நேற்று ஜனாதிபதி - கூட்டு எதிர்க்கட்சி சந்திப்பின் அவுட்புட் இதுதான். #lka



கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள பாதயாத்திரைக்கு எதுவித தடையும் இல்லை என்பதாக ஜனாதிபதி ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க இதனை நேற்றிரவு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை சுதந்திரக் கட்சியை ஒன்றிணைப்பதற்கும், அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கிலும் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்ள கூட்டு எதிர்க்கட்சிக்கு எதுவித தடையும் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுதந்திரக்கட்சியை விமர்சிக்கவோ, கட்சியின் ஒழுங்குவிதிகளை மீறிச் செயற்படவோ ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தல்களில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்ற நிலையில் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மீள்பரிசீலனை செய்யப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ராஜபக்ச தரப்பினருக்கு  அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர்களின் சார்பில் யாரும் கலந்து கொண்டிருக்கவும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

அத்துடன் கூட்டு எதிர்க் கட்சி திட்டமிட்டபடி எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி நடைபவனி கொழும்பில் இருக்கும் என கூட்டு எதிர்க் கட்சியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நேற்று கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நேற்று ஜனாதிபதி - கூட்டு எதிர்க்கட்சி சந்திப்பின் அவுட்புட் இதுதான். #lka நேற்று ஜனாதிபதி - கூட்டு எதிர்க்கட்சி சந்திப்பின் அவுட்புட் இதுதான். #lka Reviewed by Madawala News on 7/26/2016 06:46:00 AM Rating: 5