Yahya

சாமானியனின் பார்வையில் கிழக்கின் எழுச்சியும் வபா பாறுக்கும். l(நௌஷட் அகமட் லெப்பை)

இரண்டுமணிநேரம் கிழக்கின்எழுச்சி ஸ்தாபகர் வபாபாறுக்குடன்
அக்கரைப்பற்றிலிருந்து “மோட்டர் சைக்கிள்” இல் ஆரம்பிக்கிறது நம் பயணம்.
கிழக்கின் எழுச்சி வபா பாறுக்குடன் ஏற்கனவே பரீட்சயமான எனது நண்பர் வண்டியைச் செலுத்த பின்னிருக்கையில் நான், கல்முனையை நோக்கி…..

கிழக்கின் எழுச்சி குறித்துக் கலாய்க்கும் அந்த மனிதனைக் கண்டு கருத்துக்களால் முட்டிமோதுவது எனது இலக்கு.

நோன்பு 25, மதியம் 2.30 மணி.

அக்கரைப்பற்றிலிருந்து கல்முனையை நோக்கி அரசியல் தூது போனால், ஐக்கியம் வந்தால், முஸ்லீம் தேசிய அரசியலுக்கு ஆயுள் ஜாஸ்தி.
இதை நான் சொல்லித் தான் வாசகன் அறியவேண்டும் என்ற அவசியம் இல்லை. வரலாறு சாட்சி.

தாடி நீண்டிருந்தாலும் “தொப்பை” இல்லாத வயிறு அந்த மனிதனுடன் ஆழ அகலமாய் பேசலாம் என்ற நம்பிக்கையைத் தந்தது……

அவர் அணிந்திருந்த “பெனியன்” எளிமையை மௌனமாய் பேசியது.
அந்த எளிமை என்னுள் இரக்கமாய் ஊறிற்று.

எனது கொள்கையும் கருத்தும் வேறானபோதிலும் அந்தமனிதனின் தனியுருவக் காட்சிப்படுத்தல் ஒரு புரட்சிக்காரனை தோலுரித்துக் காட்டியது.
இரண்டு கண்ணும் காந்தமாய் காதல் பேச, மூக்கு நுனி உருவியவாள் போல் சிமிட்டி நின்றது.

ஒவ்வொருபேச்சின் இடைவெளிக்குள்ளும், அந்தமனிதன் பேர் போனபுத்தகங்களிலிருந்தும் பெருநாவல்களிலிருந்தும் குறிப்புக்களை ஒப்பிகருத்தாடல் செய்வதுகற்றவரை எளிதில் கவரும்.

இலங்கையில் முஸ்லீம் அரசியலை நுட்பமாக எழுதித்தரிவித்த இந்திய எழுத்தாளருடைய

(ஆர். வசுந்தரமோகன்)

Identity crisis of Sri Lankan Muslims By R.Vasundhara Mohan

புத்தகமொன்றை எனது நண்பரிடம் பெற்றுத் தருமாறு அவர் வினவியவிதம், அந்தமனிதர் வாசிப்பை சுவாசிக்கிறார் என்று எண்ணத் தோன்றியது.
அவர் வீட்டுச் சூழல், அடிப்படையில் ஒரு இஸ்லாமிய கட்டுமானம் கொண்டது. அவர் இளவயது உறவினர் (மகனாக இருக்கலாம்) அசர் தொழுதுவிட்டு வீட்டினுள் நுழைந்தவிதமும் உடை நடையும் அதை சொல்லிச் சென்றது.

இனி அவர் பேசியவரிகள் இவை……

1. என்னுடைய உடல் நிலை ஒத்துளைக்க மறுத்ததனால் கடந்த 3 வருடத்தில் ஒரு முறைதான் வீட்டைவிட்டு வெளியேறி பிரயாணம் செய்திருக்கிறேன்.

2. ஹசன் அலி மு.காவில் இருந்த ஒரே ஒரு ஆரம்பகர்த்தா. ஹசன் அலி அடிமரம் வரை அறுக்கவிட்டாலும், ஆணிவேரை தொடவிடமாட்டார்.

