Oceas

முதலில் வீட்டைப்பாருங்கள் பிறகு நாட்டைப்பார்க்கலாம். #lka



-முஜீப் இப்ராஹீம் -

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை முன்னிறுத்தி நடைபெற்றுவரும் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்யும் ஆணைக்குழுவின் (delimitation commission) மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வு இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இது பற்றிய சில குறிப்புகளை பதிகிறேன்.

₹ இந்த அமர்வு மட்டுமாவட்டத்தில் வாழுகின்ற அனைத்து இனங்களுக்கும் அரசியல் ரீதியில் அதி முக்கியத்துவம் வாய்ந்தது.

₹ எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் முன்னர் வெளியிடப்பட்டு அது பற்றிய ஆட்சேபணைகளை மக்களிடம் ஆணைக்குழு கோரியிருந்தது.

 இதன் பிற்பாடு இன்றைய அமர்வில் இறுதி முடிவுகளாக வருவதற்கு பெரும்பாலும் சாத்தியமான விடயங்கள் இவை.....
1. காத்தான்குடி நகரசபைக்கான ஆசனங்கள் 10 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.

இது முன்னர் 9 ஆக இருந்தது.
இதனை 12 ஆக மாற்றித்தருமாறு  இன்றைய அமர்வில் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

2. மட்டக்களப்பு மாநகர சபைக்கு வழமையாக மஞ்சத்தொடுவாய்,  19 ம் வட்டாரம் ஆகிய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் வாக்குகளை கொண்டு ஒரு முஸ்லிம் பிரதிநிதி தெரிவுசெய்யப்படுவது வழமை.
இப்போதைய புதிய தொகுதி நிர்ணயப்படி அந்த பிரதிநிதித்துவம் இழக்கப்படுகிறது.

இதனால் கணிசமான முஸ்லிம்கள் வாழும் ஒட்டுமொத்த மாநகர சபையிலும் முஸ்லிம் பிரதி நிதித்துவம் இழக்கப்படுகிறது!
மஞ்சந்தொடுவாயினை உள்ளடக்கி பிரிக்கப்பட்டிருக்கும் புதிய தொகுதியில் முஸ்லிம்களின் வாக்காளர் தொகை குறைவானது!
அதாவது 500 க்கு அண்மித்த முஸ்லிம் குடும்பங்களும் 900 தமிழ் குடும்பங்களும் இதனுள் அடங்கும்.

இதேவளை இரட்டை அங்கத்தவர் தொகுதியாக புளியந்தீவு தொகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இங்கே 17 முஸ்லிம் குடும்பங்கள் மாத்திரமே வாழ்கின்றனர்.

எனவே இதனை ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக மாற்றி மஞ்சந்தொடுவாயினை இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்குவதன் மூலம் மட்டு மாநகர சபையின் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும்.
இதற்கான கோரிக்கையும் முன்மொழியப்பட்டுள்ளது.

3. மேலும் காத்தான்குடி நகர சபைக்கான எல்லை நிர்ணய ஒழுங்குகளில் காணப்பட்ட முதலாம் குறிச்சி பகுதியின் ஆற்றோரம் மெத்தைப்பள்ளி பகுதிக்குள் இணைவது போன்ற குழறுபடிகளும் ஆட்சேபணைக்கு உட்பட்டதாக அறிய முடிகிறது.

இந்த அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமர்வில் மட்டு முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில் பல குழறுபடிகளும் குறைபாடுகளும் அடங்கி காணப்பட்ட போதும் அவை பற்றி பேச, ஆட்சேபனைகளை தெரிவிக்க போதியளவு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும், முஸ்லிம்களுக்காக அரசியல் செய்கின்றவர்களையும் காண முடியவில்லை.


இன்றைய நிகழ்வில் முஸ்லிம்கள் சார்பில் அதிகாரத்தில் உள்ள இரண்டு பேரும்,  ஒரு முன்னாள் நகர சபை தலைவரும் மாத்திரமே கலந்து கொண்டது பெருந்துயரம்! //-

மேற் சொன்ன முன் மொழிவுகள் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கினால் ஆணைக்குழுவிற்கு இன்று வழங்கப்பட்டவை என்பதை
அவருடனான உரையாடலில் அறிய முடிந்தது!

வெளிநாட்டு அரசியல் பற்றி கவலைப்படுகிறோம்.....
தேசிய அரசியல் கோட்பாடுகள் பற்றி முழங்குகிறோம்....
சொந்த மண்ணைப்பற்றி பேசுவதற்கு தக்க தருணங்களில் ஆட்கள் இல்லாமல் போவதுதான் இலங்கை முஸ்லிம் அரசியல் பரப்பின் பெருந்துயரம்!
பஸ் போன பிறகு கைகாட்டுவதற்கு இனி யாராவது வரக்கூடும்
முதலில் வீட்டைப்பாருங்கள் பிறகு நாட்டைப்பார்க்கலாம். #lka முதலில் வீட்டைப்பாருங்கள் பிறகு நாட்டைப்பார்க்கலாம். #lka Reviewed by Madawala News on 7/24/2016 10:34:00 PM Rating: 5