Free Space

நான் முரளிதரன் என்றால் அவுஸ்திரேலியா தந்த பயிற்சியாளர் வேலையை பாரமேடுத்து இருக்க மாட்டேன். அர்ஜுன. l



இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்திருந்தால் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு அவுஸ்திரேலியாவின் பயிற்றுவிப்பாளராக செல்வதற்கு இடமளித்திருக்க மாட்டேன் என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும் துறைமுக கப்பல் துறை அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க இன்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட், ஒலிம்பிக் மற்றும் 20 இற்கு 20 என்ற கருப்பொருளில் இன்று கொழும்பு கிராண்ட் ஒரியன்டல் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

நான் முரளிதரன் என்றால் அவுஸ்திரேலியா தந்த பயிற்சியாளர் வேலையை  பாரமேடுத்து  இருக்க மாட்டேன் . ஆனால் முரளி எடுத்துள்ளார். அவுஸ்திரேலியா முரளி மீது பொய்க் குற்றம் சாட்டிய நாடு அதனால்தான் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அன்று  குற்றம் சாட்டியவர்களே இன்று  முரளியை  நியமிப்பதில் இருந்து நாம்  சரியானவர்கள் என்பதையும் உலகு ஏற்றுக் கொண்டுள்ளது.

எமது நாட்டின் தற்போதைய கிரிக்கெட் நிறுவனத்துக்கு கிரிக்கெட் விளையாட்டில் விருப்பம் இன்மையினால் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு அவகாசம் வழங்க முடியாதுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நான் முரளிதரன் என்றால் அவுஸ்திரேலியா தந்த பயிற்சியாளர் வேலையை பாரமேடுத்து இருக்க மாட்டேன். அர்ஜுன. l நான் முரளிதரன் என்றால் அவுஸ்திரேலியா தந்த பயிற்சியாளர் வேலையை  பாரமேடுத்து  இருக்க மாட்டேன். அர்ஜுன. l Reviewed by Madawala News on 7/26/2016 11:33:00 PM Rating: 5