3. ஹக்கீம் முஸ்லீம்களின், முஸ்லீம் கோங்கிரசின் ஒரே ஒரு நம்பிக்கையாக இருந்த ஹசன் அலியையும் விரட்டுவதற்கு, கட்சியைவிட்டு ஓட்டுவதற்கு முடிவெடுத்த பிறகும், நான் இந்த மக்களுக்காக குரல் கொடுக்காதுபோனால் – அல்லாஹ் எனக்கு முஸ்லீம் கோங்கிரஸ் ஊடாகதந்த அரசியல் அநுபவத்திற்கும், முதிர்ச்சிக்கும், ஏனைய ஆற்றல்களுக்கும் பதில் சொல்லவேண்டிவரும் என்ற அச்சம் தான் கிழக்கின் எழச்சியாய் என்னை உதிக்கவைத்தது.

இனி என்னுடைய கணிப்பு…..

1.கிழக்கின் எழுச்சி வபா பாறுக்குடைய உடல் நிலை ஒத்துழைக்காத போதும் துணிந்து இந்த சமூகத்திற்காய் குரல் கொடுக்க, புரட்சிப்படையெடுக்கமுன் வந்த அவருடைய இறைவனுக்கான உள்ளச்சப் பணியை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

2. முஸ்லீம் அரசியலில் நல்ல, நேர்மையான மாற்றத்தை உண்டு பண்ணத்துடிக்கும் இளைஞர்களும், சமூக அரசியல் ஆர்வலர்களும் முடிந்தால் கிழக்கின் எழுச்சி ஸ்தாபகரை ஒருமுறை நேரில் சந்திப்பது அவர் குறித்தான உண்மையான பார்வையையும், அபிப்பிராயத்தையும் தரும்.

3. அவருடைய வயதும், தோற்றமும், உடல் நிலையும் 3 விடயங்களை சொல்லிநிற்கிறது.

1. செல்வத்தை (பணத்தை) அல்லது ஹராமான வழியில் பெண்களை அடையவேண்டும் என்ற மாயை அவரிடம் கிஞ்சிற்றும் கிடையாது. 3 வருடங்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாத உடல் நிலை அசௌகரியங்களை கொண்ட அந்த மனிதனுக்கு, பொன், பெண் ஒரு பொருட்டே அல்ல.

மட்டுமல்லாமல் ஆரம்பகாலத்திலேயே பேரும் புகழும் கொண்ட குடும்பப் பின்னணியை கொண்டவர்.

(காணாமல் கண்டவர் அல்ல).

மு.காவின் ஆரம்பகால கட்சிப்பணிக்கும், வளர்ச்சிக்கும் அந்த நாட்களிலேயே பத்து இலட்சத்திற்கும் மேல் உதவிபுரிந்த பெரும் சமூகப் போராளி அவர்.
2. பதவிமோகத்திற்கு அவரிடம் இடமில்லை. வபா பாறுக்குடையவாதம் புரட்சிக்கு தலைமை தாங்கி அடுத்த சந்ததிக்கு நல்ல அரசியல் மாற்றத்தைகொடுப்பதுதான்.

ஹகிமுடையவாதம் “ஆம் நான் தலைமைப் பதவியைவிட்டுக் கொடுக்கத் தயார், அதைசுமப்பதற்கு உங்களில் யார் தயார்”. என்பது.
ஹகிமின் “மாசாலத்துக்கு, மிமிகிரிக்கு” மருந்து கட்டவே வபாபாறுக் துணிந்து தலைமை பதவியை சுமக்க நான் தயார் என்று சொல்கிறார்.
3. படையப்பா…. பாணியில் சினிமாபோஸ் கொடுக்கும் இன்றைய முஸ்லீம் பினாமி அரசியல் கலாச்சாரத்திற்கு வபாபாறுக்கின் வருகை நிச்சயம் முற்றுப் புள்ளிவைக்கும்.

ஒரு இஸ்லாமிய நாகரீக அரசியல் முஸ்லீம் தேசத்தில் மலரும்.
சாமானியனின் பார்வையில் கிழக்கின் எழுச்சியும் வபா பாறுக்கும். l சாமானியனின் பார்வையில் கிழக்கின் எழுச்சியும் வபா பாறுக்கும். l Reviewed by Madawala News on 7/14/2016 04:32:00 PM Rating: 5