Oceas

தீவிரவாதம் தீர்வாகுமா? l



எம்.எம்.ஏ.ஸமட்

மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்துவதற்காகவே தோன்றியது.  ஒவ்வொரு மனிதனும் நல்வழிபெற்று, மனிதப் புனிதனாக வாழ்ந்து மறைய வேண்டும் என்பதையே அம்மதங்கள் போதித்துக்கொண்டிருக்கின்றன.

அவ்வாறு மனிதனின் நல்வாழ்வுக்கான வழிகாட்டல்களை போதிக்கின்ற   மதங்களைப்; பின்பற்றுகின்ற ஒவ்வொரு சமூகத்திலும் தவறு செய்பவர்களும்; குற்றம் இழைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு சமூகத்தைச் சார்ந்த ஓரிருவர் அல்லது அச்சமூகத்தின் பெயர்கொண்டு சில குழுக்கள் புரிக்கின்ற அநியாயங்களுக்காக, தீவிரவாதச் செயற்பாடுகளுக்காக மக்களை நல்லவழிப்படுத்தும் அச்சமூகத்தைச் சார்ந்த அழைப்பாளர்கள் மற்றும் அச்சமூகத்தின் ஏனையவர்கள் நிந்தனைக்கு உட்படுத்தப்படுவதும் அக்குற்றங்களை அவர்கள் சார்;ந்த ஒட்டு மொத்த சமூகமும் புரிந்ததாக வர்ணிக்க முனைவதும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.


உலகின் 700 கோடி மக்கள் தொகையில்  பின்பற்றப்படுகின்ற மதங்களின் வரிசை நிலையில் அதிகளவிலான மக்கள் பின்பற்றுகின்ற இரண்டாவது மார்க்கமாக இஸ்லாம் உள்ளது.

2010ஆம் ஆண்டின் சர்வதே புள்ளிவிபரங்களின் பிரகாரம,; உலகில் 1.6 பில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். உலக சனத்தொகையில் 23 வீதத்தினை முஸ்லிம்கள் கொண்டுள்ளனர்.

 அதிகளவிலான முஸ்லிம்கள் மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்கின்றனர். ஏறக்குறைய 50 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். முஸ்லிம்களின் எண்ணிக்கையில் 62 வீதமானோர் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்வதாக அப்புள்ளிவிபர அறிக்கை குறிப்பிடுகிறது. பிந்திய விபரங்களின் பிரகாரம் 2050ஆம் ஆண்டளவில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 2.8 பில்லியனாகக் காணப்படுமென குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு முஸ்லிம்களின் சனத்தொகைப்பரம்பல் அதிகரித்துவரும் நிலையில்;, சமகாலத்தில் குழப்பங்களும் குண்டு வெடிப்புக்களும் நிறைந்த நாடுகளாகவும் முஸ்லிம் நாடுகள் காணப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொள்ளப்பட்டும், அங்கவீனமாக்கப்பட்டும், காயப்பட்டும், அகதிகளாக்கப்பட்டும் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் என்ற பெயர்; தாங்;கியவர்களினாலேயே முஸ்லிம்கள் கொள்ளப்படுகிறார்கள் அல்லது கொள்ளப்படச் செய்விக்கப்படுகிறார்கள் என்ற நிலை காணப்படுவதை மறைக்க முடியாது.

இவ்வாறு முஸ்லிம்களில் சில குழுக்கள் புரியும் வன்முறைச் செயல்களை இஸ்லாத்தைக் குறிப்பிட்டு, இஸ்லாமிய பயங்கரவாதம் என்றும் இஸ்லாமியத் தீவிரவாதமென்றும் முத்திரை குற்றமுனைவதும், இஸ்லாமியப் பயங்கரவாதிகள், இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படுவதும்  தீவிரவாத்தையும் பயங்கரவாதத்தையும் அடியோடு வெறுக்கும் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றவர்களின் மனதைப் புன்படுத்துவதோடு, சர்வதேச ரீதியில் முஸ்லிம்களை நெருக்கடிக்குள்ளும் தள்ளச்செய்கிறது.

