Free Space

ஹனிபா மதனிக்கு அக்கரைப்பற்று மு.கா போராளி எப். அப்துல் குத்தூஸின் திறந்த மடல். m



அன்புள்ள ஹனிபா மதனி அவர்களே!

நீங்கள் எழுதிய கடிதம் ஒன்றை முழுமையாக எனக்கு வாசிக்கக் கிடைத்தது நேற்றுத்தான். வரலாற்றுப் புகழ்மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையை நினைவூட்டிஇ அப்படியான ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு தவிசாளர் பசீர் சேகு தாவூத்தையும் செயலாளர் ஹசனலியையும் இணைத்துக் கொண்டு கட்சியை வழிநடாத்துமாறு நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு அறிவுரை கூறியுள்ளீர்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி போன்று அடிக்கடி திறந்த மடல் எழுதும் உங்களின் மடலை காணாமல் ஏக்கத்தில் இருந்த எங்களுக்குஇ அதனைக் கண்டதும் நீங்கள் இன்னும் உங்கள் மரபில் மாறாது இருப்பதை உணர்ந்து கொண்டோம். உங்கள் மடல் வராத காலத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? உங்கள் மடல் ஏன் இவ்வளவு தாமதம்? என்ற ஆதங்கத்தில்இ பல இடங்களில் அலசிப் பார்த்தோம். நீங்கள் ஒலுவில் அமைப்பாளர்இ சாய்ந்தமருது அமைப்பாளர்இ மற்றும் சில ஊடகவியலாளர்கள் போன்றோரையும் இவர்களைப் போன்ற பலரையும்இ ஹசனலி அவர்களுக்கு சார்பாக திருப்புவதில் மிகுந்த பிரயத்தனம் எடுத்துக் கொண்டதில் உங்கள் காலம் செலவிடப்பட்டதால் உங்களுக்கு மடல் எழுத நேரமிருக்கவில்லை என்று அறியக் கிடைத்தது.

மேலும்இ நோன்பு திறப்பிக்கவென கவனமாகத் தெரிவு செய்தவர்களுக்கு மட்டும் அழைப்பிதல் அனுப்பிஇ அவர்களை ஹசனலிக்குச் சார்பானவர்களாக ஆக்கிக் கொள்வதற்கும்இ மேற்கூறிய ஊடகவியலாளர்களை தலைவர் றஊப் ஹக்கீமுக்கு எதிராக எழுத வைப்பதற்குமான சந்தர்ப்பத்தை நோன்பின் பேரால் உருவாக்கிக் கொண்டதில் உங்கள் நேரத்தை செலவிட்டதால் மடலுக்கு நேரமில்லாமல் இருந்திருக்கிறீர்கள். நோன்பு திறந்ததும் எல்லோரையும் அனுப்பிவிட்டுஇ ஹசனலியையும் இவ்வூடகவியலாளர்களையும் தனியாகச் சந்திக்க வைத்துஇ தலைவர் ஹக்கீமுக்கு எதிராக எழுதுவதற்குஇ ஹசனலி துணுக்குகள் கொடுக்க டாப்பர் வேலை பார்ப்பதில் உங்கள் காலம் கடந்திருக்கிறது.

சரிஇ காலம் இவ்வாறு கடந்ததுதான் கடந்ததுஇ கிடைத்த நேரத்தில் எழுதிய மடலிலாவது கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம். ஹுதைபிய்யா உடன்படிக்கையை குறிப்பிட்டுச் சொல்லும் போதுஇ இடம்இ பொருள்இ ஏவல் போன்ற விடயங்களில் கவனமாக இருந்திருக்கலாம். அதிலும்இ மதீனா சென்று ஓதிய நீங்கள்இ மதீனாவுக்கு வெளியே மக்காவுக்கு அருகில் ஹுதைபிய்யாவில் செய்யப்பட்ட ஒப்பந்தம்இ மதீனாவுக்கு வெளியில் வாழ்ந்த யாரோடு செய்யப்பட்டது என்பதை ஆழமாக சிந்தித்த பின்னர் உங்கள் மடலை வரைந்திருக்கலாம். அவ்வாறான கவனமில்லாமல் மடல் எழுதிஇ நீங்கள் ஹசனலிக்கு முண்டு கொடுப்பதில் அதிகம் அக்கறை எடுப்பதாகஇ உங்களை நீங்களே காட்டிக் கொடுத்து விட்டீர்கள்.

