Free Space

பல்லேகலயில் இலங்கை வீரர் லக்‌ஷான் சந்தகன் உலக சாதனை படைத்தார். Lk

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மெற்கொண்டுள்ள  அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் லக்‌ஷான் சந்தகன் உலக சாதனை படைத்துள்ளார்.
.

1935 ம் வருடம் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவுஸ்ரேலிய வீரர் ப்லீட்வுட் ஸ்மித் அதிகபட்சமாக 64 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார். அந்த சாதனையை லக்‌ஷான் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை தனது கன்னிப்போட்டியில் வீழ்த்தி கிரிக்கட் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது.
.

இதன்படி இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, இன்று கண்டி - பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது.
.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி சார்பாக, துடுப்பாட்ட வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்காத நிலையில், நடு வரிசை வீரரான தனஞ்சய டி சில்வா அதிகபட்சமாக 24 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
.

ஏனைய வீரர்கள் அதனை விடக் குறைவான ஓட்டத்தைப் பெற்ற நிலையில் வௌியேற, 34.2 ஓவர்களுக்கு மாத்திரமே தாக்குப் பிடித்த இலங்கை, 117 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
.

அவுஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேஸில்வுட் (josh Hazlewood), மற்றும் நாதன் லயன் (Nathan Lyon) தலா மூன்று விக்கெட்டுக்களையும், மிச்சல் ஸ்ராக் (Mitchell Starc) மற்றும் ஸ்டீவ் ஒ´கீஃபெ (Steve O´Keefe) ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.
.

இதன்படி அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை விளையாட ஆரம்பித்தது.
.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று 203 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அந்த அணி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.
.

தற்போது இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாட ஆரம்பித்துள்ளது.

பல்லேகலயில் இலங்கை வீரர் லக்‌ஷான் சந்தகன் உலக சாதனை படைத்தார். Lk பல்லேகலயில் இலங்கை வீரர் லக்‌ஷான் சந்தகன் உலக சாதனை படைத்தார். Lk Reviewed by Madawala News on 7/27/2016 05:15:00 PM Rating: 5