Ad Space Available here

கிழக்கின் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் வேண்டும். #lkaநாச்சியாதீவு பர்வீன்.

கிழக்கின் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் வேண்டும். இப்போது கிழக்கு மாகாணத்தில் ஒரு கேவலமான அரசியல் கலாச்சாரத்தை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கார்கள்.இந்த பிழையான முன்மாதிரிகளை,சீரழிந்த அரசியல் போக்கை நாம் மாற்றியமைக்க வேண்டும். நமது எதிர்கால பரம்பரைக்கு நல்ல விடயங்கள விட்டுச் செல்ல வேண்டும் என கிராமிய  பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி  அவர்கள் தெரிவித்தார். பிரதியமைச்சரின் பன்முகபபடுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சமூக நிறுவனங்களுக்கு பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு ஏறாவூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

இந்த ஏறாவூர் பிரதேசத்தில் நான் கணிசமான அபிவிருத்தி விடயங்களை செய்துள்ளேன். இந்தப்பிரதேசத்திற்கும் எனக்கும் கடந்த காலங்களில் மிக நெருக்கமான உறவு இருந்தது. இந்த பிரதேசத்திற்கு முடியுமான வளங்களை நான் வழங்கியுள்ளேன். அதனை இங்குள்ள அனேகமானோர் அறிவார்கள். இடைப்பட்ட காலத்தில் அரசியல் ரீதியில் ஏற்பட்ட தொய்வு நிலை எல்லாப்பிரதேசங்களிலும் அபிவிருத்தியிலும்  தொய்வு ஏற்பட்டுத்தான் இருக்கிறது. ஆனால் சிலரின் அரசியல் நடவடிக்கைகள் மிகவும் அசிங்கமாகவும்,அவர்களின் மனசாட்சிக்கு விரோதமான நடவடிக்கையாகவும் காணப்படுகிறது. இவைகள் மாற்றவேண்டும். நான் எதனையும் முன்னால் பேசுகின்ற நேர்மையான அரசியல் வாதி. நான் இப்படி பேசுவதை சிலர் விரும்புவதில்லை, உண்மைக்குப் புறம்பாக பொய்களை பேசி வெறுமனே மக்களை ஏமாற்றுவதிலே எனக்கு உடன்பாடு கிடையாது. இந்த அரசியல் போக்கில் சடுதியான மாற்றங்கள் ஏற்படுவதானது மாமூலான விடயமாகும். சிலர் இங்கிருந்து அங்கும்,இன்னும் சிலர் அங்கும் அவரவர் கொள்கை கோட்பாடுகளுக்கேற்ப மாறிக்கொள்வது, தேசியத்திலே பொதுவான விடயம். இவைகள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளுகின்ற அரசியல் வாதி நான் கிடையாது.

எனக்குறிய அமானிதமாக வழங்கப்பட்டுள்ள இந்தப்பதவியை சமூகத்திற்காக எப்படி பயன்படுத்தலாம் என சிந்திக்கின்ற ஒரு நேர்மையான போக்கு என்னிடம் உள்ளது. சில விடயங்களை இலகுவில் நிறைவேற்றமுடியும், இன்னும் சில விடயங்கள் கால தாமதம் ஆகும். இது எல்லாக்காலங்களிலும் நடக்கின்ற சமாச்சாரம். இந்த பிரதேசத்தில் கல்விக்காக அதிகம் குரல் கொடுக்கின்ற ஒரு அரசியல்வாதி நான் என்பதை இங்குள்ள உங்களுக்கு நன்றாக தெரியும். பாராளுமன்றத்திற்கு வெளியேயும், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் இதனை நான் அதிகமதிகமாக செய்துள்ளேன். நமது சமூகத்திற்காக தனியான கல்வி வலயத்தை பெற்றுக்கொடுப்பதில் நான் எடுத்துக்கொண்ட சிரத்தையும்,சிரம்மும் பற்றி இங்குள்ள பலர் அறிவார்கள். கடந்த நான்கு வருடங்களாக முதலாம் இடம் வகித்த அந்தக் கல்வி வலயம் இம்முறை தேசியத்திலே ஏழாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது பற்றி இங்குள்ள கல்விமான்கள், புத்தி ஜீவிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். எதிர் காலத்தில் இன்னும் எவ்வளவு தூரம் செல்லுமோ என்ற நியாயமான கவலை எனக்கு இப்போது இருக்கிறது.

நமது சமூகத்தில் நன்றி உணர்வு மிகவும் குறைந்து வருவதை நான் அவதானித்து வருகிறேன். ஒருவரிடம் ஒரு விடயத்தை பெற்றுக்கொண்டு, இன்னொரு விடயம் கிடைக்கவில்லை என்பதற்காக அல்லது அது கிடைப்பதில் ஏற்படுகின்ற தாமதத்திற்காக, பிழையாக விமர்சிக்கின்ற அல்லது நன்றி மறந்த போக்கில் நடந்து கொள்கின்ற நிலவரம். இது ஒரு நல்ல ஆரோக்கியமான, பாராட்டத்தக்க பண்பாக அங்கீகரிக்க முடியாது. இந்த நிலைகளில் இருந்து நாம் மாற்றவேண்டும்.

இப்போது எந்த அபிவிருத்தி பணியும் நடைபெறவில்லை என சிலர் அங்கலாய்கிறார்கள். அவர்களுக்கு எனது பதில் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இந்த நல்லாட்சி மீது நம்பிக்கை வையுங்கள். நினைத்த மாத்திரத்தில் எதனையும் சாதிக்க முடியாது. நல்லது நடக்கும் எனக்கூறினார் .
இந்நிகழ்வில், பிரதியமைச்சரின் இணைப்பாளர் லத்தீப் ஹாஜியார்,ஏறாவூர் பிரதேச செயலாளர்  ஹனீபா, சமூக நிறுவனங்களின் தலைவர்களும் மற்றும்  பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்
கிழக்கின் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் வேண்டும். #lka கிழக்கின் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் வேண்டும். #lka Reviewed by Madawala News on 7/28/2016 12:45:00 AM Rating: 5