இனி விடயத்திற்கு வருவோம்இ ஹுதைபிய்யா உடன்படிக்கை மதீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும்; மக்காவிலே வாழ்ந்த இஸ்லாத்தின் எதிரிகளான குறைசிகளுக்குமிடையில் நடந்ததே தவிர;
1) மதீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும்; மதீனாவில் வாழ்ந்த  இஸ்லாத்தின் எதிரிகளுக்குமல்ல.
2) மதீனாவுக்குள் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும்; மதீனாவுக்குள் வாழ்ந்த முனாபிக்குகளுக்குமல்ல

இந்த இரண்டு அடிப்படை அம்சங்களையும் வைத்துப் பார்க்கும் போதுஇ நீங்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையை குறிப்பிட்டுக் காட்டி தலைவர் றஊப் ஹக்கீமைஇ ஹசனலியோடும் பசீரோடும் செய்யச் சொல்லும் ஒப்பந்தம் எந்த வகைக்குள் வருகிறது? என்பதை நிதானமாக யோசிக்காமல்இ உங்கள் பக்கசார்பு நிலையைக் காட்டி விட்டீர்கள் என்பதை நான் உங்களுக்கு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை மிகத்தெளிவாக மதீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும்; மக்காவிலே வாழ்ந்த இஸ்லாத்தின் எதிரிகளான குறைசிகளுக்குமிடையில் நடந்தது என்ற அடிப்படையில்இ முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வெளியே இருக்கும் அதாவுல்லாஇ ரிஷாத்இ ஹிஸ்புல்லாஇ அமீர் அலி போன்றோரோடு தலைவர் ஹக்கீம் ஒப்பந்தம் செய்து கொண்டால்இ அதனை ஹுதைபிய்யா ஒப்பந்ததைப் போன்ற ஒப்பந்தம் என்று கூறலாம்.

ஆனால்இ நீங்கள் ஒப்பந்தம் செய்யச் சொல்வதோ; நாங்களும் முஸ்லிம் காங்கிரஸ்தான் என்று இன்று வரைக் கூறிக் கொண்டுஇ ஊடகங்களில் தலைவருக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுக்களைக் கூறி அறிக்கைகளை விட்டுக்கொண்டுஇ கட்சியை அழிக்க  திரைமறைவில் சதி செய்வோரோடு என்பதை உங்களுக்கு குறித்துக் கூற விரும்புகிறேன். அதாவதுஇ மதீனாவுக்குள் இருந்து கொண்டு நாங்களும் முஸ்லிங்கள்தான் என கூறிக் கொண்டுஇ இஸ்லாத்தையும் அதன் தலைமையையும் அழிக்க சதி செய்து கொண்டிருந்த முனாபிக்குகளான அப்துல்லா இப்னு உபை போன்றவர்களின் குணத்தை ஒத்தவர்களோடு ஒப்பந்தம் செய்யச் சொல்கிறீர்கள்.

ஆகவேஇ முனாபிக்குகளோடு ஒப்பந்தம் செய்யச் சொல்லும் நீங்கள்இ எப்படி அதனை ஹுதைபிய்யா ஒப்பந்தத்தோடு ஒப்பிடுவீர்கள்? என்பதை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் முனாபிக்குகளோடு சார்ந்திருக்கிறீர்கள் என்பதற்காகஇ நீங்கள் கூறும் ஒப்பந்தம் ஹுதைபிய்யா உடன்படிக்கை போன்றதாக ஆகி விடுமா? முனாபிக் அப்துல்லா இப்னு உபையை அல்லாஹ் குர்ஆனில்இ அவன் இழிவுபடுத்தப்படுவான் என்று கூறி இழிவுதான் படுத்தினானே தவிரஇ அவனோடு ஒப்பந்தங்களைச் செய்ய சொல்லவில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?

எனவேஇ ஹனிபா மதனி அவர்களே! உங்கள் கருத்தை சொல்லும் போது இனியாவது கவனமாகச் சொல்லப் பாருங்கள். முனாபிக்குகளோடு ஒப்பந்தம் செய்யச் சொல்லி யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். தலைவர் ஹக்கீம் உங்களுக்கு தனது அமைச்சில் பதவியும் வாகனமும் தராத கோபத்தில்இ ஹசனலியோடும் பசீரோடும் அண்மைக்காலமாக நீங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் உறவின் ரசத்தில்இ இஸ்லாத்திற்கு தவறான அர்த்தங்களைக் கொடுக்க முன்வர வேண்டாம். இஸ்லாம் நெருப்பு. தீண்டினால் உங்களை அழித்து விடுமென்பதைக் கொண்டு உங்களுக்கு உபதேசம் செய்கிறேன்.
ஹனிபா மதனிக்கு அக்கரைப்பற்று மு.கா போராளி எப். அப்துல் குத்தூஸின் திறந்த மடல். m ஹனிபா மதனிக்கு அக்கரைப்பற்று மு.கா போராளி எப். அப்துல் குத்தூஸின் திறந்த மடல். m Reviewed by Madawala News on 7/30/2016 01:38:00 PM Rating: 5