தீவிரவாதமும் அரபுலகும்

இஸ்லாம் தீவிரவாதப் போக்குக் கொண்ட மார்க்கம் என்றும், இஸ்லாமிய அழைப்பாளர்கள் தீவிரவாத்தை ஊக்குவிக்கிறார்கள் என்றும் முஸ்லிம்கள் பங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் சில சர்வதேச  ஊடகங்கள் உலக மக்களை நம்ப வைக்கும் முயற்சிகளில் சமகாலத்தில் ஈடுபட்டுவருகின்றமை வருந்தத்தக்க விடயமாகும். இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தன் பெயரிலேயே தாங்கியுள்ள ஒரு சாத்வீக மார்க்கம். தீவிரவாதமானலும் சரி பங்கரவாதமானலும் சரி இவை இரண்டும் அந்த சாந்தியையும் அமைதியையும் அடியோடு அழித்தொழிக்கும் செயல்வாதங்களாகும். நாகரியத்தத்துவமிக்க சாந்தியும் சமாதானமும் அநாகரியத்தத்துவமிக்க தீவிரவாதத்துடனும் பயங்கரவாதத்துடனும் ஒருபோதும் ஒரேகோட்டில் பயணிக்க முடியாது.

முஸ்லிம் பெயர்களைக் கொண்டு உருவாகியுள்ள அல்லது இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் வளர்ச்சியை தடுப்பதற்கும், அழிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்காகவும் மாற்றுச் சக்திகளினால் உருவாக்கப்பட்டுள்ள குழுக்களினால் உலகளாவிய ரீதியில் நாளுக்குநாள் மேற்கொள்ளப்படுகின்ற தீவிரவாத மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகள் முஸ்லிம்கள் மீதான நம்பிக்கையை வழுவிலக்கச் செய்து வருகின்றன.

அரபுலகிலும் மேற்குலக நாடுகளிலும்; மேற்கொள்ளப்படுகின்ற மிலேச்சதனமாக தாக்குதல்களும் அதற்கான உரிமை கோரல்களும் முஸ்லிம்கள் மீதான நம்பிக்கையை பெரிதும் வலுவிழக்கச் செய்துள்ளதாக சர்வதேச சமூக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் மீதான மாற்றுக் கண்ணோட்டத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. உயிருக்குப் பயந்து நாடுவிட்டு ஓடிய அகதிகளுக்கான நேசக்கரங்களை முடக்கச் செய்துள்ளது. அச்சுறுத்தல்களை அதிகரிக்கச் செய்துள்ளதாகக்;  குறிப்பிடப்படுகிறது.

இதனால் அந்நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் பெரும் அச்சத்துடனும் அவமானத்துடனும் வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு உரிமை கோருகின்ற கூறப்படுகின்ற அமைப்புக்களின்; பெயரில் இஸ்லாம் என்ற நாமம் குறிக்கப்படுவதனால், முஸ்லிம்கள் தம் உயிரிலும் மேலாக மதிக்கும் இறைத்தூதரும் அவர்களின் உயிர்மூச்சான இறைமறையும் கிடைப்பதற்கரிய செல்வமாக அவர்கள் நம்பும் மார்க்கவும் கொச்சைப்படுத்தப்படும்போது, தீவிரவாத்தையும,; பயங்கரவாதத்தையும் முற்றாக வெறுக்கும் இஸ்லாம் மீதான அவநம்பிக்கையை களைந்து இஸ்லாத்தின் பார்வையில் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுளின் நிலையென்னவென்பதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பை முஸ்லிம்கள் சுமந்திருக்கிறார்கள் என்பதை வலியுறுத்துவது காலத்தின் அவசியமாகவுள்ளது.


சட்டப்படியான வழிமுறைகள் பின்பற்றப்படாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்கே தீவிரவாதம் என தீவிரவாத்திற்கான வரைவிலக்கணம் முன்வைக்கப்படுகிறது. அதேபோன்று, அரசியல் நோக்கத்திற்காக மக்களிடையே பீதியைத் தோற்றுவிக்கும்  வகையில் வன்முறையை மேற்கொள்ளும் போக்கே பயங்கரவாதம் என வரையறை செய்யப்படுகிறது. இந்த வரைவிலக்கணங்களில் சமயம் அல்லது மதம்  சார்பான எந்தவொரு சொல்லும் இடம்பெறவில்லை.


இவ்வாறான நிலையில், சமகாலத்தில் முஸ்லிம் அல்லது இஸ்லாமிய பெயரைத் தாங்கியவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அல்லது அவர்களின் பெயரில் புரியப்படுகின்ற வன்முறைகளை இஸ்லாமிய தீவிரவாதமென்றோ, தீவிரவாதிகளென்றோ அல்லது இஸ்லாமியப் பயங்கரவாதமென்றோ, பங்கரவாதிகள் என்றோ ஒரு சில ஊடகங்கள் முத்திரை குற்ற முனைவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். இவ்விடயத்திலும் கவனம் செலுத்தப்படுவது அவசியமாகும்.


