விலகினார் கண்டி எம்.பி லொஹான் ரத்வத்த.. என்னையும் விலக்கவும் மகிந்தரும் கோரிக்கை. m



ஒன்றிணைந்த எதிரணியினரால் நேற்று வியாழக்கிழமை (07) நியமிக்கப்பட்ட அமைச்சரவையிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த விலகியுள்ளார்.

இவருக்கு, நகர அபிவிருத்தி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிழல் அமைச்சரவை தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என்றும் ஊடகங்கள் வாயிலாகவே தான் அதுபற்றி அறிந்துகொண்டதாகவும் ரத்வத்த எம்.பி தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பான அறிவிப்பை அவர், ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர் டலஸ் அலகப்பெருமவிடம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேற்படி நிழல் அமைச்சரவையிலிருந்து தன்னையும் நீக்கிவிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு, அந்த அமைச்சரவையின் ஊடாக, பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அமைச்சுக்களுக்குப் பதிலாக, கண்காணிப்பு எம்.பி.க்களை நியமிக்குமாறே, ஒன்றிணைந்த எதிரணிக்கு, மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் தவிர, நிழல் அமைச்சரவையொன்றை நியமிக்குமாறு அவர் அறிவுறுத்தவில்லை என்றும் கூறப்படுகின்றது .
விலகினார் கண்டி எம்.பி லொஹான் ரத்வத்த.. என்னையும் விலக்கவும் மகிந்தரும் கோரிக்கை. m விலகினார் கண்டி எம்.பி லொஹான் ரத்வத்த.. என்னையும் விலக்கவும் மகிந்தரும் கோரிக்கை. m Reviewed by Madawala News on 7/08/2016 01:31:00 PM Rating: 5