Accaddemy

மக்கள் மீதான வரி விதிப்பை மேலும் குறைபோம். #lka



சில்­லறை மற்றும் மொத்த வியா­பா­ரிகள் உரிய முறையில் வரி செலுத்­தினால் மேலும் வரி விதிப்­பினை குறைப்­பதில் பிரச்­சினை இல்லை.

எனினும் நுகர்­வோ­ருக்கு பாதிப்­புகள் ஏற்­ப­டாத வகையில் வரி செலுத்­து­வதில் இல­கு­வான முறைமையைக் கொண்டு வரு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தாக என நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.


வரி விதிப்பில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற திருத்­தங்கள் தொடர்பில் இன்னும் சில நாட்­களில் பூரண விளக்­க­மொன்றை நாம் செய்வோம். இலங்கை மக்­களை வரி விதிப்­பி­லி­ருந்து பாது­காப்­பதே எமது நோக்­க­மா கும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

வற் ­வரி தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் வர்த்­தக சங்­கத்­தினர் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதன் பின்னர் நிதி அமைச்சில் நேற்று ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

வற்­ வரி தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் வர்த்­தக சங்­கத்­தினர் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தோம். இதன்­போது 90 வீத­மான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கி­யுள்ளோம்.

வரி விதிப்பில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற திருத்­தங்கள் தொடர்பில் இன்னும் சில நாட்­களில் பூரண விளக்­க­மொன்றை நாம் செய்வோம்.

இலங்கை மக்­களை வரி விதிப்­பி­லி­ருந்து பாது­காப்­பதே எமது நோக்­க­மா கும். வரி விதிப்­பினை 49 சத­வீ­தத்­த­ிலி­ருந்து 37 ஆக குறைத்­துள்ளோம்.

நாம் மேலும் குறைக்க திட்­ட­மிட்­டுள்ளோம். இதன்­படி சில்­லறை மற்றும் மொத்த வியா­பா­ரிகள் உரிய முறையில் வரி செலுத்­தினால் மேலும் வரி விதிப்­பினை குறைப்­பதில் பிரச்­சினை இல்லை.

அத்­துடன் நுகர்வோருக்கு பாதிப்­புகள் ஏற்­ப­டாத வகையில் வரி செலுத்­து­வதில் இல­கு­வான முறைமையை கொண்டு வருவோம்.

அரசாங்கம் வரி அறவிடவே கூடாது என்ற மக்களின் மன நிலைமையை மாற்றவேண்டும். அரசை முன்னெடுத்து செல்வதற்கு வரி விதிப்பு அவசியமாகும் என்றார்.
மக்கள் மீதான வரி விதிப்பை மேலும் குறைபோம். #lka மக்கள் மீதான வரி விதிப்பை மேலும் குறைபோம். #lka Reviewed by Madawala News on 7/05/2016 09:51:00 AM Rating: 5