உலக வரலாற்றை நோக்குகின்றபோது, வன்முறையை மிக முறையாகப் பயன்படுத்தி, மக்களிடையே பயங்கரமான சூழலைத் தோற்றுவித்து, அதன்மூலம், குறிப்பிட்ட அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக, இடதுசாரி மற்றும் வலதுசாரி அமைப்புக்கள், தேசியவாத அல்லது பிரிவினைவாதக் குழுக்கள் போன்றவைகளினாலும் புரட்சியாளர்களாலும் தீவிரவாதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்சியுள்ள ஆட்சியாளர்களை, அரசியல் அதிகாரங்களை வீழ்த்தவோ, பேதலிக்கச் செய்யவோ தீவிரவாதம் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்பட்டாலும,; கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்காக தம் மக்கள் மீது அரசுகளே தீவிரவாத்தை பயன்படுத்தியிருக்கிறது. பயன்படுத்திக் கொண்டும் இருக்கிறது. சில ரோமானியப் பேரரசர்களின் ஆட்சி, பிரெஞ்சுப் புரட்சி, நாஜி ஜேர்மனி, ஸ்டாலின் கீழிருந்த சோவித் யூனியன் 1970களில் ஆஜென்டினாவில் மேற்கொண்ட போர் போன்;ற சம்பவங்கள் உட்பட சமகாலத்தில்  மேற்குலக ஆட்சியாளர்களினால் முன்னெடுக்கப்படும் கோரத் தாக்குதல்களையும் அதனால் அப்பாவிகள் கொள்ளப்படுவதையும் தீவிரவாதம் ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் மேற்கொள்ளப்படுவதையும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

இஸ்லாமியப் பார்வையில்; தீவிரவாதம்

மதங்கள் தொடர்பான ஆய்வு மனிதனுக்கு அவசியம். ஆய்வின் விமர்சனங்களுக்கு அந்த மத ஆதாரா நூல்களை, மதத்தை போதித்த தலைவர்களின் போதனைகளை மூலாதாரமாகக் கொள்வது அதைவிட அவசியம். எந்த மதம் குறித்த விமர்சனமும் அம்மதம் போதிக்கும் வேதநூலை ஆராய்ந்து சுயமாக விளங்கி விமர்சிக்கப்படுவது ஆரோக்கியமாக அமையும். ஒரு மதத்;தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, அவற்றின் வழியே வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாது தீவிரவாதச் செயல்களிலும,; பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடுபவர்களை  அடிப்படையாகக் கொண்டு ஒரு மதத்தையோ, அம்மதத்தைப் போதிப்பவர்களையோ, அம்மதத்தைப் பின்பற்றுபவர்களையோ விமர்சிப்பதும் அவர்களை அவற்றுடன் தொடர்புபடுத்துவதும் அறிவுடையமையல்ல.


கொலை புரிதலின் பாதகம் பற்றி திருமறை அல்குர்ஆன் தெளிவாகவே கூறுகிறது. 'யாராவது ஒருவன், ஒரு மனிதனைக் கொன்று விட்டால் அவன் மனித இனம் முழுவதையும் கொன்றுவிட்டதற்குச் சமமாகும்'. 'அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை முறையான நீதி விசாரணயின்றி கொல்லாதீர்கள';. 'ஒரு சாராரின் மீது நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பு உங்களை அத்துமீறலான செயல்களுக்கு தூண்டிவிட வேண்டாம்'. 'நன்மையிலும்  பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்! பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்'. இவ்வாறு மனிதநேயத்திற்காக, மனித உரிமைக்காக எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், மனித நேயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அழகாக போதிக்கும் அல்குர்ஆன், தீவிரவாதத்திற்கும் பயங்கரவாத்திற்கும் சாவு மணி அடிக்கிறது. தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் வெறுத்தொதுக்குகிறது.


குர்ஆனின் இந்தப்போதனை நேடியாக மனிதர்கள் என்று மனித இனத்தை நோக்கிப் கூறுகிறதே தவிர, இஸ்லாத்தை ஏற்றவர்களை மாத்திரம் குறிப்பிடவில்லை. இஸ்லாத்தை ஏற்காதவர்களையும்தான் சுடடிக்காட்டுகிறது. மனித நேயத்தை வலியுறுத்தும் இஸ்லாம் தீவிர வாதத்தையும் பயங்கரவாத்தையும் ஒழிக்க வேண்டுமென்றே போதிக்கிறது. ஏனெனில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் உலக அமைதிக்கு பேரிடியாக மாறிவருகிறது.

