இந்த அரசாங்கத்தை தும்புக் கட்டையால் அடித்து விரட்டனும். #lka



வாழ்க்கை சுமை அதிகரித்திருப்பதால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இந்த அரசாங்கத்தை தும்புத்தடியால் அடித்து விரட்ட வேணடும் என, பியகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் நிமல்கா கொந்தேவேல தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கிராமங்களில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர் கூட தொழில் வாய்ப்பின்றி இருந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில், எப்படி 10 இலட்சம் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் எனவும் நிமல்கா இதன்போது கேள்வியெழுப்பினார்.

மேலும் தான் கொண்டு வந்த தும்புத்தடியை உயர்த்திக் காட்டியே அவர் தனது கருத்துக்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பஷில் ராஜபக்ஷ தற்போது அரசாங்கத்திற்கு பிரச்சினையாகியுள்ளதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட, முன்னாள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

அவர் (பஷில்) அரசாங்கத்தை கவிழ்க்கக் கூடியவர் என்பதால், வரும் 28ம் திகதிக்கு முன்னர் அவரை கைது செய்துள்ளதாக பவித்திரா மேலும் கூறியுள்ளார்.
இந்த அரசாங்கத்தை தும்புக் கட்டையால் அடித்து விரட்டனும். #lka இந்த அரசாங்கத்தை தும்புக் கட்டையால் அடித்து விரட்டனும். #lka Reviewed by Madawala News on 7/20/2016 10:34:00 PM Rating: 5