Tuesday, July 12, 2016

இலங்கை முஸ்லிம்களே ... இது உங்களுக்கு.

Published by Madawala News on Tuesday, July 12, 2016  | 
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மிக தொன்மை வாய்ந்தது. இன்று இலங்கையில் சுமார் 10% முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.இலங்கையில் இரண்டாவது சிறுபான்மை சமூகமாக காணப்படுகின்ற முஸ்லிம்கள் மன்னர் ஆட்சி முதல் இன்றுவரை சிங்கள,தமிழ் சமூகங்களுடன் இன நல்லுறவை பேணிவருகின்றது.எனினும் இன்று சமூகத்தில் உருவேடுத்துள்ள பொதுபல சேனா,சிங்கள உறுமய போன்ற இனவாத அமைப்புக்கள் சமூக புரிந்துணர்வினையும்,ஒருமைபாட்டினையும் சீர்குலைக்கும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.மார்க்க கிரிகைகளையும்,கலாசார விழுமியங்களையும் கேவலப்படுத்துவதோடு பகிரங்கமாக எதிர்த்துவருகின்றது.

இவர்களின் செயற்பாடுகள் முஸ்லிம்கள் மீதான இன அடக்குமுறையினை தோற்றுவிகின்றது.இதன் காரணமாக சிறுபான்மை முஸ்லிம் சமூகம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.முஸ்லிம் பளிவாசல்கள் பகிரங்கமாக தாக்கப்படுகிறது, ஹலால் உணவு பிரச்சினைஅகில இலங்கை ஜமயத்துல் உலமா சபையினை தீவிரவாதியாக சித்தரித்தது.இந்த நாட்டின் சிங்கள அமைச்சர்களில் ஒருவரான பாட்டலி சம்பிக்க ரணவக்க அண்மையில் தெரிவித்த கருத்தானது “தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஆயுதத்தால் செய்ய நினைத்தவற்றை இன்று அகில இலங்கை ஜமயத்துல் உலமா சபை ஹலால் மூலம் செய்ய முயற்சிக்கின்றது. முழு நாட்டையும், உற்பத்திகளையும் இஸ்லாமிய மயப்படுத்த முயற்சிக்கிறது”.பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களை தீவிரவாதிகலென்றும்,திருடிகலென்றும் கூறி முஸ்லிம்களின் ஆடை கலாசாரத்தினை கேவலப்படுத்தினார்.

அண்மையில் கண்டி பெரிய பள்ளிவாசல் மினாராவின்  நிர்மான பணிகளுக்கு எதிராக ஆர்பாட்டம் செய்ததன் ஊடாக அதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த வாரம் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தில் பள்ளிவாயல் தாக்கபட்டது.இவ்வாறு இன்று எத்தனையோ சம்பவங்கள் நாடளாவிய ரீதியல் நடைபெறுகின்றது.இறுதில் பொதுபல சேனா அமைப்புடன் இணைத்து சிங்கள ராவய அமைப்பு குர்ஆன் தீவிரவாதத்தையே போதிப்பதாக கூறி இலங்கையில் குர்ஆன் தடை செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றது.


இதனை விடயங்களும் நாம் அன்றாடம் செய்திகளாக அறிந்துகொண்டிருக்கிறோம்.வெறுமனே செய்திகளின் தலைப்பினை மாத்திரம் வாசிக்கும் சமூகமாக மாறிவிட்டோம்.முஸ்லிம் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் பாரதுரம் இன்னும் எமது சமூகம் உணரவில்லை. இதன் விளைவுகள் எதிர்கால முஸ்லிம் சந்ததியினரை அடிமைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.கல்வி நடவடிக்கைகளிலும், அரசியலாக செயப்படுகளிலும்,முஸ்லிம் கலாசரத்தினை வெளிப்படுத்துவதிலும்,சமூக ஒற்றுமையை கட்டியெழுப்புவதிலும் முஸ்லிம் சமூகம் ஏன்? பின்னடைதுள்ளது.