அவ்வாறு போதிக்கும் இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறும் ஒரு குழுவினராலோ  அல்லது இஸ்லாமியப் பெயர்களை சுமந்தவர்களினாளோ புரியப்படும் கொலைகளையோ, அநியாயங்களையோ எந்தவிதத்திலும் அங்கீகரிக்க முடியாது. வன்முறைச் செயல்களினால் மனிதர்களைப் படுகொலை  செய்பவர்கள் எப்படி உண்மை முஸ்லிம்மாக இருக்க முடியும்.
இஸ்லாத்தின் முதலிரு மூலாதாரங்களான திருக்குர்ஆனும் நபிமொழியும் மிகவும் தெளிவாகவே இவ்விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.  'பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்: நீங்கள் இறைநம்பிக்கையாளர்கள் என்றால் இதுவே உங்களுக்கு நன்மையாகும்';. மேலும், 'பூமியில் குழப்பம் விளைவிக்க முனனையாதே! நிச்சமாக அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரை நேசிக்க மாட்டான்' என்றும் 'நீங்கள் எல்லை மீறாதீர்கள்! எல்லை மீறுவோரை அல்லாஹ் நேசிப்பதில்லை' என புனித குர்ஆன் தெளிவாகவே மனித இனத்தைப் பார்த்துக்கூறிக்கொண்டிருக்கிறது.


பூமியில் குழப்பம் விளைவித்தல் என்பது விரிவான பொருள் கொண்டதாகும். வன்முறைகள் மூலம் மனிதகுலத்தின் வாழக்கையைச் சீர்குலைப்பது, மக்களின் சொத்துக்களைத் தவறான வழியில் பறிப்பது, கொடுமை இழைப்பது, உயிருக்கும், உரிமைக்கும், இறைமைக்கும,; சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பது, அவற்றிற்கு சேதம் விளைப்பிப்பது வசிப்பிடங்களைத் அழிப்பது, வசிப்பிடங்களை விட்டுத் துரத்துவது என்ற பல அர்த்தங்களை குழப்பம் என்ற சொல் விளக்கி நிற்கிறது. சுருக்கமாகச் சொல்லாப்போனால் இன்று மக்களினாலும் ஊடகங்களினாலும் எதையெல்லாம் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்று அழைக்கப்படுகிறதோ அதையே அல்-குர்ஆன் 'குழப்பம்' (ஃபஸாத்) அல்லது 'எல்லை மீறுதல'; (உத்வான்) என அழைக்கிறது.
இவ்வாறு குர்ஆனில் பல வசனங்கள் இந்தக் குழப்பம் என்ற தீவிரவாத மற்றும் பயங்கரவாதச் செயல்களுக்கு தடைவிதிப்பதாகக் கூறுகிறது.  தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் இறைவன் நேசிப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. '(இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொள்பவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டான். அதன் வாடையோ நாற்பதாண்டு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும';. என இறைதூர் முகம்மது நபி அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இவ்வாறு புனித குர்ஆனினதும் நபியினதும் அறிப்பானது இஸ்லாம் எந்தளவுக்கு இந்த தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அவற்றைப் புரிகின்றவர்களையும் வெறுத்திருக்கிறது என்பதை சாதாரண நபர்களினானும் புரிந்துகொள்ள முடியும்.

புனிதப்;போர்(ஜிஹாத்) என்ற நம்பிக்கையில் உலகளாவிய ரீதியில் சில குழுக்கள்; படுகுழியில் விழுந்துவிடுகின்றனர். தவறாக வழிகாட்டும் அரசியல் பயங்கரவாதிகள் செய்யும் கவர்ச்சிகரமான பிரச்சாரத்தில் மயங்கி பாவத்திற்கு சிலர் துணைபோய்விடுகின்றனர். 'இறைவனின் அன்பை வேண்டிய தலைவருக்குக் கட்டுப்பட்டு உயர்ந்த செல்வத்தை செலவிட்டு, நண்பனுக்கு ஒத்தாசை செய்து, குழப்பத்தைத் தவிர்ந்து புரியப்படும் போர்தான் புனிதபோராகும்'.  மாறாக 'பெருமைக்காவும் பெயர்புகழுக்காகவும் போர்புரிந்து, தலைவருக்கு மாற்றம் செய்து, பூமியில் குழப்பம் விளைவிப்பவர் யாரோ அவர் எந்தப் பயனையும் (அல்லாஹ்விடம்) பெற்றுத் திரும்புவதில்லை' என அழகாக நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அத்தோடு, இஸ்லாத்திற்கும் தற்கொலை குண்டு வெடிப்புக்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. தற்கொலை செய்வதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது. 'உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்.' மேலும் 'நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள்' என எச்சரிக்கும் அல்குர்ஆன் 'எவரேனும் அல்லாவின் வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால் விரைவாகவே நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்' என்றும் கூறுகிறது.

