Accaddemy

நாமல் சுறா அல்ல. #lka



மேற்­கு­லக நாடுகள் தொடர்ந்தும் என்னை பழி­வாங்­கு­கின்­றன. இதற்கு அச்­சப்­பட்டு பின்­வாங்­கவோ அல்­லது அர­சி­யலை விட்டு ஓடி­வி­டவோ போவ­தில்லை. அனைத்து தடை­க­ளையும் வெற்­றி­கொள்ளும் காலம் கனிந்து வரும் நேரம் வெகு தொலைவில் இல்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார் .

விசா­ர­ணை­களில் சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்பை உள்­வாங்கும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஆட்­சி­யிலும் சர்­வ­தேச சாயலே காணப்­ப­டு­கின்­றது. நாட்டு மக்­களை நீண்ட நாட்­க­ளுக்கு ஏமாற்ற முடி­யாது . நாமல் ராஜ­ப­க் ஷவை சிறை வைத்து விட்டு சுறாவை பிடித்து விட்­ட­தாக மார்­தட்டிக் கொள்­கின்­றனர். நாமல் சுறா அல்ல. ஆனால் அவ­ரது கைது தெளி­வான பழி­வாங்கல் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் முன்னாள் தலை­வர்­களை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த ராஜ­பக் ஷ நேற்று சந்­தித்தார். இந்த சந்­திப்பு பத்­த­ர­முல்லை - நெலும் வீதியில் அமைந்­துள்ள ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நல்­லாட்சி அர­சாங்க எதிர்ப்பு குழுவின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. சந்­திப்பில் கலந்துகொண்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில் ,

இலங்­கையை பொறுத்தவரையில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி கூறு­வது கருத்­துக்­க­ளாக இருக்க முடி­யாது. மாறாக, அர­சாங்­கத்தின் கொள்­கை­யா­கவே காணப்­படும். ஆனால் சிலர் அவ­ரது சில
கூற்­றுக்­களை தனிப்­பட்ட கருத்து என கூறு­கின்­றமை ஆச்­ச­ரி­யப்­பட வைக்­கின்­றது.

 கலப்புவிசா­ர­ணைப்­பற்றி பேசு­கின்­றனர். விசா­ர­ணை­
களில் மாத்­திரம் அல்ல ஆட்­சி­யிலும் அந்த நிலையே காணப்­ப­டு­கின்­றது.
பழி­வாங்­கல்கள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. மேற்­கு­லக நாடுகள் ராஜ­ப­க் ஷக்­களை பழி­வாங்­கு­கின்­றன.

ஆனால் இவ்­வா­றான அடக்­கு­மு­றை­க­ளினால் அர­சி­யலை விட்டு ஓடி­விடப் போவ­தில்லை. மேலும் வலு­வா­கவே செயற்­ப­டுவோம் . இதுவே வர­லாறு . 28 ஆம் திகதி திட்­ட­மிட்­ட­படி வெற்­றி­க­ர­மாக கண்­டியில் இருந்து கொழும்பை நோக்­கிய பேரணி முன்­னெ­டுக்­கப்­படும்.

நாமல் ராஜ­பக் ஷ கைது செய்­யப்­பட்டு சிறை­வைக்­கப்­பட்­டுள்ளார். இதனை அர­சியல் பழி­வாங்கல் இல்லை என கூறமுடி­யாது. ஏனெனில் கைதுசெய்­வ­தற்கு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் இதனை வெளிப்­ப­டுத்­து­வது எவ்­வாறு ? எனவே சுறாவை பிடித்துவிட்­ட­தாக ? நினைக்­கின்­றனர். நாமல் சுறா அல்ல ? எவ்­வா­றா­யினும் எமது அர­சியல் பயணம் தெளி­வா­ன­தா­கவே உள்­ளது.

உள்­ளூராட்சி மன்ற தேர்தல் வரும் போது எவ்­வாறு அதனை எதிர்கொள்­வது என்­பதை அறி­விப்போம். ஆனால் இந்த அர­சாங்கம் தேர்தலை வைக்குமா ? என்ற சந்தேகமே உள்ளது. எமது ஆட்சிக்காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நல்லாட்சி எதிர்ப்பு அணியே நாங்கள். கூட்டு எதிர்க் கட்சி என்ற வகையில் தேர்தல்களை வலுவாக எதிர்கொள்வோம் என்றார்.

நாமல் சுறா அல்ல. #lka நாமல் சுறா அல்ல. #lka Reviewed by Madawala News on 7/14/2016 09:45:00 AM Rating: 5