Accaddemy

வீதிக்கு வந்த ராஜா.. #lka



-முஜீப் இப்ராஹீம்-

கண்டியில் இருந்து கொழும்புக்கு நடந்து வந்தால் ஆட்சியை கவிழ்த்துவிட முடியுமென்று நினைப்பது எவ்வளவு அபத்தமானது!

தேர்தல் ஒன்று வேண்டாம் அப்பச்சி என்று நாமல் கெஞ்சிய போதும் சுமனதாஸவின் கதை கேட்ட ராசாவுக்கு வந்த சோதனைதான் இன்று வீதியில் பரதேசியை போல அலைய வைத்திருக்கிறது!

எதிர்பார்த்தது போல் மக்கள் வெள்ளம் கண்டியில் திரண்டு விடவில்லை என்பது அவர்களுக்கான முதல் கட்ட தோல்வியாகும்.

கூலிக்கு அமர்த்தப்பட்டு கூட்டிவரப்பட்ட கூட்டத்தின் கூப்பாடுகளை நாமல் ராஜபக்‌ஷ தனது முகநூல் பக்கத்தில் நேரடியாக காட்டிக்கொண்டிருக்கிறார்.

அப்பாவுக்காக ஆடித்தானே ஆகவேண்டும்.

பேரணி ஆரம்பத்தில் வந்த மகிந்த பின்னர் கட்டடமொன்றிற்குள் பதுங்கிக்கொள்ள "ஜனாதிபதிதுமாட ஜயவேவா" என்ற கோஷத்தோடு மற்றவர்கள் நகர்ந்து போகிறார்கள்.... அவர்களில் அனேகமானவர்கள் போதையில் இருக்கக்கூடும்.

அவர் ஏதாவதொரு வாகனமொன்றில் ஏறிச்சென்று நாளை எங்காவது பேரணியில் தலையை காட்ட கூடும்.

அவரைப்போலவே அவரது (G)கோளயாக்கலும் வாகனங்களில் நகர்ந்துவிடுவர்.

கூலிக்குமாரடிக்கும் சாதாரண பொதுமக்கள் கால் கடுக்க நடந்துவந்து கொழும்பை அடையக்கூடும்.

இதன் மூலம் அடுத்த சில நாட்களுக்கு

கொழும்பு கண்டி வீதியின் போக்குவரத்து நெரிசலாகும்...

வீதியோர வியாபாரிகளின் அன்றாட பிழைப்பு இல்லாது போகும்...

நிறையப்பேருக்கு தொண்டைத்தண்ணீர் வற்றிப்போகும்....

முன்னர் கருவாட்டு தோற்றத்தில் இருந்து பின்னர் அரசியல் சுகபோகங்களால் குளிரூட்டியின் உதவியோடு ஓரளவு பொலிவைப்பெற்றவர்கள் வெயில் பட்டு மீண்டும் பழைய தோற்றத்தை பெறுவர்...

இவற்றை தவிர இந்த நடைபவனியால் வேறென்னதான் நடந்துவிடப்போகிறது?
வீதிக்கு வந்த ராஜா.. #lka வீதிக்கு வந்த ராஜா.. #lka Reviewed by Madawala News on 7/28/2016 02:20:00 PM Rating: 5