இவ்வாறு தீவிரவாத மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகள் ஊடாகப்; புரியப்படும் கொலைகள் பற்றியும் தற்கொலைகள் பற்றியும் அத்தகயை மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கும்  இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய புனிதப்போருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று இஸ்லாம் தெளிவாக கூறியுள்ள நிலையில், சில சர்வதேச ஊடங்களும் மக்களும் இஸ்லாம் மதத்தை மையப்படுத்தி, இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்றும் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்றும் முத்திரை குற்ற முனைவதை எந்த நீதியில் ஏற்றுக்கொள்வது.


அண்மைக்காலமாக உலக நாடுகள் பலவற்றில்; இடம்பெற்ற மிலேச்சத்தனமாக தீவிரவாதச் தாக்குதல் சம்பவங்களின்; செயல்களின் பின்னர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் முயற்சிகளில் சில சர்வதேச ஊடகங்களும் சமூக வலைத்தளப் பதிவேற்றப்  போராளிகளும் முனைந்துவருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்றாக இருக்க முடியாது.

ஒரு சமூகத்தின் பெயரில் ஒரு சில குழுக்கள் புரிகின்ற அல்லது அக்குழுக்களின் மீது குற்றத்தைச் சுமத்துவதற்காக மாற்று சக்திகளினால் புரியப்படுகின்ற மிலேச்சத்தனமான கொலைகளுக்கும் அதனோடு இணைந்த அநியாயங்களுக்கும் அந்த முழுச் சமூகமும் குற்றச்சாற்றப்படுவதும் குற்றத்தைச் சுமக்க வலியுறுத்துவதான செயற்பாடுகளை மேற்கொள்ளுவதும் எந்தவகையிலும் உலக மனித நாகரிகமாகாது.

ஒரு குற்றத்தை யார் செய்தாலும் அல்லது செய்விக்கப்பட்டாலும் எந்தவகையிலும் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளங்கள் பாதிப்படைந்து புரியப்படும் குற்றத்திற்காக அல்லது தீவிரவாதச் செயற்பாட்டுக்காக ஒரு மதத்திலுள்ள நல்ல விடயங்களை மக்கள் மத்தியில் முன்வைத்து மக்களை நல்வழியில் அழைக்கும் அழைப்பாளர்களை தீவிரவாதத்தோடோ அல்லது தீவிரவாதச் செயற்பாடுகளோடு தொடர்புபடுத்துவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
அது ஒரு மதத்தை அல்லது அந்த மதம்சார்பான நல்ல விடயங்களை மக்கள் மத்தியில் முன்வைக்கும் அழைப்பாளர்களை நிந்திப்பதாகவே அமையும். எந்தவொரு மதமும் மதத் தலைவர்களும் தீவிரவாத்தை ஆதரிக்கவில்லை. ஆதரிக்கவும் சொல்லவில்லை. தீவிரவாதம் ஒரு போதும் பிரச்சினைகளைத் தீர்காது. பிரச்சினைகளுக்குது; தீர்வாகவும் அமையாது. எந்தவொரு பிரச்சினைக்கான தீர்வும் விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு, பேச்சுவார்த்தை என்பவற்றினூடாகவே அடையப்படுவது அவசியமாகும். மாறாக தீவிரவாத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தீர்வை அடைய நினைப்பதால் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியாது.

அவை மேலும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் அழிவுகளையுமே ஏற்படுத்தும் என்பதை சகலரும் உணர்வதும் உணர்த்துவதும் அவசியமாகும்.

தீவிரவாதம் தீர்வாகுமா? l தீவிரவாதம் தீர்வாகுமா? l Reviewed by Madawala News on 7/14/2016 09:47:00 PM Rating: 5