இன்று முஸ்லிம்கள் கல்வி நடவடிக்கைகளில் பின்னடைதுள்ளதுள்ளமைக்கு காரணம் முஸ்லிம் இளைஞர்,யுவதிகளுடைய சிந்தனைகள் திசை திருப்பப்படுவிட்டன. நவீன தொலைத்தொடர்பாடல் வளர்ச்சி உறவுகளுக்கிடையில் விரிசளை உருவாக்கி முகம் தெரியாத உறவுகள் மீதான மோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.முஸ்லிம் மாணவர்களுக்கு அரசாங்க பாடசாலை கல்வியில் ஆர்வம் குறைத்து,தனியார் கல்வி நிர்வனங்களில் பணத்தினை செலவழித்து வேடிக்கை,விநோதங்களில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்கலைகழகளுக்கான முஸ்லிம் மாணவர்களின் நுழைவு வீதம் குறைவடைந்து செல்கின்றது.முஸ்லிம் சமூகத்தை கட்டியெழுப்புவாதக்கான படித்த சமூகம் அழிந்துகொண்டிருக்கின்றது.


அரசியலாக செயப்படுகளிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில் ஒற்றுமை, இணக்கப்பாடு காணப்படுவதில்லை. அரசியல் காட்சிகளினாலும், கொள்கை ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் வேறுபட்டுள்ளனர். தமது சுயலாபங்களுக்காக தனது சமூகத்தினை காட்டிக்கொடுக்கின்றனர். அரசியல் மேடைகளில் ஒருவரை ஒருவர் தரக்குறைவாகப் பேசிக்கொள்கின்றனர். தேர்தல் காலங்களில் வீடு தேடி வரும் எமது பிரதிநிதிகள், பிரச்சினைகளின் போது மௌனம் காக்கின்றனர் ஏன்?அற்ப அரசியல் இலபாத்துக்காக.
இன்று முஸ்லிகள் இஸ்லாமிய கலாசாரத்தினை வெளிக்காடுவதில் வெக்கப்படுகின்றனர்.அதன் மகிமையினை உணராமல். அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் போதைபொருள் பாவனைக்கு அடிமையாகிவிட்டனர். முஸ்லிம் பெண்கள் நவீன ஆடை கலாசாரம் என்ற பெயரில் அநாகரிகம சுற்றி திரிகின்றனர்.ஆபாச விடயங்களில் எமது இளைஞர்,யுவதிகள் அடிமையாகிவிட்டனர். பெற்றோர் தமது பிள்ளைகளை வழிநடத்துவதுமில்லை, பிள்ளைகள் பெற்றோரை மதிப்பதும்மில்லை.
தலமைத்துவ மோகம்,பதவி வெறி,அதிகாரத்தினை பெற வேண்டுமென்ற ஆசை முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையினை இல்லாமலாக்கிவிட்டது. இவை இன்று அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை காணப்படுகின்றது.


முஸ்லிம் சமூகம் உறங்கியது போதும், விழித்தெழும் நேரம் வந்து விட்டது. முஸ்லிம் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆயுதமேந்தி போர் செய்வதின் மூலம் சமூகத்தினை பாதுகாக்க முடியாது. முஸ்லிகள் கல்வியில் முன்னேற வேண்டும். படித்த சமூகமாக மாற வேண்டும்.அணைத்து துறைகளிலும் முஸ்லிம்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். முக்கியமாக ஊடக துறையில் முஸ்லிம்கள் அதிகமான பங்களிப்பினை செய்யவேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு கொள்கையில் ஒன்றுபட வேண்டும்.அற்ப அரசியல் இலபாங்களை ஓரம்கட்டிவிட்டு எமது சமூகத்துக்காக அர்பணிப்புடன் செயப்படவேண்டும். முஸ்லிம் கலாசாரத்தினையும், விழுமியங்களையும் வெளிப்படுத்துவதன் ஊடக அணிய சமூகத்தினை கவரவேண்டும். தகுதியானவர்கள் தலைவர்களாக தெரிவு செயப்படு சமூகம் சரியான பாதையில் வழிநடத்தப்பட வேண்டும்.

சித்தித்து செயப்பபடுவதின் ஊடக முஸ்லிம்களின் உரிமைகளையும் சுகந்திரத்தினையும் பாதுகாத்துக்கொள்ள எல்லாம் வல்ல இறைவன்  அருள் புரிவானாக.

எம்.எப்.எம் பாஹாத்,
இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகம்,
ஒலுவில்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top