Free Space

தனியாக வாழ்ந்து வந்தவர் தீப் பற்றி உயிரிழப்பு.. (கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில்) l



(மொஹொமட் ஆஸிக்)

சிறிய மண் குடிசை ஒன்றில் தனியாக வாழ்ந்து வந்த 72 வயதுடைய மூதாட்டி ஒருவர் தீப் பற்றி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.

கட்டுகஸ்தோட்டை முல்லேகம என்ற பிரதேசத்தில் இடம் பெற்ற இத் தீச் சம்பவத்தில் காயமடைந்துள்ள இம்மூதாட்டி கண்டி வைத்திய சாலையில் சிகிற்சை பெற்று வந்த நிலையில் இன்று 15 ம் திகதி அதிகாலை உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலீஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ரூபசிங்க ஆரச்சிலாகே வஜிரா பாலசூரிய என்ற 72 வயதுடையவராவார்.

கடந்த 13 ம் திகதி காலை இவர் கடும் தீக் காயங்களுடன் கானப்பட்டதாகவும் அதன் பின் அப் பிரதேச கிராம அதிகாரியுட் இனைந்து   மக்கள் முன் வந்து அவரை வைத்திய சாலையில் சேர்த்ததாகவும் அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர.

இருந்த போதும் சிகிற்சை பளனின்றி இன்று 15 ம் திகதி அதிகாலை இவர் உயிரிழந்துள்ளார்.

இவர் சுமார் 30 வருடங்களுக்கு மேல் இவ்விடத்தில் தனியாக வாழ்ந்த போதும் இவர் இறந்த பின் அவரது உரவினர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலர் முன் வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரின் பெரில்  சமுர்த்தி வங்கி உற்பட மூன்று வங்கிகளில் சுமார் 150,000 ரூபாய் பணம் இருப்பதாகவும்  தெரிய வந்துள்ளது.

இவரது மரணம் தொடர்பான திடீர் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று 15  மாலை இடம் பெற உள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.







தனியாக வாழ்ந்து வந்தவர் தீப் பற்றி உயிரிழப்பு.. (கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில்) l தனியாக வாழ்ந்து வந்தவர் தீப் பற்றி உயிரிழப்பு.. (கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில்) l Reviewed by Madawala News on 7/15/2016 02:23:00 PM Rating: 5