லசந்த விக்­ர­ம­துங்­க படுகொலை ... கைதான இரா­ணுவ புல­னாய்வு அதிகாரி வெளியிடும் தகவல்கள். l



(எம்.எப்.எம்.பஸீர்)

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவை படு கொலை செய்ய ஒரு­வரை ஒருவர் அறி­யாத இரு குழுக்கள் ஈடு­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

குறித்த கொலை தொடர்பில் கைது செய்­யப்பட்டு தற்­ச­மயம் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்ள இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் பிரே­மா­னந்தா உட­லா­க­ம­விடம் முன்­னெ­டுத்த சிறப்பு விசா­ர­ணை­க­ளி­லேயே இது குறித்த தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந் நிலையில் இது குறித்து தொடர்ந்தும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள குற்றப் புல­னாய்வுப் பிரிவு பிரே­மா­னந்தா உட­லா­கம எனும் தற்­போது கைது செய்­யப்பட்­டுள்ள இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவு சார்ஜன்ட் மேஜரின் மேல­தி­கா­ரிகள் குறித்தும் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. இது வரை முன்­னெ­டுக்­கப்பட்ட விசா­ர­ணை­களில் லசந்த விக்­ர­ம­துங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி படு­கொலை செய்­யப்­ப­டு­வ­தற்கு ஒரு வாரத்­துக்கு முன்னர் கொலை தொடர்பில் 5 சிம் அட்­டைகள் கொள்­வ­னவு செய்­யப்பட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.


இந்த சிம் அட்­டைகள் அனைத்தும், இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் சார­தி­யாக இருந்த கந்­தே­கெ­தர பிய­வன்ச என்­ப­வரால், நுவ­ரெ­லி­யாவைச் சேர்ந்த அவ­ரது நண்­ப­ரான பிச்சை என்­ப­வரின் அடை­யாள அட்­டைக்கு அவ­ருக்கு தெரி­யா­ம­லேயே கொள்­வ­னவு செய்­யப்பட்­டுள்­ளன. லசந்­தவின் கொலைக்­காக மட்­டுமே இந்த 5 சிம் அட்­டை­களும் பயன்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­துடன் அதன் பின்னர் அவை பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பதும் விசா­ர­ணை­களில் தெரி­ய வந்­துள்­ளது.


இந் நிலை­யி­லேயே முன்னர் விசா­ர­ணை­களை மேற்கொண்ட பொலிஸ் குழு பிச்சை, கந்­தே­கெ­தர பிய­வன்ச ஆகி­யோரை கைது செய்­தி­ருந்­த­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு சந்­தே­கிக்­கின்­றது. எனினும் அதற்கு அப்பால் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

எவ்­வா­றா­யினும் தற்­போது கைது செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்ள உட­லா­கம எனும் இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவு உத்­தி­யோ­கத்தர், லசந்­தவின் கொலை இடம்­பெறும் போது கொஹு­வலை பகு­தியில் இருந்த இரா­ணுவ புல­னா­ய்வு முகா­மி­லேயே கட­மை­யாற்­றி­யுள்ளார். குறித்த புல­னாய்வு முகாமில் மூன்று பிரி­வுகள் இருந்­துள்ள நிலையில் அங்கு மேஜர் அன்­சாரின் கீழ் இருந்த பிரி­வி­லேயே உட­லா­கம சேவை­யாற்­றி­யுள்­ள­துடன், இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சுரேஷ் சாலிஹ் இற்கு அவர் நேர­டி­யாக அறிக்­கை­யி­டல்­களை செய்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இந் நிலையில் அடுத்து வரும் நாட்­களில் மேஜர் அன்சார், சுரேஷ் சாலிஹ் மற்றும் முன்னாள் இரா­ணுவ புலனாய்வுப் பிரிவு பணிப்­பா­ள­ராக இருந்த கபில ஹெந்­த­வி­தா­ரண உள்­ளிட்ட பல முன்­னணி இரா­ணுவ புல­னாய்வு உத்­தி­யோ­கத்­தர்கள் இந்த படு­கொலை விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் ஊடாக அறிய முடி­கின்­றது.

தற்­போது கைதா­கி­யுள்ள உட­லா­கம எனும் சார்ஜன்ட் மேஜர் மாத்­தளை பகு­தியைச் சேர்ந்­தவர் என்­பதால் அவ­ருக்கு சிங்­களம் மட்­டு­மன்றி தமிழும் நன்­றாக தெரியும் என கூறும் பொலிஸார் அதனால் அவர் புலிகள் இயக்­கத்தில் இருந்து பிரிந்து வந்த கருணா அம்­மானின் ஆட்­க­ளுடன் இணைந்து பணி­யாற்ற தலைமை அதி­கா­ரி­யாக நிய­மிக்­கப்பட்­டி­ருந்­த­தா­கவும் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

லசந்த விக்­ர­ம­துங்­க படுகொலை ... கைதான இரா­ணுவ புல­னாய்வு அதிகாரி வெளியிடும் தகவல்கள். l லசந்த விக்­ர­ம­துங்­க படுகொலை ... கைதான இரா­ணுவ புல­னாய்வு அதிகாரி வெளியிடும் தகவல்கள். l Reviewed by Madawala News on 7/20/2016 10:18:00 AM Rating: 5