இலங்­கையில் “சொன்­னதைச் செய்த” இரண்டு சண்­டி­யர்கள் இருந்­தனர். l



இலங்­கையில் “சொன்­னதைச் செய்த” இரண்டு சண்­டி­யர்கள் இருந்­தனர். அவர்கள் தான் ஒருவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் இன்­னொ­ருவர் ரோஹண விஜே­வீர. இவர்­க­ளுக்கு மத்­தி­யிலும் வீழ்ச்சி காணாது முன்­னோக்கி வந்த எங்­க­ளுக்கு இன்று “முணு­மு­ணுப்­ப­வர்கள்” ஒரு பொருட்­டல்ல எனத் தெரி­வித்­துள்ள அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன,


நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழித்து அதி­கா­ரத்தை பர­வ­லாக்­கு­வதே எமது அரசின் கொள்­கை­யாகும் என்றும் அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

யாழ்ப்­பா­ணத்தில் “ஜன­ரஜ ஊழியர் சங்கம்” அண்­மையில் ஏற்­பாடு செய்­தி­ருந்த நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே சுகா­தார அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்றும் போது, இன்று சிலர் எனக்­கெ­தி­ராக முணு­மு­ணுக்­கின்­றனர். பெரு­மூச்சு விடு­கின்­றனர். இவற்றைப் பார்க்கும் போது எனக்கு சிரிப்புத் தான் வரு­கி­றது. ஏனென்றால் கஸ்கட்டஸ், ரி –56 போன்ற ஆயு­தங்­களை எனது தலையில் குறி­வைத்து மிரட்­டி­ய­வர்­க­ளுக்கு நான் அஞ்­சி­ய­தில்லை.

அவ்­வா­றா­ன­தொரு நிலையில் இன்று எனக்­கெ­தி­ராக செயற்­ப­டு­ப­வர்­களை நான் கண்­டு­கொள்­வ­தே­யில்லை. அவர்­களை எலிக் குஞ்­சு­க­ளா­கவே நோக்­கு­கின்றேன்.

இலங்­கையில் சொன்­னதை செய்த இரண்டு சண்­டி­யர்கள் தான் இருந்­தனர். ஒருவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் மற்­றை­யவர் ரோஹண விஜே­வீர.
கழுத்தை வெட்­டுவோம். தீ வைப்போம் என்றால் அதனை செய்து காட்­டு­வார்கள்.

அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு மத்­தி­யிலும் இத­னைக்­கண்­டு­கொள்­ளாது துணிச்­ச­லுடன் எமது அர­சி­யலை முன்­னெ­டுத்து நாம் பரீட்­சையில் வெற்­றி­பெற்­றுள்ளோம். ஆனால் அவர்கள் தோல்வி கண்­டார்கள்.

நாம் கடந்த காலங்­களில் குண்­டு­க­ளுக் கும் பெட்டன் தாக்­கு­தல்­க­ளுக்கும் மத்தி­யி­லேயே யாழ்ப்­பாணம் வந்தோம். பொலி ஸார் எம்­மீது தாக்­கு­தல்­களை நடத்­தினர். ஆனால் தேசிய பிரச்­சினை தீர்வு தொடர் பில் எமது கொள்­கையில் விடாப்­பி­டி­யாக இருந்தோம். அதி­கா­ரத்தை பர­வா­லாக்கி தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வுகாண வேண் டும். தமிழ் மக்­க­ளுக்கு உரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும் என்­பதில் இன்றும் இருக்­கின்றோம்.

இன்றைய நல்லாட்சியிலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதி லும் தெளிவான கொள்கையிலேயே இருக் கின்றோம் என்றும் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்­கையில் “சொன்­னதைச் செய்த” இரண்டு சண்­டி­யர்கள் இருந்­தனர். l இலங்­கையில் “சொன்­னதைச் செய்த” இரண்டு சண்­டி­யர்கள் இருந்­தனர்.  l Reviewed by Madawala News on 7/16/2016 11:34:00 AM Rating: 5