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவது அறிந்ததே.. கண்டியில் இருந்து அடுத்த ஊர் கட்டுகஸ்தோட்டைக்கு வரவே ஒரு மணித்தியாலம் பிடிக்கும் .

இந்நிலையில் தங்களுக்கு மோசமான அனுபவம் ஏற்படும் போது மட்டும் தான் மக்கள் தொடர்பில் தலைவர்கள் சிந்திக்க தொடங்குவது வேதனைக்குரிய விடயமாகும்...
தலைவர்களுக்கு மோசமான அனுபவம் ஏற்படும் போது தான் மக்களை பற்றி சிந்திக்கிறார்கள். (கண்டி அரசியல்வாதிக்கு வந்த எரிச்சல் பற்றி..) kn தலைவர்களுக்கு மோசமான அனுபவம் ஏற்படும் போது தான் மக்களை பற்றி சிந்திக்கிறார்கள். (கண்டி அரசியல்வாதிக்கு வந்த எரிச்சல் பற்றி..) kn Reviewed by Madawala News on 7/13/2016 12:38:00 PM Rating: 5