Kidny

Kidny

பத்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­லின் விலை குறையும். #lka(ப.பன்­னீர்­செல்வம்)

நாட்டில் பத்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்கு அரசு மானியம் வழங்­க­வுள்­ளது. இது தொடர்­பான விசேட வர்த்த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது என்று அர­சாங்கம் அறி­வித்­தது.

நாட்டின் தலை­வி­தியை தனி­யொரு குடும்பம் தீர்­மா­னிக்கும் யுகத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்டு மக்­களின் தேவை­களை நிறை­வேற்றும் நெகி
ழ்வுத்தன்­மை­யான ஆட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்றும் அர­சாங்கம் தெரி­வித்­தது.

அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை அறி­விக்கும் வாராந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று புதன்­ கி­ழமை அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதன்போதே அர­சாங்கம் இந்த அறி­விப்பை
வெளி­யிட்­டது.

இங்கு அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ளரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான டாக்டர் ராஜித சேனா­ரத்ன குறிப்­பி­டு­கையில்
கடந்த காலங்­களில் நாட்டின் தலை­வி­தியை தனி­யொரு குடும்­பமே தீர்­மா­னித்­தது. ஆனால் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆட்­சியில் குடும்ப ஆதிக்கம் கிடை­யாது.

மக்­களின் கோரிக்­கை­க­ளுக்கு செவி­ம­டுத்து நெகிழ்வுத் தன்­மை­யுடன் தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளும் அர­சாங்­கமே தற்­போது ஆட்­சியில் உள்­ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் எவ்­வ­ளவு தொகைக் கடன் வாங்­கி­னார்கள் என்­பதை கண்­டு­பி­டிப்­ப­தற்கும் பல காலங்கள் கடந்­தன.

மக்கள் வங்கி, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி என உள்ளூர் வங்­கி­களில் அதிக வட்­டிக்கு கடன் பெறப்­பட்­டது.

இக்­க­டன்கள் கணக்கில் பதி­யப்­ப­ட­வில்லை. முன்னாள் நிதி­ய­மைச்சின் செய­லாளர் பி.பி. ஜய­சுந்­தர அனைத்­தையும் நூற்­பந்தைப் போன்று சிக்­க­லாக்­கி­யி­ருந்தார்.

இதனை அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவே ஏற்­றுக்­கொண்டார்.
அன்று நூற்­றுக்கு 96 வீதம் கடன் வாங்­கி­யுள்­ளனர்.

அந்தக் கடனை திருப்பிச் செலுத்­து­வ­தற்கு தற்­போ­தைய அரச வரு­மானம் போது­மா­ன­தாக இல்லை.

எனவே இன்று எமது அரசு ஆசிய அபி­வி­ருத்தி வங்கி, உலக வங்­கி­யிடம் கடன்­களை கேட்­டுள்­ளது. அக்­க­டன்கள் கிடைக்­கப்­பெ­ற­வுள்­ளன. பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு நாம் படிப்­ப­டி­யாக தீர்­வுகள் பெற்­றுக்­கொள்வோம்.

இன்று ஒரு சிலர் வற்­வ­ரியை பயன்­ப­டுத்தி இன்­றைய ஆட்­சியை கவிழ்க்க முனை­கின்­றனர். அந்தக் கனவு ஒரு போதும் நிறை­வேறப் போவ­தில்லை.
இவ்­வ­ருட இறு­திக்குள் அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலைகள் அனைத்தும் குறைக்­கப்­பட்டு மக்­களின் நலன்­பு­ரிகள் அதி­க­ரிக்­கப்­படும்.

கடந்த காலத்தில் நாட்டில் தீர்­மா­னங்­களை தனி­யொரு குடும்­பமே தீர்­மா­னித்­தது. இன்று அந்த யுகத்­திற்கு முடிவு கட்­டப்­பட்­டுள்­ள­தோடு அர­சாங்­கமும் அமைச்­ச­ர­வையும் இணைந்தே நாட்­டுக்­கா­கவும் மக்­க­ளுக்­கா­கவும் தீர்­மா­னங்­களை எடுக்­கின்­றது.

ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஜன­நா­யக ரீதியில் கேள்விக் கேட்­ப­தற்கும் உரிமை இருக்­க­வில்லை. இன்று அந்­நிலை மாறி­யுள்­ளது. மக்கள் ஆட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

எனவே குழப்­ப­ம­டைய வேண்டாம். அமை­தி­யா­யி­ருங்கள். அனைத்தும் நல்ல படி­யாக நடக்கும் என்றார்.

அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க குறிப்­பி­டு­கையில்
பத்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலைகள் குறைக்­கப்­பட்டு அவற்­றிற்கு மானியம் வழங்க அரசு தீர்­மானம் எடுத்­துள்­ளது. இது தொடர்­பாக விரைவில் அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­படும்.

நாட்டில் சில குழுக்கள் வற்­வரி தொடர்பில் பிழை­யான பொய்­யான பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு மக்­களை பிழை­யாக திசை திருப்­பு­கின்­றன.
இதன் பின்­ன­ணியில் அரசு கவிழ்ப்பு சதித்­திட்டம் இருக்­கி­றதா? என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்கோ பொது மக்களின் போக்குவரத்து சேவைகளுக்கோ வற்வரி அறவிடப்படுவதில்லை.
இவ்வரி தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

இதற்கமைய வற்வரி தொடர்பில் கவனம் செலுத்த விசேட அமைச்சர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றார்.


பத்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­லின் விலை குறையும். #lka  பத்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­லின் விலை குறையும். #lka Reviewed by Madawala News on 7/07/2016 12:00:00 PM Rating: 5